2025 ஆம் ஆண்டு தனி அரசாங்கத்தினை நிச்சயம் தோற்றுவிப்போம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்பட முடியும் என எதிர்கட்சியினர் குறிப்பிடுவது கழுத்தில் கயிறு மாட்டிக் கொள்வதற்கு ஒப்பானதாகும் என பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மாபலகம பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்படாலம் என்று ஐக்கிய தேசிய கட்சியினர் குறிப்பிடுவது பொருத்தமற்றதாகும். இரு வேறுப்பட்ட […]
இலங்கை செய்திகள்
நாளை உருவாகும் புதிய கூட்டணி
நாளை உருவாகும் புதிய கூட்டணி முன்னாள் வடமாகாண உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் புரிந்துணர்வு உடன்படிக்கை நாளை காலை கைச்சாத்திடப்படவுள்ளது. ரில்கோ ஹோட்டலில் நாளை காலை 10 தான் குறித்த உடன்படிகை கைச்சாதிடப்பட்ட பின்னர் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்திப்பார்கள். இந்த புதிய கூட்டணியில் தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்த் தேசியகட்சி, ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகிய கட்சிகள் இணைந்து கைச்சாத்திடவுள்ளன. […]
சீனாவுக்கான விமான சேவைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளது!
சீனாவுக்கான விமான சேவைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளது! நாளை முதல் சீனாவின் சில நகரங்களுக்கான விமான சேவைகளை மட்டுப்படுத்த ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, பீஜிங், ஷங்காய் மற்றும் கென்டன் ஆகிய நகரங்களுக்கான விமான சேவைகளை மட்டுப்படுத்த ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தீர்மானித்துள்ளது. அந்தவகையில் பீஜிங் விமான நிலையத்திற்கு நாளாந்தம் முன்னெடுக்கப்படும் 4 சேவைகள் இரண்டாக மட்டுப்படுத்தப்படவுள்ளது. அத்துடன் ஷங்காய் […]
கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம்!
கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம்! காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இரு பிரிவுகளாக இடம்பெறும் இந்தப் போராட்டத்தில் ஒரு தரப்பினர் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இலங்கையின் சுதந்திர தினமான இன்று (செவ்வாய்க்கிழமை) ‘வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி மறுக்கப்படும் நாட்டில் சுதந்திர தினம் எதற்கு என்ற கருத்தை முன்னிலைப்படுத்தி பதாகையை ஏற்தியவாறு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான காணாமல் […]
சுதந்திர தினத்தன்று: யாழ். பல்கலையில் பறக்கும் கறுப்பு கொடிகள்!
சுதந்திர தினத்தன்று: யாழ். பல்கலையில் பறக்கும் கறுப்பு கொடிகள்! யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன்பாக கறுப்பு கொடிகள் கட்டப்பட்டுள்ளன. இலங்கையின் 72வது சுதந்திர தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே பல்கலை வளாகத்தில் கறுப்பு கொடிகள் கட்டப்பட்டுள்ளன. அத்துடன் பதாதை ஒன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பாதாதையில், “ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலிருந்து இலங்கையின் பொறுப்புக்கூறல் விவகாரம் ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு மாற்றப்பட்டு அதன் […]
வெள்ளவத்தை குடியிருப்பில் தீ விபத்து!
வெள்ளவத்தை குடியிருப்பில் தீ விபத்து! வெள்ளவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருத்ரா மாவத்தையில் அமைந்துள்ள இரண்டு மாடி குடியிருப்பொன்றில் இன்று பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். பின்னர் பொலிஸார் கல்கிஸ்ஸ நகர சபையின் தீயணைப்பு பிரிவினருடன் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த அனர்த்தத்தில் சிக்கி வீட்டினுள் இருந்த 79 வயதுடைய முதியவர் ஒருவரே உயிரிழந்துள்ளார். இதேவேளை தீ பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் வெள்ளவத்தை […]
ஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி உத்தரவு!
ஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி உத்தரவு! இன்றையதினம் புதிய பாராளுமன்ற சபை அமர்வு ஆரம்பிக்கும் நிகழ்வுக்கு இராணுவ கௌரவ அணிவகுப்பு நிகழ்வுகளை நிகழ்த்த வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் உத்தரவிடப்பட்டுள்ளது. சாதாரண சம்பிரதாயத்திற்கு அமைய ஜனாதிபதி குதிரைப்படை வீரர்களுடன் பாராளுமன்றத்திற்கு சமூகமளிக்க இருந்த நிலையில் , கோட்டாபய ராஜபக்ஷ அதனையும் ரத்து செய்துள்ளார். இதேவேளை , புதிய பாராளுமன்ற சபையின் தொடக்க விழாவை எளிமையான முறையில் நடத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாகவும் […]
இன்று அதிகாரபூர்வமாக நியமனம் பெறும் சஜித்!
இன்று அதிகாரபூர்வமாக நியமனம் பெறும் சஜித்! ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசா இன்று அதிகாரப்பூர்வமாக பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் பதவிக்காக ஆரம்பத்தில் இருந்தே UNPயினுள் ஒரு இழுபறி நிலவிவந்த நிலையில், சஜித் பிரேமதாசவை அப் பதவிக்கு நியமிக்க பெரும்பாலானோர் விருப்பம் தெரிவித்ததை அடுத்து அவரை இந்தப் பதவிக்கு நியமிக்க அனைவரும் ஒப்புக்கொண்டனர். இதற்கமைய புதிய பாராளுமன்ற அமர்வு ஆரம்பிக்கப்படும் இன்றைய […]
டக்ளஸ் தேவானந்தா அவசர கடிதம் !
டக்ளஸ் தேவானந்தா அவசர கடிதம் ! மணல் ஏற்றிச் செல்வதற்கான வீதி அனுமதிப் பத்திரங்களை இரத்து செய்யும் அமைச்சரவையின் தற்காலிக தீர்மானத்தை துஷ்பிரயோகம் செய்து, மக்களின் இயல்பு வாழ்கைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படுவோரின் செயற்பாடுகள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என கடற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் காணி அபிவிருத்தி, சுற்றாடல் மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் […]
கோட்டபாய விதித்துள்ள மற்றுமொரு அதிரடித் தடை!
கோட்டபாய விதித்துள்ள மற்றுமொரு அதிரடித் தடை! ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் நாளாந்தம் இடம்பெறும் கலந்துரையாடல்களில் பிளாஸ்டிக் குடிதண்ணீர்ப் போத்தல்களைப் பயன்படுத்துவதை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் பணிப்பில் தடை செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஏனைய அரச நிறுவனங்களும் இந்த நடைமுறையைப் பின்னபற்ற வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜனாதிபதி செயலகத்தில் நாளாந்தம் இடம்பெறும் கலந்துரையாடல்கள் மற்றும் சந்திப்புகளில் கலந்துகொள்பவர்களின் பாவனைக்காக பிளாஸ்டிக் குடிதண்ணீர்ப் […]





