சமூகவலைத்தளங்களில் போலி தகவல்கள் பரப்புவதை தவிர்ப்பதற்காக பொலிஸ் தலைமையகத்தினால் விசேட பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். சமூக வலைத்தளங்கள் ஊடாக போலியான தகவல்களை பரப்புவதன் காரணமாக சமூகங்களுக்கிடையில் வன்முறை சம்பவங்கள் இடம்பெறுகின்றன. சிலாபத்தில் இடம்பெற்ற சம்பவம் இதற்கு சிறந்த உதாரணமாகும். இவ்வாறான சமூகவலைத்தளங்களில் போலி தகவல்கள் பரப்புவதை தவிர்ப்பதற்காக பொலிஸ் தலைமையகத்தினால் விஷேட பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இப்பிரிவானது சமூக வலைத்தளங்கள் ஊடாக போலியான […]
இலங்கை செய்திகள்
ஏறாவூரில் விசேட அதிரடிப்படை – பொலிசாரும் குவிப்பு
ஏறாவூர் காளிகோவில் வீதியில் (காலாச்சேனை) யில் ஆட்டிரச்சிக்கடை அலியின் மருமகனின் கார் தீக்கிறை முஸ்லீம் இருகுழுக்கள் பிரச்சனை காரணமாக இனவாதிகளினால் நாடத்தப்பட்டது. வீட்டுக்கு பின்புறத்தால் இரண்டு பேர் வந்து பெற்றோல் குண்டு வீசி இருக்கின்றனர் காரை நோக்கி வீட்டின் உரிமையாளர் எழுந்ததும் இனவாதிகள் தமிழ் மக்கள் குடியிருக்கும் பகுதியை நோக்கி தப்பி ஓடிஉள்ளனர். தற்போது சம்பவ இடத்திற்கு விசேட அதிரடிப்படையினரும் பொலிசாரும் குவிக்கப்பட்டுல்லார்கள் – ஏறாவூரில் எல்லைப்புறங்களில் இருக்கும் தமிழர்கள் […]
விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடித்துள்ள இந்தியா!
தமிழீழ விடுதலைப்புலிகள் மீது ஏற்கனவே இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தடையை மேலும் நீடிப்பதாக இந்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,தமிழீழ விடுதலைப்புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டடுள்ளதாக இந்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த தடை நீடிப்பு தொடர்பில் மேலும் தெரியவருகையில், விடுதலைப்புலிகளின் ஆதரவு இயக்கங்கள் தனி ஈழம் அமைப்பதற்கான முயற்சிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றன எனவும், தமிழகத்தில் […]
வற்றாப்பளை அம்மனுக்கு- உப்பு நீரில் விளக்கெரிக்கும் அற்புத நிகழ்வு!!
முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த விசாக பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு உப்பு நீரில் விளக்கேற்ற தீர்த்தம் எடுக்கும் அற்புத நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றது. காட்டாவிநாயகர் ஆலயத்தில் இருந்து தீர்த்தம் எடுக்கும் புனித நிகழ்வுக்கு தீர்த்தக்குடம் புறப்பட்டு மாலை 06:00 க்கு புனித தீர்த்தக்கரையில் தீர்த்தமெடுக்கப்பட்டது. நள்ளிரவு 12:00 மணிக்கு அம்மன் சந்நிதானத்தில் மடை பரப்பி உப்பு நீரில் விளக்கெரிக்கப்பட்டது.
தீவிரவாதத்தை அழிக்க இலங்கைக்குள் குதிக்ககும் அதி முக்கிய நாடு?
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை அடுத்து சிறிலங்காவில் எழுந்துள்ள தற்போதைய சூழ்நிலைகள் தொடர்பாக, ரஷ்யாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஜெனரல் ஒலேக் சைரோமோலோரோவ்வுடன், சிறிலங்கா தூதுவர் தயான் ஜயதிலக, பேச்சு நடத்தியுள்ளார். உள்நாட்டு மற்றும் அனைத்துலக தீவிரவாதம் தொடர்பாக இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்தச் சந்தப்பின் போது, சிறிலங்காவில் ஏப்ரல் 21ஆம் நாள் நடந்த குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக இரங்கலைத் தெரிவித்த ரஷ்யாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர், இந்த தீவிரவாத செயற்பாடுகளையும் […]
இலங்கையில் தொடரும் பதற்றம்! மூன்று முஸ்லிம்கள் பலி? பலர் படுகாயம்…
கடந்த நாற்பத்தெட்டு மணிநேரங்களில் இடம்பெற்ற கலவரத்தில் மூன்று முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளதாக முதற்கட்டத் தகவல் கிடைத்துள்ளது. பலர் படுகாயமடைந்திருப்பதுடன் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென அஞ்சப்படுகிறது. குருநாகல் மாவட்டத்திலுள்ள முஸ்லிம் கிராமங்களில் சிங்களக் காடையர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட கலவரத்தில் ஏராளமான மக்களின் வீடுகளும் வியாபார நிலையங்களும் வாகனங்களும் அழிக்கப்பட்டுள்ளதாக ஸ்தலத்திலிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. இதேவேளை இராணுவத்தினரின் தாக்குதலில் சில குண்டர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. எவ்வாறாயினும் குறித்த பகுதிகளில் ஊராடங்கு தொடர்ந்தும் அமுலில் […]
வன்முறையில் ஈடுபடுவோரை சுட்டுத் தள்ள உத்தரவிடுங்கள்
பிரதமர் தலைமையில் இன்று மாலை நடைபெற்ற அவசர பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் ரிஷாட், வன்முறையில் ஈடுபடுவோரை சுட்டுத் தள்ளுங்கள் என உரத்த குரலில் சத்தமிட்டுள்ளார். இதனை அடுத்து ஏற்பட்ட பரபரப்பை அவதானித்த பிரதமர், அதற்கான உத்தரவை உடன் பிறப்பித்தார். குருநாகல் மாவட்டத்தில் தற்போது வன்செயல் உச்சத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமரின் உத்தரவை அடுத்து வன்முறையாளர்களை கண்ட இடத்தில் சுடுமாறு இராணுவத் தளபதி தற்போது உத்தரவிட்டுள்ளார்.
வவுனியாவில் மீட்கப்பட்ட ரி56 ரக துப்பாக்கி வகைகள்
வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவிலுள்ள சிவபுரம் காட்டுப்பகுதியிலிருந்து ரி 56 ரக துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை அப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட காட்டு பகுதியிலிருந்தே ரி 56 ரக துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.இதையடுத்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்குச் சென்ற விஷேட அதிரடிப்படையின் அதனை மீட்பதற்குரிய நடவடிக்கையினை பொலிசாருடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். முன்னர் விடுதலைப் புலிகள் குறித்த துப்பாக்கியைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று பொலிஸார் […]
மஹிந்தவை திட்டிக் கொண்டிருந்தால் எல்லா பிரச்சனையும் தீராது!
நாட்டில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலுடன் அரசியல்வாதிகள் தொடர்பு என ஜனாதிபதியும் பிரதமரும் கூறுகின்றார்கள். இதற்கு தொடர்புடைய யாருமே அந்த பொறுப்பில் இருந்து விடுபட முடியாது. முதலில் இருவரும் பதவியில் இருந்து விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பாக நேற்று (12) மட்டக்களப்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி மட்டு அமைப்பாளர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் நாமல் ராஜபக்ஷ கலந்து […]
இஸ்லாமிய தீவிரவாதிகளின் கொழும்பு குண்டுத்தாக்குதலின் எதிரொலி!!
இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தனர் மத தீவிரவாதத்தை ஊக்குவிக்கின்றனர் என்ற காரணங்களை கூறி சிங்கள மக்கள் கின்னியம மஸ்ஜிதுல் அப்ரார் பள்ளிவாசலை தகர்த்தனர். மேலும்… குருநாகல்- பூவெல்ல பிரதேச தக்கியாவும் சிங்கள மக்களால் அடித்து நொறுக்கப்பட்டது. இஸ்லாமியர்களின் புனித நூல்களும் எரியூட்டப்பட்டது. மேலும் வன்முறை தொடராதிருக்க இலங்கை அரசாங்கம் சமூக வலைதளங்களுக்கு தடை விதித்துள்ளது. எனினும் எந்த பள்ளிவாசல் எப்போது தாக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுவதாக அங்கிருக்கும் நபர்கள் கூறுகின்றனர். […]





