இலங்கை செய்திகள்

எம்.கே.சிவாஜிலிங்கம்

சுமந்திரன் கொலை முயற்சியின் உண்மை என்ன?

சுமந்திரன் கொலை முயற்சியின் உண்மை என்ன?   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் கொலை முயற்சி தொடர்பில் யார் யார்? கைது செய்யப்பட்டார்கள், என்ன ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறித்து, வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். சுமந்திரனின் கொலை முயற்சி குறித்த உண்மை நிலைமைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவோ அல்லது பொறுப்பு வாய்ந்த அமைச்சரோ, யாரரேனும் நாடாளுமன்றில் அறிவிக்க வேண்டும் […]

அமைச்சர் ருவன் விஜேவர்தன

இனவாதத்தை தூண்டும் வகையில் மஹிந்த கருத்துக்களை பரப்புகின்றார்

இனவாதத்தை தூண்டும் வகையில் மஹிந்த கருத்துக்களை பரப்புகின்றார்   நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லையென ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியினர் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக தெரிவிக்கும் கருத்துக்கள் ஆதாரமற்றவை என அவர் நேற்றைய தினம் பியமகவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றுகையில் வலியுறுத்தியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாட்டில் இனவாதத்தை தூண்டும் வகையில் கருத்துக்களை பரப்பி […]

தகவல் அறியும் உரிமைச் சட்டம்

அமுலுக்கு வருகிறது தகவல் அறியும் உரிமைச் சட்டம்

அமுலுக்கு வருகிறது தகவல் அறியும் உரிமைச் சட்டம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் இன்றுமுதல் அமுலுக்கு வருகிறது. அரசாங்கத்தின் தேர்தல் உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் இன்று முதல் அந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். இதன்மூலம் அரசாங்கம் நிதியை பயன்படுத்தும் விதம் பற்றியும், தீர்மானங்களை மேற்கொள்ளும் விதம் தொடர்பாகவும் மக்கள் தகவல்களை அறிந்து கொள்ள முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். அரசாங்கம் […]

கோவிந்தம் கருணாகரம்

கோவிந்தம் கருணாகரம் : தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்

தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் : கோவிந்தம் கருணாகரம்   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இராஜதந்திர ரீதியான போராட்டத்திற்கு தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் வலியுறுத்தியுள்ளார். தமிழர்கள் மீண்டும் ஒற்றுமையீனத்தைக் காட்டுவோமாக இருந்தால், அகிம்சை மற்றும் ஆயுத ரீதியான போராட்டங்களில் போராடி உயிர்நீத்த உயிர்களுக்கு துரோகம் செய்வதாக அர்த்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு – எருவில் […]

புதிய அரசமைப்பிற்கே முதலிடம்

புதிய அரசமைப்பிற்கே முதலிடம்: ஜனாதிபதி

புதிய அரசமைப்பிற்கே முதலிடம்: ஜனாதிபதி   நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணியின் உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த கலந்துரையாடல் கடந்த 30 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளதாக கலந்தாய்வுச் செயலணியின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட மனோரி முத்தெட்டுவேகம தலைமையிலான 11 பேர் கொண்ட நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணி நாடு முழுவதிலும் கலந்தாலோசனைகளை நடத்தி அறிக்கை ஒன்றை தயாரித்து […]

மஹிஷினி கொலன்னே

அமெரிக்காவிற்குள் நுழைய ஸ்ரீலங்கர்களுக்கு அனுமதி

அமெரிக்காவிற்குள் நுழைய ஸ்ரீலங்கர்களுக்கு அனுமதி   அமெரிக்காவுக்குள் நுழைய ஸ்ரீலங்கா பிரஜைகளுக்கு தடை விதிக்கப்படவில்லை என கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கர்கள் உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்த 71 பேர் நியூயோர்க் ஜோன் எவ் கெனடி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியானதை தொடர்ந்தே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவினுள் நுழைவதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ள 7 நாடுகளில் சிறிலங்கா உள்ளடங்கவில்லை என கொழும்பில் உள்ள […]

குமார் குணரட்ணம்

குமார் குணரத்னத்திற்கு இலங்கை பிராஜாவுரிமை

குமார் குணரத்னத்திற்கு இலங்கை பிராஜாவுரிமை   முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் செயற்பாட்டாளர் குமார் குணரட்னத்திற்கு ஸ்ரீலங்கா பிராஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளது. பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில் அவருக்கான பிராஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. ஸ்ரீலங்காவின் குடிவரவு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி கேகாலை பொலிஸாரால் குமார் குணரட்னம் கைதுசெய்யப்பட்டிருந்தார். […]

பெண்களின் அரசியல் பங்களிப்பு : யாழில் கையெழுத்து வேட்டை

பெண்களின் அரசியல் பங்களிப்பு : யாழில் கையெழுத்து வேட்டை   அரசியலில் பெண்களின் பங்களிப்பினை வலுப்படுத்தும் நோக்கில் கையெழுத்து பெறும் நிகழ்வு நேற்று (புதன்கிழமை) யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. குறித்த நிகழ்வு தேசத்திற்கான பெண்களின் உரிமைக் குரல் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றது. யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பெண்கள் பலரும் இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தங்களை கையெழுத்தினை பதிவு செய்தனர். கடந்த காலங்களில் அரசியலில் […]

வித்தியா படுகொலை: பத்தாவது சந்தேக நபர் தொடர்ந்தும் விசாரணை

வித்தியா படுகொலை: பத்தாவது சந்தேக நபர் தொடர்ந்தும் விசாரணை   யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை தொடர்பான வழக்கில் பத்தாவது சந்தேக நபரை தொடர்ந்தும் விசாரணை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு வருட காலத்திற்கு பத்தாவது சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு யாழ். மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான வழக்கு இன்று யாழ். மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, அரச […]

சிவாஜிலிங்கம்

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படவில்லை

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படவில்லை   ஸ்ரீலங்காவில் நல்லாட்சி ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படவில்லை என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்கள் மீதான மோசமான திணிப்புக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக பெப்ரவரி 4 ஆம் திகதி யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்காவின் தேசியக் கொடியை […]