இலங்கை செய்திகள்

சிவசக்தி ஆனந்தன்

காணிகளை விடுவியுங்கள்: சிவசக்தி ஆனந்தன்

காணிகளை விடுவியுங்கள்: சிவசக்தி ஆனந்தன் முல்லைத்தீவு கேப்பாபிலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார். முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள், கடந்த 25.ஆம் திகதி தமது காணிகளை விடுவிப்பதாக அரசாங்க […]

ஜெனிவாவில் இலங்கை மங்கள சமரவீர

ஜெனிவாவில் இலங்கை சிறப்பு அறிக்கை – மங்கள சமரவீர

ஜெனிவாவில் இலங்கை சிறப்பு அறிக்கை – மங்கள சமரவீர ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா அரசாங்கம் சிறப்பு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளது. ஜெனிவாவில் எதிர்வரும் 27 ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. இதன்போது சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சிறப்பு அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. […]

சுதந்திரதின நிகழ்வில்

சுதந்திரதின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம்

சுதந்திரதின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் ஸ்ரீலங்காவின் இந்த வருட சுதந்திரதின நிகழ்விலும் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது. மிக நீண்ட தசாப்தங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் நடைபெற்ற சுதந்திரதின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதை அடுத்து தென்னிலங்கை அரசியல் களத்தில் பெரும் குழப்பகரமான நிலை ஏற்பட்டது. ரணில் – மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக பொதுபல சேனா, சிங்ஹலே போன்ற பேரினவாத […]

மைத்திரி

மைத்திரி – யுத்தத்தில் மரணித்த அனைவரும் தோல்வியுற்றவர்களாகவோ அல்லது உயிர் வாழ்கின்ற அனைவரும் வெற்றி பெற்றவர்கள் அர்த்தமாகாது

மைத்திரி – யுத்தத்தில் மரணித்த அனைவரும் தோல்வியுற்றவர்களாகவோ அல்லது உயிர் வாழ்கின்ற அனைவரும் வெற்றி பெற்றவர்கள் அர்த்தமாகாது முப்பது வருடகால யுத்தத்தில் மரணித்த அனைவரும் தோல்வியுற்றவர்களாகவோ அல்லது உயிர் வாழ்கின்ற அனைவரும் வெற்றி பெற்றவர்கள் அர்த்தமாகாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அத்துடன், பொருளாதார விடுதலையை நோக்கியே நாம் தீர்மானத்துடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படுகிறோம். இதனாலேயே 2017ஆம் ஆண்டினை நாம் வறுமையை இல்லாதொழிக்கும் வருடமாக பிரகடனப்படுத்தியுள்ளோம். சர்வதேச ஆதரவையும், நன்மதிப்பையும் […]

மஹிந்த

மஹிந்த நடத்துவது அதிகாரப் போராட்டம்: தமிழர்கள் நடத்துவது உரிமைப் போராட்டம்

மஹிந்த நடத்துவது அதிகாரப் போராட்டம்: தமிழர்கள் நடத்துவது உரிமைப் போராட்டம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி நடத்தும் போராட்டத்திற்கும், வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் நடத்தும் போராட்டத்திற்கும் இடையில் வித்தியாசம் காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். ஏறாவூர் 4 – மாஞ்சோலையில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டப திறப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றிய அவர், தெற்கிலே அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவதற்காகவே […]

கடும் நெருக்கடி

கடும் நெருக்கடிக்கு மத்தியில் முஸ்லிம் காங்கிரஸ் இன்று அவசரமாக கூடுகிறது

கடும் நெருக்கடிக்கு மத்தியில் முஸ்லிம் காங்கிரஸ் இன்று அவசரமாக கூடுகிறது கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் இன்றைய தினம் ஒன்று கூடுகின்றது. கட்சியின் தலைவரும் நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் கொழும்பிலுள்ள கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இந்த ஒன்றுகூடல் இடம்பெறுகின்றது. அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து, வெளியாகியுள்ள எல்லை நிர்ணய சபையின் […]

வடமாகாண முதலமைச்சர்

கேப்பாபுலவு மக்களை சந்தித்தார் வடமாகாண முதலமைச்சர்

கேப்பாபுலவு மக்களை சந்தித்தார் வடமாகாண முதலமைச்சர் முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பில் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.                            

தேசிய சுதந்திர தினம்

தேசிய சுதந்திர தினம் தமிழர் தாயத்தில் துக்கதினமாக அனுஷ்டிப்பு

தேசிய சுதந்திர தினம் தமிழர் தாயத்தில் துக்கதினமாக அனுஷ்டிப்பு தமிழர் தாயகமான வடக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்காவின் 69 ஆவது தேசிய சுதந்திர தினம் துக்க தினமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் மக்கள் கறுப்புக்கொடிகளை ஏந்தி போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். தேசிய சுதந்திர தினத்தை தமிழ்தமிழ்தேசிய இனத்தின் துக்க தினமாக அறிவிக்கும் படிகோரி யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கும் மத்தியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமிழ் […]

தயாசிறி

தயாசிறி : விக்னேஸ்வரன் நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சி

விக்னேஸ்வரன் நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சி : தயாசிறி   சாதாரண தமிழ் மக்கள் சமாதானமான முறையில் அதிகாரங்களை பகிர்ந்து, ஒற்றையாட்சியின் கீழ் நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்ல தயாராக இருக்கின்றனர் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) கொழும்பில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ‘வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் […]

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க

நிதியமைச்சர் : அரிசி விலை 66 ரூபாவரை குறைக்கப்பட்டுள்ளது

நிதியமைச்சர் : அரிசி விலை 66 ரூபாவரை குறைக்கப்பட்டுள்ளது   மக்களின் நன்மை கருதி அரிசிக்கான வரிகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு கிலோகிராம் அரிசியினை 66 ரூபாவிற்கு விற்பனை செய்யலாம் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நிதி அமைச்சில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அமைச்சர், ‘மக்களுக்கு சலுகைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் […]