யாழ். திருநெல்வேலி சந்தியில் ரயர் ஒட்டும் கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், கடையின் பெரும்பகுதி தீக்கிரையாகியுள்ளதோடு பெறுமதி வாய்ந்த பொருட்களும் எரிந்துள்ளன. நேற்றிரவு கடை உரிமையாளர் கடையை பூட்டிவிட்டுச் சென்ற பின்னர் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அயலவர்கள் வழங்கிய தகவலையடுத்து இன்று (திங்கட்கிழமை) அதிகாலை சென்று பார்த்தபோது கடையின் பெரும்பாலான பகுதி எரிந்து நாசமாகியுள்ளமை தெரியவந்துள்ளது. அத்தோடு, சுமார் 5 லட்சம் ரூபாய் பெறுமதியான உபகரணங்களும் எரிந்து சாம்பாலாகியுள்ளன. மின் […]
இலங்கை செய்திகள்
குறைக்கப்பட்ட மஹிந்தவின் பாதுகாப்பு மீண்டும் அதிகரிப்பு!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு பிரிவிலிருந்து 50 பேர் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த தீர்மானம் இரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த வாரம் 42 பாதுகாப்பு அதிகாரிகளை மீளப் பெற்றுக்கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 பேரை குறைக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த 50 பேரை மஹிந்தவின் பாதுகாப்பு பிரிவிலிருந்து நீக்கும் நடவடிக்கை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதோடு, அதற்கான […]
தமிழ் பிரதேசங்களில் பணிக்கமர்த்தப்படும் பெரும்பான்மையின இளைஞர்கள்
வடக்கு கிழக்கில் வேலையற்ற நிலையில் பல இளைஞர்கள் வாழ்ந்துவரும் நிலையில், அங்குள்ள அலுவலகங்களுக்கு பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பணிக்கமர்த்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, கிளிநொச்சியில் உள்ள மத்திய அரசின் திணைக்களங்களில் நிரந்தர அலுவலக உதவியாளர்களாக பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது, அங்குள்ள வேலையற்ற இளைஞர்களை மட்டுமன்றி, குறித்த அலுவலகங்களில் பல வருட காலமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி, இதுவரை காலமும் நிரந்தர நியமனம் கிடைக்காதவர்களிடையே பெரும் விசனத்தை […]
தமிழரின் சமகால விடயங்கள் மோடி சந்திப்பில் பேசப்படும்! – அரசியல் தீர்வு முக்கியம் என்கிறார் சம்பந்தன்
“தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினை, அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பில் நிச்சயமாகப் பேசப்படும். இந்தச் சந்திப்பு எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறக்கூடும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச வெசாக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகை தரவுள்ளார். எதிர்வரும் 11ஆம் திகதி […]
மே 18இல் முல்லைத்தீவு வருகையை கைவிடவேண்டும் ஜனாதிபதி! – கோருகின்றார் சார்ள்ஸ் எம்.பி.
தமிழ் மக்கள் கருவறுக்கப்பட்ட தினமாக அடையாளப்படுத்தப்பட்ட மே 18ஆம் திகதி ஜனாதிபதி முல்லைத்தீவுக்கு வருவதைத் தவிர்த்து பிறிதொரு தினத்தில் வரவேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:- “தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக முள்ளிவாய்க்காலில் குவிக்கப்பட்டு வெளிநாடுகளின் உதவியோடு பல்லாயிரக்கணக்கில் கருவறுக்கப்பட்ட நாளான மே 18ஐ தமிழ் மக்கள் ஆறாத வடுவாக எண்ணி நினைவுகூரும் […]
மஹிந்த பற்றி தீர்மானம் எடுக்க சு.கவின் உயர்பீடம் முஸ்தீபு!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போஷகராக வைத்திருப்பதா, இல்லையா என்பதைப் பற்றிய தீர்மானம் சு.கவின் அடுத்த நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளது என அந்தக் கட்சியின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அடுத்த வாரம் வரும் வெசாக் பூரணை தினத்தின் பின் கூடவுள்ள நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் போஷகராக இருந்துகொண்டே அந்தக் […]
தேசிய அபிவிருத்தி இலக்குகளில் மாகாண சபைகளின் கவனம் தேவை! – முதலமைச்சர்கள் மாநாட்டில் ஜனாதிபதி வலியுறுத்து
நாட்டின் தேசிய அபிவிருத்தி இலக்குகளை எட்டுவதற்கு மாகாண சபைகளின் செயற்பாடுகள் முறைப்படியாக இருக்க வேண்டியதுடன் மத்திய அரசுக்கும் மாகாண சபைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பும் சீர்செய்யப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஹபரண சினமன் லொஜ் விருந்தகத்தில் நேற்று நடைபெற்ற 33 ஆவது முதலமைச்சர்கள் மாநாட்டில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “ஒன்பது மாகாண சபைகளும் ஒன்பது விதமாக செயற்படுவதனால் நாட்டின் பொது […]
நல்லிணக்கம், சகவாழ்வுக்கான தேசிய கொள்கையை ஏற்றது அமைச்சரவை! – மைத்திரி, மனோ கூட்டாக சமர்ப்பிப்பு
நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு தொடர்பான தேசிய கொள்கை பத்திரத்தை தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் என்ற முறையில் அமைச்சர் மனோ கணேசனும் கூட்டாக கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்பித்துள்ளனர். இந்த அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவை ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளது. அமைச்சரவை சம்பிரதாயத்தின்படி எதிர்வரும் 9ஆம் திகதி செவ்வாய்கிழமை நடைபெறவுள்ள அடுத்த அமைச்சரவை […]
25 மில்லியன் ரூபா செலவில் வெசாக் பண்டிகையை கொண்டாடிய மஹிந்தவின் மனைவி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான, முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ, யுனெஸ்கோவின் ஏற்பாட்டில் பரிஸில் நடைபெற்ற வெசாக் பண்டிகையை பார்வையிடுவதற்கு 25 மில்லியன் ரூபா செலவிட்டதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு பரிஸ் சென்றபோது ஷிரந்தி ராஜபக்ஷ தங்கியிருந்த ஹோட்டலின் அறை ஒன்றுக்கான ஒரு நாள் வாடகை, 63 […]
நான் கூறியதை போன்று செய்திருந்தால் மீதொட்டமுல்ல அனர்த்தம் ஏற்பட்டிருக்காது: பைசர் முஸ்தபா
தான் கூறிய விடயங்களை செயற்படுத்தியிருந்தால் பல உயிர்களை காவுகொண்ட மீதொட்டமுல்ல அனர்த்தம் அரங்கேறியிருக்காது என உள்ளூராட்சி மன்றம் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். கண்டி கொஹகொட குப்பை மேடும் சரியும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், இப்பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக அங்கு சென்றிருந்த வேளையிலே அமைச்சர் பைசர் முஸ்தபா மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ”மீதொட்டமுல்லையை போன்று அனர்த்தம் ஒன்று கொஹகொட […]





