இலங்கை செய்திகள்

மஹிந்த முன்னதாகவே ஆட்சியை கலைத்தமைக்கான காரணம் இதுதான்: மட்டக்களப்பில் பிரதமர்

தாங்க முடியாதளவு கடன் சுமை இருந்த காரணத்தினாலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியை முன்னரகவே கலைத்தார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 55 கோடி ரூபாய் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்கள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வின் முதல் நிகழ்வாக இன்று ஏறாவூர் நகரத்தில் 120 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஏறாவூர் நகரசபைக் கட்டடத்தை பிரதமர் திறந்து வைத்தார். கிழக்கு மாகாண […]

நல்லூர் திருவிழாவைக் கண்டு பிரம்மித்துப்போயுள்ள அமெரிக்க தூதுவர்

யாழ்.நல்லூர் திருவிழாவையும், அங்கு திரண்டுள்ள மக்களின் பக்தியையும் கண்டு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அடுல் கெசாப் பிரம்மித்துப் போயுள்ளார். “யாழ். நல்லூர் ஆலயத்திற்கு வருகைத் தரும் பக்தர்களின் நம்பிக்கை, கலாச்சாரம் மற்றும் பக்தி என்பவை மிகவும் சிறப்பான ஒன்று” என தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிரபாகரனுடன் அதிக நேரத்தைச் செலவிட முடியவில்லை! – வருந்துகிறார் எரிக் சொல்ஹெய்ம்

“தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் அதிக நேரத்தைச் செலவிட முடியாமல் போனதற்காக வருந்துகிறேன்.” – இவ்வாறு இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான பேச்சுக்களிலும், அமைதி முயற்சிகளிலும் நடுநிலையாளராகப் பங்கேற்ற எரிக் சொல்ஹெய்ம், சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் கொண்டிருந்த உறவு, நட்பு ரீதியானதா அல்லது அதனை விடவும் அதிகமானதா […]

மஹிந்த அணியிலிருந்து விலகி எவரும் அரசுடன் இணையமாட்டர்! – நல்லாட்சியின் பகற்கனவு பலிக்காது என்கிறார் செஹான் சேமசிங்க

மஹிந்த அணியான பொது எதிரணியில் இப்போது பெரும் விரிசல் ஏற்பட்டிருக்கின்றது எனவும், வெகுவிரைவில் அந்த அணியிலுள்ள ஏழு உறுப்பினர்கள் விலகி அரசுடன் சேர்ந்துகொள்ளப்போகின்றனர் எனவும் வெளிவந்திருக்கும் செய்தி வெறும் கற்பனையே எனவும், இவ்வாறு அரசு அடிக்கடி காணும் பகற்கனவுகள் ஒருபோதும் பலிக்கப்போவதில்லை எனவும் பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் சாந்த பண்டார பொது […]

இளநீர் குடிப்பது ஐ.தே.க; கோம்பை தின்பது நாமா? – சு.க. ஆவேசம்

“மத்திய வங்கி பிணைமுறி மோசடிக்கான பொறுப்பையோ அதனால் ஏற்பட்ட நட்டத்தையோ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்காது. ஐக்கிய தேசியக் கட்சியே ஏற்க வேண்டும்.” – இவ்வாறு மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:- “மத்திய வங்கி பிணைமுறி மோசடியானது நல்லாட்சிக்குப் பெரும் சவாலை விடுத்துள்ளது. இதனுடன் தொடர்புபட்டவர்கள் இன்று வெளிப்படுத்தப்பட்டுள்ளனர். அந்தக் குற்றச்சாட்டுக்கு இலக்கான ரவி கருணாநாயக்க அமைச்சுப் பதவியிலிருந்து விலகியுள்ளார். ஐக்கிய தேசியக் […]

கட்சியிலிருந்து நீக்கினால் நீதிமன்றத்தை நாடுவேன்! – வடக்கு அமைச்சர் டெனீஸ் தெரிவிப்பு

“ஜனநாயக விழுமியங்களுக்கு முரணான இரு வேறு நிலைப்பாடுகளுடன் கட்சி செயற்படுகின்றது. சட்டத்துக்கு மாறாகக் கட்சியிலிருந்து என்னை நீக்கினால் நீதிமன்றத்தை நாடுவேன். இருப்பினும் இன்னும் கட்சியில் ஜனநாயக விழுமியங்கள் இருப்பதாக நம்புகின்றேன்.” – இவ்வாறு வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார். அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதற்கு மறுத்துள்ளமையால் பா.டெனீஸ்வரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு ரெலோவின் உயர்மட்டக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் […]

டெனீஸ்வரனின் முடிவால் செல்வம் எம்.பி. கவலை!

“வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் பா.டெனீஸ்வரன் தனது பதவியிலிருந்து விலக மறுத்திருப்பதும், கட்சி தனக்கு முக்கியமல்ல என்று தெரிவத்திருப்பதும் வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது” என்று ரெலோ அமைப்பின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வடக்கு மாகாண அமைச்சரவைக் குழப்பங்களைத் தொடர்ந்து அமைச்சர் டெனீஸ்வரனை பதவியிலிருந்து விலகுமாறு கட்சி கேட்டுக்கொண்டது. ஆனால், அவர் மறுத்துவிட்டார். அதனையடுத்து அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர் கட்சியின் உயர்மட்டக் […]

புதிய அரசமைப்பு: இடைக்கால அறிக்கை விரைவில் என்கிறார் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல!

புதிய அரசமைப்பை உருவாக்குவது தொடர்பில் சில இணக்கப்பாடுகள் காணப்பட்டுள்ளன எனவும், வெகுவிரைவில் அரசமைப்பு உருவாக்கம் தொடர்பான இடைக்கால அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் எனவும் உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் 25ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர், முதல் இரண்டு அரசமைப்புகளிலும் தமிழ்த் தரப்பின் பங்கேற்பு இருக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த நாடு 30 வருட மிலேச்சத்தனமான […]

ஜனாதிபதி மைத்திரியிடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வேண்டுகோள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்தபோது அளித்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை எனவும் இலங்கை அரசின் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம் குறித்து தங்களுக்கு நம்பிக்கையில்லை என்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர். கொழும்பில் நேற்றைய தினம் (17) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இலங்கையில் காணாமல்போகச் செய்யப்பட்டவர்கள் குறித்து ஆராய்வதற்காக […]

2020 வரை தேசிய அரசு தொடரும்: சரத் அமுனுகம

பொருளாதார வளர்ச்சியையும், அபிவிருத்தியையும் துரிதப்படுத்தும் வகையில் தேசிய பொருளாதார சபையொன்றை அமைப்பதற்கு தேசிய அரசின் பிரதான இரண்டு கட்சிகளுக்குமிடையில் இணக்கம் காணப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் சரத் அமுனுகம கூறியுள்ளார். அத்துடன், இவ்விரு கட்சிகளுக்குமிடையிலுள்ள பொருளாதார முரண்பாடுகளையும், கொள்கை முரண்பாடுகளையும் தீர்த்துக்கொள்ளும் வகையில் தேசிய பொருளாதார சபை உருவாக்கப்படுகின்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய பிரதான […]