அரசியல்

அரசியல்

கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய மே 2-ம் தேதி வரை தடை நீட்டிப்பு

ஏர்செல்-மேக்சிஸ் மோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு தொடர்பு இருப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்ட ஆணையம் அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து அவரை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்யலாம் என பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஓ.பி.ஷைனி, கார்த்தி சிதம்பத்துக்கு முன்ஜாமீன் வழங்கினார். […]

பிரதமர் மோடி வாக்குறுதியை மீறிவிட்டார் – சந்திரபாபுநாயுடு தாக்கு

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது. இதனால் தெலுங்கு தேசம் கட்சி பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகியது. முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பிரதமர் மோடியை கடுமையாக தாக்கி பேசி வருகிறார். வாக்குறுதியை காப்பாற்றாத பிரதமர் மோடிக்கு ஆந்திர மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று எச்சரிக்கை விடுத்தார். இந்த நிலையில் விஜயவாடாவில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பேசுகையில் மீண்டும் பிரதமர் மோடிக்கு எச்சரிக்கை விடுத்தார். […]

சென்னையில் வைகோ – திமுகவினர் கருப்பு கொடி போராட்டம்

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் கருப்பு கொடி ஏந்தியும், கருப்பு சட்டை அணிந்தும் போராட்டம் நடத்தினார்கள். சென்னையில் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். சைதாப்பேட்டையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பிரதமர் மோடி தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினார். அப்போது அவர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கண்டித்து […]

ஜெயலலிதா மரணத்தில் சசிகலா மீது சந்தேகம் என்பது ஒரு அணு அளவு கூட இல்லை – அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி

அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஒரு தனியார் டி.வி.க்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மேலூர் கூட்டத்தில் தினகரன் பேசும் போது ஜெயலலிதா மரணத்தில் விசாரணை கமி‌ஷன் அமைக்க வேண்டும் என்றார். அதன்பிறகு தான் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டது. ஜெயலலிதாவின் ஜீவனுக்கு என்ன நடந்தது என்பது எங்களுக்கு தெரியும். ஜெயலலிதா மரணத்தில் சர்ச்சைகள்தான் இருக்கிறதே தவிர அது உண்மை கிடையாது. புரட்சித் தலைவி ஜெயலலிதா ஒரு முதல்-அமைச்சர். சிகிச்சை பெற்ற இடம் […]

சிகிச்சை பெற்ற போது ஜெயலலிதா நைட்டி உடையில் இருந்ததால் வீடியோவை வெளியிடவில்லை – டிடிவி தினகரன்

தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி உடல்நல குறைவால் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி டிசம்பர் மாதம் 5-ந் தேதி மரணம் அடைந்தார்.அவர் மரணம் அடைந்து 10 மாதங்கள் ஆகியும், இன்னும் அவரது மரணத்திற்கான காரணம் குறித்த மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படாமலேயே இருக்கின்றன. அவரது மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். […]

வடக்கு அமைச்சர்கள் ஊழல், மோசடி விவகாரம்: தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கு வாய்ப்பூட்டு

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை தொடர்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் எவரும் கருத்து வெளியிடவேண்டாம் என்று அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. அத்துடன், வடக்கு மாகாண சபையின் விசேட அமர்வுக்கு முன்னதாக இன்று 12ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சந்தித்துப் பேசவுள்ளனர் எனவும் தெரியவருகின்றது. வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீதான […]