டெங்கு காய்ச்சலை தொடர்ந்து தற்பொழுது தமிழகத்தில் பன்றிக் காய்சலுக்கு ஒருவர் பலியான சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி அருகே சின்ன தாளப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ். இவர் அங்குள்ள தனியார் ஆலையில் எலட்ரீசியனாக வேலை செய்து வந்தார். கடந்த 2 வாரமாக தொடர் காய்ச்சல் மற்றும் சளித்தொல்லையால் முனிராஜ் அவதியுற்று வந்தார். இதனையடுத்து கிருஷ்ணகிரி மற்றும் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் காய்ச்சல் […]
தமிழ்நாடு செய்திகள்
தன்னை காவி என்று சொன்னவர்களுக்கு கமல் கொடுத்த பதிலடி
கமல்ஹாசன் தற்போது தீவிர அரசியலில் இறங்கிவிட்டார். எந்த ஒரு கேள்விக்கும் உடனே பதில் அளிக்கின்றார், இவருக்கு சமீப நாட்களாக கொஞ்சம் உடல்நலம் முடியாமல் ஓய்வில் இருக்கின்றார். இந்நிலையில் பிரபல வார இதழ் ஒன்றில் கேள்வியும் நானே, பதிலும் நானே என்ற பகுதியில் ‘பலரும் டெல்லி சொல்லும் உடையை நான் அணிந்திருக்கிறேன் என்று கேட்கிறார்கள். மேலும், கறுப்ப்கறுப்பு சட்டையை நீ போட்டுக்க. இப்போதைக்கு இதுவா நடிச்சிக்க’ என்று டெல்லியிலிருந்து சொல்கிறார்களாம். காந்தியைக்கூட […]
உடல் எடை குறைக்கும் அறுவை சிகிச்சையால் பெண் உயிரிழப்பு …
உடல் எடையை குறைப்பதற்காக அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழந்துள்ளார். திருவண்ணாமலையை சேர்ந்த வளர்மதி(46) என்ற பெண்ணுக்கு நேற்று இரவு அறுவை சிகிச்சை நடைபெற்றது. கிழ்பாக்கம் தனியார் மருத்துவமனையில் பெண் உயிரிழந்தது தொடர்பாக அவரது கணவர் போலீசார் புகார் அளித்துள்ளார். கணவர் அழகேசன் அளித்த புகாரை அடுத்து கிழ்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 150 கிலோ எடையை குறைக்க ஆகஸ்ட் 23-ம் தேதி கீழ்பாக்கம் […]
திராவிட முன்னேற்ற கழகத்தின் பக்கம் சாய்கிறதா நடிகர் சங்கம்?
ஜிஎஸ்டி வரி விதிப்பு போன்று சினிமா துறைக்கு பிரச்சனை ஏற்படும் போது தன்னை மட்டுமல்ல திமுக சட்டமன்ற உறுப்பினர் வாகை சந்திரசேகரையும் அழைக்க வேண்டும் என நடிகர் சங்கத்தின் துணை தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் அச்சங்கத்தின் துணை தலைவர் நடிகர் கருணாஸ் பேசினார். அப்போது, தான் சட்டமன்ற உறுப்பினர் ஆனதற்கும், அத்தகைய மாயை நடந்ததற்கும் காரணம் தான் நடிகர் சங்கத்தின் துணை […]
தமிழக அரசு மீது தமிழிசை சவுந்தர்ராஜன் குற்றச்சாட்டு!
டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை போதுமானதாக இல்லை என, பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் புகார் தெரிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கம் அருகே நிலவேம்பு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும், முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் டெங்கு காய்ச்சலும் சேர்க்கப்பட வேண்டும் என்றும் கூறினார். கேரள அரசு […]
கணவர் நடராஜனுடன் சசிகலா இரண்டாவது நாளாக சந்திப்பு!
சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது கணவர் நடராஜனை, அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலா இரண்டாவது நாளாக சந்தித்தார். சசிகலாவின் கணவர் நடராஜன் கல்லீரல், சிறுநீரகம் பாதிப்பு காரணமாக சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கணவரின் உடல் நிலை கருதி சசிகலாவிற்கு 5 நாள் பரோல் வழங்கப்பட்டது. இதையடுத்து, நேற்று முன்தினம் பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து வெளியே வந்த அவர் நேற்று குளோபல் […]
பிக்பாஸ் குறித்து கேப்டன் விஜயகாந்த் கலக்கல் பதில்
கேப்டன் விஜயகாந்த் தற்போது மீண்டும் பரபரப்பாக பல மீடியாக்களுக்கு பேட்டியளித்து வருகின்றார். இதில் சமீபத்தில் ஒரு வார இதழுக்கு சிறப்பு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். இதில் இவரிடம் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்கின்றீர்களா? என்று ஒரு கேள்வியை கேட்க உடனே கேப்டன் ‘பிக்பாஸுன்னா என்ன’ என்று கேட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். பிறகு சில நொடி கழித்து மீண்டும் ‘ஓ கமல் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றாரே அதுவா?, அதெல்லாம் பார்க்க நேரமில்லைப்பா, […]
அடுத்த தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன்: விஷால் அதிரடி
நடிகர் விஷால் தற்போது நடிகர் சங்க பொது செயலாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் ஆகிய பதவிகளை நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் இன்று நடந்த நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் அடுத்த நடிகர் சங்க தேர்தல் பற்றி கேட்கப்பட்டது. அடுத்த வருடம் செப்டம்பர் மாதத்திற்குள் நடத்திமுடிக்கப்படும் என்றும், அதில் நிச்சயம் நானும் போட்டியிடுவேன் என விஷால் அப்போது தெரிவித்தார்.
சசிகலா, தினகரன் இருவரும் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள்- ஓபிஎஸ் தரப்பு
சசிகலாவும், டிடிவி தினகரனும் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள் என்றும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தபோது டிடிவி தினகரன் அதிமுக உறுப்பினராகக் கூட இல்லை எனவும் தேர்தல் ஆணையத்தில் தனது தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளது ஓபிஎஸ் அணி. அதிமுகவின் வெற்றி சின்னமான இரட்டை இலைச்சின்னத்தைப் பெற ஈபிஎஸ், ஓபிஎஸ்,தினகரன் ஆகியோரின் தரப்பு தீவிரமாக போராடி வருகிறது. இதற்காக இரு அணிகளும் போட்டி போட்டுக்கொண்டு மூட்டை மூட்டையாக பிரமாண பத்திரங்களை தாக்கல் […]
‘கெயில்’ திட்டம் ஸ்டாலின் எச்சரிக்கை
‘மீண்டும் கெயில் திட்டத்தை நிறைவேற்ற, மத்திய,- மாநில அரசுகள் முயற்சித்தால், விவசாயிகளுடன் இணைந்து, தி.மு.க., போராடும்’ என, அக்கட்சியின் செயல் தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார். அவரது அறிக்கை: தமிழகத்தில், விளை நிலங்களுக்கு இடையில், ‘கெயில்’ நிறுவனத்தின் எரிவாயு குழாய்களைப் பதிக்க, மத்திய அரசு முயற்சித்து வருகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரிஆகிய, ஏழு மாவட்டங்களில், விளைநிலங்களின் வழியாக, 310 கிலோ மீட்டர் துாரத்துக்கு, 20 மீட்டர் […]





