Saturday , October 18 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் (page 70)

தமிழ்நாடு செய்திகள்

வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு

சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்து வருகிறது.இதில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் பல இடங்களில் இன்னும் மழை நீர் வடியாமல் உள்ளது. போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது. வெள்ள நிவாரண பணிகளை துரிதமாக மேற்கொள்ள முதல்-அமைச்சர் எடப் பாடி பழனிசாமி நேற்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை …

Read More »

நவம்பர் 8ம் தேதி வரை விடாது மழை – வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது. இதில் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் அதிக மழை பொழிவு இருந்தது. அதன் காரணமாக, பல பகுதிகள் நீரால் சூழப்பட்டுள்ளது. மீஞ்சூர், வேளச்சேர், கோவிளம்பாக்கம் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் நேற்று இரவு அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியவர்கள் …

Read More »

கருணாநிதி வீட்டில் வெள்ளம் புகுந்தது

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வீடு கோபாலபுரத்தில் உள்ளது.நேற்று பெய்த மழையில் வீட்டு காம்பவுண்டுக்குள் தண்ணீர் புகுந்து விட்டது சென்னையில் நேற்று இடைவிடாமல் கொட்டித் தீர்த்த கனமழையால் நகரமே ஸ்தம்பித்தது. எங்கு பார்த்தாலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் வீடுகளிலும் தண்ணீர் புகுந்தது. குடிசைப் பகுதிகள் மட்டுமின்றி வி.ஐ.பி.க்கள் வசிக்கும் பாதுகாப்பான பகுதிகளிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. அண்ணாநகர், அடையார், போயஸ்கார்டன், கோபாலபுரம், போட்கிளப், பெசன்ட்நகர், கே.கே.நகர், நுங்கம்பாக்கம் போன்ற இடங்களில் வசதியான வர்கள் …

Read More »

சென்னையில் கொட்டி தீர்க்கும் கனமழை

தென்மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே நிலை கொண்டிருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் வட கடலோட மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. தென் மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்தது. சென்னை நகரில் காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சிறிது நேரம் வெயிலும் அடித்தது. இதனால் தாழ்வான இடங்களில் தேங்கி இருந்த தண்ணீர் வடிய தொடங்கியது. மதியத்திற்கு பிறகு வானிலை அப்படியே மாறியது …

Read More »

கடலோர மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை மேலும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்

தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும், கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. கனமழையின் காரணமாக சென்னை நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை கடந்த மாதம் 27-ந் தேதிதொடங்கியது. கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடந்த திங்கட்கிழமை வெளுத்து வாங்கிய மழை, நேற்றுமுன் தினம் பகலில் …

Read More »

நெடுந்தீவு அருகே மீன்பிடித்த 13 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு

நெடுந்தீவு அருகே மீன்பிடித்த 13 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு உள்ளனர். கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் எல்லை கடந்து மீன்பிடிக்கின்றனர், இரட்டை மடிவலைகளை பயன்படுத்துகின்றனர் என கூறி இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்த 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர். அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் என கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்த 3 …

Read More »

பிஞ்சு குழந்தைகளின் இறப்பு , அரசிடம் கோரிக்கை வைத்த கமல் !

கமல்ஹாசன் சமீபகாலமாக சினிமாவை தாண்டி மக்களின் நலனை நோக்கி நகர தொடங்கியுள்ளார். தனது ட்விட்டர் தளத்தில் அவ்வப்போது தமிழக அரசியலை பற்றியும் தன்னுடைய பார்வைகளை ட்வீட் செய்து வந்தார், விரைவில் அவர் அரசியல் காட்சி தொடங்கவுள்ளார் என்பது அனைவரும் அறிந்த செய்தி. இந்நிலையில் இன்று பலத்த மழை காரணமாக கொடுங்கையுூரில் இரண்டு பிஞ்சு குழந்தைகள் மீன் கம்பியில் கால்வைத்து இறந்துள்ளனர். இது தமிழக அரசின் அலட்சிய போக்கு என்று மக்கள் குறை கூறி …

Read More »

அரசுக்கும், மக்களுக்கும் உலகநாயகன் கொடுத்த முன்னெச்சரிக்கை

நடிகராக மட்டுமல்லாது சமூக ஆர்வலராகவும் செயல்பட்டு வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன். இவர் விரைவில் அரசியலில் களமிறங்கவுள்ளார். இதற்கு அச்சாரமாக சமூக பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இன்று சென்னையில் மின்சாரம் தாக்கி இறந்த குழந்தைகளுக்காக இரங்கல் தெரிவித்தார். தற்போது டிவிட்டரில் மீண்டும் ஒரு தகவலை முன்னறிவிப்பாக அரசுக்கும், மக்களுக்கும் தெரிவித்துள்ளார். சென்னையில் பல பகுதிகள் மூழ்கவிருக்கின்றது இதற்கு விரைந்து நடவடிக்கை வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இது அரசுக்கும் மக்களுக்கும் …

Read More »

​மதுரையில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர் சிவகார்த்திகேயன்..!

மதுரையில் நடிகர் சூரியின் உணவகத்தை திறக்க வந்த நடிகர் சிவகார்த்திகேயனை காண ரசிகர்கள் திரண்டதால், கடும் போக்குவரத்து நெரிசலும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள காமராஜர் சாலையில், நடிகர் சூரி தமது சகோதரருக்காக புதிய உணவகத்தை அமைத்துக் கொடுத்துள்ளார். இந்த உணவகத்தை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று திறந்து வைத்தார். திறப்பு விழாவிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் வர உள்ளதாக பேனர்கள் வைக்கப்பட்டிருந்ததால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் சிவகார்த்திகேயனைக் …

Read More »

பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கதேவரின் 110-வது ஜெயந்தி விழா

பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் முதல் அமைச்சர்,துணை முதல்-அமைச்சர் மலர் வளையம் வைத்து மரியாதை

Read More »