Saturday , October 18 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் (page 58)

தமிழ்நாடு செய்திகள்

2ஜி தீர்ப்பு குமாரசாமி தீர்ப்பை போன்றது : எச்.ராஜா

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை வழக்கில் திமுகவின் அ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுவித்தது சிபிஐ சிறப்பு நீதிமன்றம். இந்த தீர்ப்பை திமுக, காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட பலரும் வரவேற்று வருகின்றனர். திமுகவினர் இந்த தீர்ப்பை கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்த தீர்ப்பு குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியபோது இந்த தீர்ப்பு மேல்முறையீடு செய்யப்பட்டு நீதி வெல்லும் என …

Read More »

ஆர்.கே.நகர் வாக்குப்பெட்டிகள் எங்கே உள்ளன?

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியின் இடைத்தேர்தல் இன்று ஒருவழியாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இன்று பதிவான வாக்குகள் வரும் 24ஆம் தேதி எண்ணப்படவுள்ளன. இந்த நிலையில் இன்று பதிவான மின்னணு இயந்திரங்கள் கொண்ட வாக்குப்பெட்டி பலத்த பாதுகாப்புடன் சென்னை ராணி மேரி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், காவல்துறையினர் உட்பட 50க்கும் மேற்பட்ட துணை ராணுவப்படை வீரர்கள் இரவுபகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட …

Read More »

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ ஆகிறார் தினகரன்?

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இன்று நடைபெற்ற நிலையில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாகவே இருந்தது. மேலும் இன்று 2ஜி வழக்கின் தீர்ப்பும் சாதகமாக வந்துள்ளதால் திமுக எளிதில் வெற்றி பெறும் என்றே அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர் ஆனால் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. இதன் முடிவுகளின்படி பார்த்தால் டிடிவி தினகரன் எளிதில் வெற்றி பெற்றுவிடுவார் என்று தெரிகிறது. இந்த கருத்துக்கணிப்பில் …

Read More »

ஜெயலலிதா தொடர்பான பல வீடியோக்கள் டிடிவி தினகரன் வசம்

பரிசுப் பொருள் தொடர்பான வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா

மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடர்பான பல வீடியோக்கள் டிடிவி தினகரன் வசம் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. உடல் நலக்குறைபாடு காரணமாக சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி மரணமடைந்தார். அவரின் மரணத்தில் தொடர்ந்து பல சந்தேகங்களும், மர்மங்களும் நிலவுகிறது. காரணம், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் மரணமடைந்த வரை அவரின் புகைப்படமோ, வீடியோவோ வெளியாகவில்லை. தற்போது அவரின் மரணம் குறித்து விசாரணை செய்ய தமிழக …

Read More »

2ஜி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2ஜி வழக்கில் கனிமொழி, ஆர்.ராசா ஆகியோரை விடுவித்து டெல்லி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மன்மோகன்சிங் தலைமையிலான ஆட்சியின்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டில் ரூ.1,76,000 கோடி அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டிருக்கிறது என கணக்கு தனிக்கை குழு குற்றம்சாட்டியது. இதில் முன்னாள் தொலைதொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த 2011 …

Read More »

ஆர்.கே.நகரில் 7.32 சதவீத வாக்குகள் பதிவு…

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதனால், தொகுதி முழுவதிலும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 258 வாக்குச்சாவடி மையங்களில் 1600 மின்னணு வாக்கு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், வாக்களித்தவர்களுக்கு எந்த சின்னத்தில் வாக்களித்தோம் என்ற ரசீது கொடுக்கும் மிஷினும் தயாராகவுள்ளதாகவும் கூறப்படுகிறது இன்று …

Read More »

ஆர்.கே நகரில் வாக்குப்பதிவு தொடங்கியது

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு சற்று நேரத்திற்கு முன் தொடங்கியது. இதனையடுத்து அனைத்து வாக்குச்சாவடிகளிலும் துணை ராணுவத்தினர்களுடன் போலீஸாரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 59 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்காக 50 இடங்களில் 258 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 950 துணை ராணுவப் படையினர் மற்றும் 3300 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வாக்குப்பதிவின்போது எந்தவித முறைகேடும் நடந்துவிடக்கூடாது என்பதை கணக்கில் கொண்டும், அமைதியாக …

Read More »

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : நேரடி ஒளிபரப்பு

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது. இதனையடுத்து அனைத்து வாக்குச்சாவடிகளிலும் துணை ராணுவத்தினர்களுடன் போலீசாரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்குப்பதிவின்போது எந்தவித முறைகேடும் நடந்துவிடக்கூடாது என்பதை கணக்கில் கொண்டும், அமைதியாக தேர்தலை நடத்தும் வகையிலும் வாகுப்பதிவை தேர்தல் ஆணைய இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வாக்குப்பதிவின் போது தகராறு செய்பவர்கள், வாக்களிப்பவர்களுக்கு இடைஞ்சலாக இருப்பவர்கள் உடனடியாக கைது …

Read More »

சனிப்பெயர்ச்சி விழாவில் புனித நீராடின

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உள்ள சனிபகவான் தலமான தர்பாரண்யேஸ்வரசுவாமி கோவில் நேற்று முன்தினம் சனிப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி கோவில் தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அங்குள்ள நளதீர்த்தத்தில் புனித நீராடினர். பின்னர் நீண்ட வரிசையில் நின்று சனிபகவானை தரிசனம் செய்தனர். ஒரேநேரத்தில் 10 ஆயிரம் பக்தர்கள் புனிதநீராடும் வகையில் குளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு …

Read More »

ஜெ.வின் வீடியோ போயஸ் கார்டனில் எடுக்கப்பட்டதா?

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது எடுக்கப்பட்ட வீடியோவை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் தற்போது வெளியிட்டுள்ளார். 20 நிமிடம் ஓடும் இந்த வீடியோவில் ஜெயலலிதா நைட்டி அணிந்த நிலையில், பழச்சாறு பருகியபடி தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கிறார். ஜெ.வின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில், முதன் முதலாக தினகரன் தரப்பில் இருந்து இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு …

Read More »