தமிழ்நாடு செய்திகள்

பெரியபாண்டியன் கொலை வழக்கில் கொள்ளையன் நாதுராம் கைது

தமிழகத்தை அதிர வைத்த இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான நாதுராம் கைது செய்யப்பட்டார். சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடை ஒன்றில் கொள்ளையடித்த கொள்ளையர்களை பிடிக்க சென்ற பெரியபாண்டியன் என்ற ஆய்வாளர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜஸ்தானில் சுட்டு கொல்லப்பட்டார். பெரியபாண்டியன் முதலில் கொள்ளையர்களால் சுடப்பட்டதாக செய்திகள் பரவிய நிலையில், முனிசேகர் என்ற காவலர் சுட்ட போது தவறி பெரியபாண்டியன் மீது பட்டதால் அவர் மரணமடைந்தது தெரிய […]

பாஜக ஒரு கீழ்த்தரமான கட்சி

கவிஞர் வைரமுத்து குறித்து ஹெச்.ராஜாவின் கீழ்த்தரமான பேச்சுக்கு தற்போது வரை அந்த கட்சி எந்தவித வருத்தமும் தெரிவிக்கவில்லை என்று திருமுருகன் காந்தி கூறியுள்ளார். மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி திருப்பூரில் இஸ்லாமியர்களின் சார்பில் மத்திய பாஜக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போது, இஸ்லாமிய மக்களின் அடிப்படை உரிமைகள் மீதே கை வைக்கும் போக்கை பாஜக அரசு கடை பிடித்து வருவதாக கூறினார். இத்தனை […]

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் சசிகலா

புதிய கட்சி?

முடக்கப்பட்டிருந்த இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியதில் இருந்து அதிமுக அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனையடுத்து தினகரன், சசிகலா ஆகியோர் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் அதிமுகவில் குறிப்பிட்ட தரப்பினர் தினகரனுக்கு ஆதரவாகவே உள்ளனர். இரட்டை இலையையும், கட்சியையும் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பினர் கைப்பற்றியதை அடுத்து தினகரன் புதிய கட்சி ஆரம்பிக்க போவதாக தகவல்கள் பரவின. ஆனால் தினகரன் அதிமுக இருக்கும் போது […]

விண்வெளியிலிருந்து பார்த்தா தமிழகம் புகை மூட்டமா இருக்காம்!

நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று தமிழகம் முழுவதும் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலே போகிப்பண்டிகை. இதனால் வீட்டில் உள்ள பழைய பொருட்களை முற்றத்தில் வைத்து தீயிட்டு எரிப்பது வழக்கம். தீயிட்டு எரிப்பதால் அதிலிருந்து வெளியாகும் புகை காற்றை மிகவும் மாசுபடுத்துகிறது. இதனால் பிளாஸ்டிக் முதலியவற்றை தீயிட்டு எரிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. ஆனாலும் மக்கள் அதை செய்யத்தான் செய்கிறார்கள். நகரங்களில் போகிப்பண்டிகையின் போது காற்று மிகப்பெரிய […]

சட்டப்பேரவைக்கு வருவாரா கருணாநிதி?

மூத்த அரசியல்வாதியும், திமுக தலைவருமான கருணாநிதி திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். ஆனால் அவரது உடல்நிலை காரணமாக அவரால் சட்டசபைக்கும் சரி அரசியல் நிகழ்வுகளிலும் சரி கலந்துகொள்ள முடியவில்லை. இந்நிலையில் கடந்த 8-ஆம் தேதி தொடங்கி நேற்று முடிந்த தமிழக சட்டசபை கூட்டத்தொடருக்கும் கருணாநிதி செல்லவில்லை. அவரது வருகையை எதிர்நோக்கி உள்ளதாகவும், அவரது உடல்நிலை சரியாக பிராத்தனை செய்வதாகவும் துணை முதல்வர் ஓபிஎஸ் கூறினார். நேற்று தமிழக சட்டசபையில் […]

பயமா எனக்கா! கமல்ஹாசன் அதிரடி பதில்

கமல்ஹாசன் அவ்வபோது நாட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களுக்கும் தன் கருத்தை கூறி வருகின்றார். இந்நிலையில் தான் அரசியலுக்கு வரவுள்ளதாக அவர் அறிவித்துவிட்டார். இவருடைய நண்பர் மற்றும் சக நடிகர் ரஜினிகாந்தும் இதை அறிவிக்க, தமிழகமே தற்போது யார் முதலில் கட்சி தொடங்குவார்கள் என்று தான் பார்த்து வருகின்றது. தற்போது கமல் ஒரு பேட்டியில் ‘கட்சி தொடங்க பயமா? என்று சிலர் கேட்கின்றனர், அரசியல் கட்சி தொடங்க தாம் தாமதம் செய்வது, […]

சசிகலாவை வம்புக்கு இழுத்த சூர்யா

சூர்யா, கீர்த்திசுரேஷ், நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய ‘தானா சேர்ந்த கூட்டம்’ இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு வசனம் சசிகலா தரப்பினர்களை அதிருப்தி அடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் சூர்யாவிடம் ஒரு பெண், நாட்டில் ஊழல் இல்லாமல் இருக்க பாடுபடுவேன் என்று கூறுவதாகவும், அந்த பெண்ணின் பெயர் என்ன என்று சூர்யா கேட்க அதற்கு அவர் சசிகலா என்று […]

வளர்மதிக்கு பெரியார் விருது

தமிழக அரசின் 2017ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில் ஆண்டுதோறும் தமிழக அரசு விருதுகளை வழங்கி வரும் நிலையில் 2017-ம் ஆண்டிற்கான விருதுகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார். இதன்படி பெரியார் விருது முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது கே.ஜீவபாரதிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகள் வருகின்ற 16-ம் தேதி சென்னை […]

வறட்சி நிவாரணம் எடப்பாடி

முதல்வரான பிறகு கையெழுத்திட்ட கோப்புகள்

முதல்வராக பதவியேற்ற பிறகு, தான் கையெழுத்திட்ட கோப்புகள் எத்தனையென்று முதல்வர் பழனிசாமி புள்ளி விவரத்துடன் பதில் அளித்தார் சட்டசபையில் கவர்னர் உரையின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு பதில் அளித்து முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியவற்றில் முக்கிய விவரங்கள் வருமாறு ஆளுநர் உரையை பாராட்டியவர்கள் மற்றும் குற்றம் சாட்டியவர்களுக்கு நன்றி என்று அவர் கூறியுள்ளார். மக்களுக்காகதான் திட்டங்களே தவிர, திட்டங்களுக்காக மக்கள் அல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் எனது அலுவலகத்தில் […]

தினகரனின் ஸ்லீப்பர் செல் தீரன்?

தினகரனின் ஆதரவாளர்களை பலரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் அவ்வப்போது நீக்கி வருகின்றனர். கடந்த 25ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக கூட்டத்தில் தினகரனின் ஆதரவாளர்களான தங்க தமிழ் செல்வன், வெற்றிவேல், புகழேந்தி, நாஞ்சில் சம்பத், சி.ஆர். சரஸ்வதி,கலைராஜன், பார்த்திபன் உள்ளிட்ட சிலர் நீக்கப்பட்டனர். மேலும் அதிமுகவை சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள். […]