Sunday , August 24 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் (page 44)

தமிழ்நாடு செய்திகள்

தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம்

100 தாமரை மொட்டுகளே...: தமிழிசை நம்பிக்கை

தமிழக அரசு பேருந்து விலையை குறைக்காவிட்டால் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தமிழக அரசு பேருந்து கட்டணத்தை நேற்று நள்ளிரவு முதல் திடீரென உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது. இதனால், சென்னை போன்ற பெரிய நகரங்கள் மட்டுமின்றி, சிறு கிராமங்கள் மற்றும் நகரங்களில் பேருந்துகளை பயன்படுத்தும் சாதாரண பொதுமக்கள், இதற்கு முன் செலுத்தியதை விட இரண்டு மடங்கு தொகை கொடுக்க வேண்டியுள்ளது. …

Read More »

ஆண்டாள் புகழ் பாடியது தவறா? – வைரமுத்து விளக்கம் (வீடியோ)

ஆண்டாள் குறித்து எழுந்த சர்ச்சையை தொடர்ந்து அதுகுறித்து கவிஞர் வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார். ஆண்டாள் குறித்து தனது கவிஞர் வைரமுத்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக தொடர் கண்டனங்கள் வந்துகொண்டிருக்கிறது. இந்த சம்பவத்துக்கு வைரமுத்து வருத்தம் தெரிவித்த பின்பும் பிரச்சனை ஓய்ந்தபாடில்லை. தமிழகம் முழுவதும் ஆண்டாள் குறித்து வைரமுத்து கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்து அமைப்புகள் கங்கணம் கட்டிக்கொண்டு வைரமுத்துவுக்கு எதிராக களத்தில் இறங்கியது. எப்போதும் இல்லாத அளவுக்கு …

Read More »

பஸ் கட்டண உயர்வு ஏன்?

தமிழகத்தில் 8 போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் மக்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. அரசு போக்குவரத்து கழகங்களில் 22 ஆயிரத்து 509 பஸ்கள் மற்றும் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 615 பணியாளர்களைக் கொண்டு இயங்கி வருகின்றன. மக்கள் நலனை கருதி மாநிலத்தில் உள்ள அனைத்து கிராமங்கள், மலைப்பகுதிகள் போன்ற தொலைதூர இடங்களுக்கும் நாளொன்றுக்கு ஏறத்தாழ 88.64 லட்சம் கிலோ மீட்டர் தூரம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதன் …

Read More »

ஆசிரியை காதலிக்க மறுத்ததால் தற்கொலைக்கு முயன்ற மருத்துவ மாணவன்

கோயம்புத்தூரில் உதவி பேராசிரியை தனது காதலை ஏற்க மறுத்ததால் மருத்துவ கல்லூரி மாணவன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், காரிபாளையம் அருகே உள்ள கீழ்குப்பத்தைச் சேர்ந்தவர் ராமஜெயம் மகன் நவீன்குமார் (22). இவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் 2-ஆம் ஆண்டு மருத்துவம்(MBBS) படித்து வருகிறார். இவர் அந்த கல்லூரியில் பணியாற்றி வரும் உதவி பேராசிரியை ஒருவரிடம் நன்றாக …

Read More »

ஜெயலலிதா மரணம் குறித்து வதந்திகள் பரப்ப வேண்டாம்

ஓ.பி.எஸ்.சை மீண்டும் முதல்வராக்குவோம்: மதுசூதனன் உறுதி

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் செயல்படுவதால் யாரும் வதந்திகள் பரப்ப வேண்டாம் துணை முதல்வர் என ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தினகரன் ஆர்கே நகரில் சுயேட்சையாக போட்டியிட்டு அமோகமாக வெற்றிபெற்றார். அவரது வெற்றி பணம் கொடுத்து வாங்கப்பட்ட வெற்றி என பல அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தெரிவித்தனர். தினகரனின் வெற்றியால் எடப்பாடி அணி அதிர்ந்து போனது. தொடர்ந்து நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் …

Read More »

வைரமுத்து மீதான வழக்குகளை விசாரிக்க தடை

ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்து மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த வழக்குகளை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழகம் முழுவதும் ஆண்டாள் குறித்து வைரமுத்து கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்து அமைப்புகள் கங்கணம் கட்டிக்கொண்டு வைரமுத்துவுக்கு எதிராக களத்தில் இறங்கியது. எப்போதும் இல்லாத அளவுக்கு ஜீயர்கள் போராட்டத்தில் குதித்தனர். வைரமுத்துவுக்கு எதிராக ஆபாச வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டன. அவருக்கு பொதுக்கூட்டங்களில் கொலை மிரட்டல் …

Read More »

கமலும் ரஜினியும் சோளக்காட்டு பொம்மைகள்!

முதல்வருக்கு பாராட்டுகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் அடுத்த மாதம் அரசியல் களத்தில் புதிய கட்சியுடன் களமிறங்கவுள்ளனர். மேலும் விஷால் மற்றும் விஜய் எந்த நேரமும் களமிறங்க காத்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி பாக்யராஜ் உள்பட இன்னும் ஒருசிலரும் அரசியலில் நுழைய சரியான நேரத்தை எதிர்நோக்கியுள்ளனர். இந்த நிலையில் ஒருசிலர் புதிய கட்சி தொடங்குகின்றனர் என யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் புதிய கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் சோளக்காட்டு பொம்மைகள் …

Read More »

ஹிட்லருக்கு ஏற்பட்ட முடிவுதான் அவர்களுக்கு

தினகரன் அணியில் உள்ள நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் ஆரல்வாய்மொழியில் பேசினார். அப்போது அவர் தினகரனுக்கு இளஞர்கள் ஆதரவு இருப்பதாக பேசினார். மதிமுகவில் இருந்து வெளியேறிய நாஞ்சில் சம்பத் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்து கொள்கை பரப்பு செயலாளர் ஆனார். ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் சசிகலா அணியில் இருக்கும் நாஞ்சில் சம்பத் டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளராக உள்ளார். பொதுக்கூட்டங்கள் போட்டு மேடைதோறும் டிடிவி …

Read More »

வைரமுத்து மன்னிப்பு கேட்டது பத்தாது

தமிழிசை

ஆண்டாள் பற்றி தெரிவித்த கருத்துகளுக்கு கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்டது பத்தாது என்றும், அவர் மேலும் ஒரு முறை மக்களிடம் மனதார மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் கவிஞர் வைரமுத்து வைணவ பெண் கடவுள் ஆண்டாள் பற்றி தவறான வார்த்தையை குறிப்பிட்டு பேசியதாக சர்ச்சை எழுந்தது. அதனை தொடர்ந்து, பாஜகவை சேர்ந்த ஹெச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன் …

Read More »

இந்த குழந்தைக்கு தேவை நல்ல மனநல ஆலோசனை

ஆண்டாள் பற்றி கவிஞர் வைரமுத்து கூறிய கருத்திற்கு பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நித்யானந்தா ஆசிரமத்தை சேர்ந்த இளம் பெண் துறவி ஒருவர் வைரமுத்துவை ஒருமையில், ஏகத்துக்கும் கொச்சையாக விமர்சித்து வீடியோ வெளியிட்ட விவகாரம் சமூக வலைத்தளங்கள் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இதுபற்றி மூத்த பத்திரிக்கையாளர் பா. கவிதாகுமார் தனது முகநூலில் பதிவுட்டுள்ள பதிவானது: கவிஞர் வைரமுத்துவை விமர்சித்த நித்யானந்தா பீட …

Read More »