Tuesday , July 8 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் (page 32)

தமிழ்நாடு செய்திகள்

சசிகலாவுக்கு பரோல்

சசிகலாவின் கணவர் நடராஜன் இன்று அதிகாலை மரணம் அடைந்த நிலையில் தனது கணவரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள 15 நாட்கள் பரோல் வேண்டும் என்று சசிகலாவின் தரப்பில் விண்ணப்பம் வழங்கப்பட்டது. இந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, நடராஜனின் இறப்பு சான்றிதழ் பெற்றவுடன் சசிகலாவுக்கு பரோல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி, சசிகலாவுக்கு 15 நாள் பரோல் வழங்கியுள்ளது பெங்களூரு சிறை நிர்வாகம். இதனையடுத்து இன்னும் சில …

Read More »

நடராஜன் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்

சசிகலாவின் கணவரும் பத்திரிகையாளரும், அரசியல் ஆலோசகருமான நடராஜன் இன்று அதிகாலை உடல்நலக்கோளாறால் காலமானார். அவருக்கு வயது 74. நடராஜனின் மறைவுக்கு பிரபல அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். திருமாவளவன்: நடராஜனின் மறைவு மொழி, இன உரிமை, ஈழ விடுதலை அரசியல் களத்திற்கு பேரிழப்பு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா: நடராஜனின் மறைவு மொழி, இன உரிமை, ஈழவிடுதலை அரசியல் களத்திற்கு பேரிழப்பு: பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா: …

Read More »

நடராஜன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி

பிரபல பத்திரிகையாளரும், அரசியல் ஆலோசகரும் சசிகலா கணவருமான நடராஜன் இன்று காலை மரணம் அடைந்த நிலையில் அவருக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனார். இந்த வகையில் சற்றுமுன்னர் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பெசண்ட் நகரில் உள்ள நடராஜனின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் துரைமுருகன், பொன்முடி , எ.வ.வேலு உள்ளிட்ட திமுக பிரமுகர்களும் உடனிருந்தனர். நடராஜன் மறைவு குறித்து ஸ்டாலின் கூறியபோது, ‘நடராஜனின் மறைவு …

Read More »

சொத்துக்காக பெற்ற தாயின் தலையை துண்டித்து கொலை செய்த மகன்

புதுக்கோட்டை அருகே சொத்துத் தகராறில் பெற்ற தாயின் தலையை அவரது மகனே வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மறவன்பட்டியைச் சேர்ந்தவர் ராணி(54). இவரது மகன் ஆனந்த்(30). சொத்து தொடர்பாக ராணிக்கும், ஆனந்துக்கும் அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. இன்று காலையில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஆனந்த், தனது தாய் என்றும் பாராமல் ராணியின் தலையை துண்டித்து காவல் …

Read More »

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை பாஜக நிறைவேற்றும் – தமிழிசை

100 தாமரை மொட்டுகளே...: தமிழிசை நம்பிக்கை

உச்ச நீதிமன்ற தீர்ப்பை பாஜக நிறைவேற்றும் என்றும் வரும் 30ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி அதிமுக கட்சியினர் பாஜகவை வெளிப்படையாக எதிர்த்து வருகின்றனர். தமிழகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழக பாஜக கலந்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது. தமிழக உரிமையை மீட்க பாஜக உறுதுணையாக இருக்கும் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருந்தார். மத்திய …

Read More »

நடராஜன் கவலைக்கிடம்

சசிகலா கணவர் நடராஜன் நெஞ்சு வலி காரணமாக சென்னை குளோபல் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே இவருக்கு உடலுறுப்பு மாற்று சிகிச்சை நடைபெற்றுள்ளது. நேற்று திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் சசிகலா கணவர் நடராஜன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் சிக்கி தண்டனை அனுபவித்து வரும் சசிகலா கணவரை காண பரோல் வேண்டி மனு ஒன்றை பிறப்பித்துள்ளார். கணவரின் உடல் கவலைக்கிடமாக இருப்பதால் …

Read More »

கட்சியில் இருந்து விலகிய நாஞ்சில் சம்பத்துக்கு சி.ஆர்.சரஸ்வதி காட்டமான பதில்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்’ என்ற தனி அமைப்பை டிடிவி தினகரன் தொடங்கிய நிலையில் திராவிடத்தையும் அண்ணாவையும் டிடிவி விலக்கிவிட்டதாக கூறி சற்றுமுன் நாஞ்சில் சம்பத் அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த நிலையில் நாஞ்சில் சம்பத்துக்கு ‘அம்மா முன்னேற்ற கழகத்தின் சி.ஆர்.சரஸ்வதி பதிலளித்துள்ளார். அவர் , ‘*திராவிடத்தை டிடிவி புறக்கணித்துவிட்டார் என்று நாஞ்சில் சம்பத் கூறும் காரணத்தை ஏற்க முடியாது. ஜெயலலிதாவை திராவிடத் தலைவியாகவே நாங்கள் பார்க்கிறோம்’ …

Read More »

ஜெயலலிதாவாக நடிக்க ஒருவர் கிடைத்துவிட்டார்

அதிமுக பொதுச் செயலாளர்

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க போவதாக இயக்குநர் ரவிரத்தினம் கூறியுள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க போவதாக இயக்குநர் ரவிரத்தினம் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பல மர்மங்களை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. அவரது காதல் வாழக்கை, அவரது மறைவு உள்ளிட்ட பல மர்மங்கள் அவரது வாழ்க்கையில் உள்ளது குக்றிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் அந்த திரைப்படத்தில் இடம்பெறுமா என்பது கேள்வியாக உள்ளது. மேலும், ஜெயலலிதா …

Read More »

கமல்-விஷால் திடீர் சந்திப்பு

கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2′ திரைப்படம் நேற்று சென்சார் சர்டிபிகேட் பெற்றுவிட்டதால் வெகுவிரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் திரையுலகினர்களின் வேலைநிறுத்தம் தற்போது நடந்து வருவதால் ரிலீஸ் தேதி அறிவிக்க முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் இன்று விஷாலை கமல் தனது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதுவொரு மரியாதை நிமித்த சந்திப்பு என்று கூறப்பட்டாலும் தனது விஸ்வரூபம் 2 படத்தை ரிலீஸ் செய்யும் வகையில் …

Read More »

ஆன்மிக இடமான இமயமலையில் அரசியல் குறித்து பேச விரும்பவில்லை

தனது குருவான பாபாவிடம் ஆசி பெறுவதற்காக ஆன்மிக பயணமாக இமயமலைக்கு சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அங்கு செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது, தமது இமயமலைப் பயணம் அன்றாட வாழ்க்கையைக் காட்டிலும் மாறுபட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார். இமாச்சல பிரதேச மாநிலம் பாலம்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,  தான் யாத்ரீகனாக இமயமலை வந்துள்ளதால், அரசியல் பற்றி இங்கு பேச விரும்பவில்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

Read More »