இந்த பரபரப்பு தணிவதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இணைய சேவை நிறுத்தப்பட்டது. பின்னர் ஒருசில நாட்களில் இயல்புநிலை திரும்பிய பின்னர், பாதுகாப்பிற்காக குவிக்கப்பபட்டிருந்த காவல்துறையினர் அங்கிருந்த வெளியேறினர். ஆனாலும், ஸ்டெர்லைட் ஆலையை சுற்றிலும் உள்ள கிராமப் பகுதிகளில், நள்ளிரவு நேரங்களில் காவல்துறையினர் வீடுவீடாக சென்று ஆண்களை மிரட்டியும் கைது செய்தும் வருகிறார்களாம். காவல்துறையினரின் இந்த அத்துமீறலால் மடத்தூர் கிராம பகுதியை சேர்ந்த பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் ஊர்க்கோயிலில் தங்கி …
Read More »தமிழக அரசுக்கு த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் எச்சரிக்கை!
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி பகுதிகளில் கட்சி கொடியினை ஏற்றி வைக்கவும், கட்சி தொண்டர்களின் இல்ல நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகவும் வந்திருந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். தமிழக முதல்வர் டெல்லி பயணம் சென்றுள்ளது ஆக்கப்பூர்வமான சந்திப்பதாக இருக்க வேண்டும் என்றும், 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் வந்துள்ள தீர்ப்பு முடிவில்லாததாக இருப்பதாகவும், இதுபோன்ற வழக்குகளில் காலகெடுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும், 3-வது நீதிபதி …
Read More »ரஜினி, கமல், திவாகரன் எல்லாம் காணாமல் போவார்கள்
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டது. இதனால் பலர் கட்சியை ஆரம்பிக்கப்போவதாக தெரிவித்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சசிகலாவின் சகோதரர் மன்னார்குடியில் திடீரென திவாகரன் அம்மா அணி என்ற புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கினார். இன்று செய்தியாளர்களை சந்தித்த திவாகரன், தனது கட்சியின் பெயரையும், கட்சி கொடியையும் வெளியிட்டார். முன் வெளியிட்ட அம்மா அணி என்ற கட்சியின் பெயரை மாற்றி, தற்பொழுது அண்ணா திராவிடர் கழகம் …
Read More »பின்னுக்கு தள்ளப்பட்ட புதியதலைமுறை: பழிவாங்கும் நடவடிக்கையா?
பிரபல தமிழ் செய்தி சேனல் புதியதலைமுறை சமீபத்தில் வட்டமேஜை விவாதம் என்ற நிகழ்ச்சியை கோவையில் நடத்தியது. இந்த விவாத நிகழ்ச்சியில் இயக்குனர் அமீர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகவும், இதனால் விவாதத்தில் பிரச்சனை உருவாகியதாகவும் தகவல்கள் வந்தது. இதனையடுத்து அமீர் மீதும் புதிய தலைமுறை மீதும் கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஊடகம் மீதான வழக்குப்பதிவுக்கு வழக்கம்போல் அரசியல் கட்சி தலைவர்கள் இதுவொரு பழிவாங்கும் நடவடிக்கை என அறிக்கை விட்டனர். புதியதலைமுறை …
Read More »டிடிவி தினகரனின் மாஸ்டர் தான் ஸ்டாலின்
டிடிவி தினகரனும் திமுகவும் மறைமுகமாக இணைந்து செயல்பட்டு வருவதாக கடந்த சில நாட்களாக அதிமுக தலைவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த குற்றச்சாட்டை அவ்வப்போது தினகரனும் மறுத்து வருகிறார். இந்த நிலையில் டிடிவி தினகரனின் மாஸ்டரே திமுக செயல் தலைவரான மு.க.ஸ்டாலின் தான் என்று அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார் இதுகுறித்து மேலும் கூறியதாவது: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களை சபரிமலையின் 18 படிகள் என்று கூறியுள்ளார் தினகரன். இவரென்ன …
Read More »நடிகர் ரஜினி தமிழ்ச்சமூகத்தின் எதிரி! சீமான் பரபரப்பு குற்றச்சாட்டு…
நடிகரும், ஆன்மிக அரசியலை முன்னெடுக்கப்போவதாக அறிவித்துள்ள ரஜினிகாந்த் தமிழ்ச்சமூகத்தின் எதிரி ; விரோதி என ரஜினியை மிக காட்டமாக விமர்சித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் சுமார் 13 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துவரக்கூடிய சூழலில், தூத்துக்குடி மக்களை …
Read More »எஸ்.வி.சேகரை பாஜகவிலிருந்து ஒதுக்கி வைத்துள்ளோம்
பெண் பத்திரிக்கையாளர்களை கொச்சைப்படுத்தும் வகையில் முகநூலில் பதிவு வெளியிட்ட விவகாரத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அவரை காவல்துறையினர் கைது செய்யவில்லை. சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு அவரை கைது செய்ய எந்த தடையும் இல்லை என்று நீதிமன்றம் அறிவித்தது. பின்னர் முன் ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். முன் ஜாமீன் வழங்க முடியாது என உச்ச …
Read More »நீட் தேர்வினால் மட்டும்தான் தற்கொலையா ?
நீட் தேர்வினால் தமிழகத்திலும் வட இந்தியாவிலும் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது குறித்து செய்தியாள்ரகள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘இந்த தற்கொலைகள் நீட் தேர்வினால்தான் ஏற்பட்டதா? என்பது குறித்து யோசிக்க வேண்டும் என்று கூறினார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: தற்கொலை செய்து கொண்டவர்கள் தமிழகத்தவர்களா? வட இந்தியர்களா? என்று நான் பிரித்து பார்ப்பதில்லை. ஒரு பரிட்சை எழுதுகிறோம். எதிர்பாராத வகையில் …
Read More »குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்க இயலாது: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் இன்று அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மேட்டூர் அணையில் தற்போது 39.42 அடி தண்ணீர் மட்டுமே இருப்பதால் வரும் 12ந்தேதி மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக நீர் திறக்க வாய்ப்பு இல்லை என்று கூறினார். தமிழகத்தில் இந்த ஆண்டும் குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கூறினார். டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு உதவுவதற்காக அரசு செய்யும் …
Read More »அய்யாக்கண்ணு கைது – முதல்வர் பழனிசாமி விளக்கம்
கேள்வி நேரம் முடிந்த பின் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன், தலைமைச் செயலகத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவரை பார்க்க வந்த விவசாய சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு வரும் வழியிலே தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டதாக பேசினார். இதற்கு பதிலளித்துப் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மாதவரம் – அம்பத்தூர் பகுதிகளில் துண்டுச்சீட்டு பிரச்சாரத்தை செய்ய அனுமதியை பெற்றுவிட்டு, அனுமதி பெறாமல் வடபழனி பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார் எனவும், அதன் காரணமாகவே …
Read More »