Sunday , August 24 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் (page 14)

தமிழ்நாடு செய்திகள்

விடுதலைப் புலிகள் தொடர்பில் வைகோவுக்கு மத்திய அரசு பதில் மனு!

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து வைகோ வழக்கு தொடர உரிமை இல்லை என்று சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பின்னர், விடுதலைப் புலிகள் இயக்கத்தை மத்திய அரசு தடை செய்தது. இந்த தடையை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிக்க, ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டத்தின் …

Read More »

கருணாநிதி தொடர்ந்தும் கவலைக்கிடம்! காப்பாற்ற போராடும் டாக்டர்கள்

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதால், அவரது உயிரைக் காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகின்றனர். திடீர் சுகயீனம் காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மு.கருணாநிதிக்கு இன்று 11ஆவது நாளாக சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் நான்கு நாட்களுக்கு முன்பு கடும் நோய் தொற்றால் கருணாநிதியின் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக அவருக்கு மஞ்சள் காமாலை தாக்கியது. இதற்கிடையே பிளட்டேட்ஸ் எனப்படும் ரத்த தட்டணுக்களும் குறைந்தது. நோய் …

Read More »

யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுப்பேன் – எச்சரித்த மு.க.ஸ்டாலின்

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஆர்.ஆர்.அன்பு பிரியாணி உணவகத்தில் பிரியாணிக்காக திமுக நிர்வாகி யுவராஜ் நடத்திய குத்து சண்டைதான் தற்போது சமூக வலைத்தளங்களில் முக்கிய செய்தியாக இருக்கிறது. யுவராஜின் செயலை கிண்டலடித்து ஏராளமான மீம்ஸ்கள் வலம் வந்து கொண்டிருக்கிறது.அதோடு, ‘ஓசிபிரியாணிதிமுக’ என்கிற ஹேஷ்டேக் நேற்று டிவிட்டரில் ட்ரெண்டிங் ஆனது.. யுவராஜ் விருகம்பாக்கம் திமுக தொண்டரணி பகுதி நிர்வாகியாக இருக்கிறர். இந்த விவகாரம் பூதாகரம் ஆனதால், அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக திமுக தரப்பு …

Read More »

கருணாநிதியின் சொத்துக்கள் எவ்வளவு தெரியுமா? வெளிவரும் சர்ச்சையான கருத்துக்கள்

தி.மு.க தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் தொடர்பிலான பல கருத்துக்கள் ஊடகங்கள் வாயிலாகவும், சமூக வலைத்தளங்களின் ஊடாகவும் பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில், முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்கு பிறகு கருணாநிதியின் உடல்நிலை நன்றாக தேறி வருகிறது என்று மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில் நீதிபதி …

Read More »

எடப்பாடியை மிரட்டும் மத்திய அரசு : பின்னணி என்ன?

முதல்நிலை ஒப்பந்ததாரர் செய்யாதுரை வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.163 கோடி பணமும், 100 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுபோக பல ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மேலும், செய்யாதுரையின் எஸ்.பி.கே. நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளவரும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சம்பந்தியுமான சுப்பிரமணியை வருமான வரித்துறையினர் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளனர். 4வது நாளாக இன்னும் சோதனை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது எடப்பாடி பழனிச்சாமிக்கு கடும் …

Read More »

பாஜகவின் கருத்தை பிரதிபலிக்கும் ரஜினி – அரசியலில் சறுக்குவாரா?

ரஜினிகாந்த்

அரசியலுக்கு வருவேன் என 20 வருடங்களுக்கும் மேலாக திரைப்படங்களில் பஞ்ச் வசனங்கள் பேசிக்கொண்டிருந்தார் நடிகர் ரஜினிகாந்த். பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ‘புதிய இந்தியா பிறந்தது’ என வரவேற்றார். மத்திய அரசுக்கு எதிராக அவர் எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தார். கடந்த டிசம்பர் 31ம் தேதி அரசியலுக்கு வருவதாய் அறிவித்தார். குறிப்பாக ஆன்மிக அரசியலை முன்னெடுப்பதாகவும் கூறினார். நாங்கள் ஏற்கனவே ஆன்மிக அரசியலைத்தான் செய்து கொண்டிருக்கிறோம் என தமிழிசை சவுந்தரராஜன் …

Read More »

8 வழிச்சாலை தேவை தான்… ஆனால்? : ரஜினிகாந்த்

சென்னை – சேலம் இடையே மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலைத் திட்டத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் அமைய உள்ள இந்த திட்டத்தால் ஏராளமான விளை நிலங்கள் பாதிக்கப்படும் என தெரிகிறது. இயற்கை வளங்களை அழித்து அமைக்க போகும் இந்த சாலைக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் தமிழக அரசோ …

Read More »

பாஜக மதவாத அரசியல் செய்கிறதா ?

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஜிஎஸ்டி யை எதிர்த்த பலர் தற்பொழுது அதனால் தமிழகத்திற்கு அதிக வருமானம் கிடைப்பதால், ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் பாஜக மதவாத கட்சி என கூறும் காங்கிரஸ், திமுக ஆட்சியில் இருந்தபோது ஏராளமான ஊழல்களை செய்துள்ளனர். அப்போது தான் ஈழத்தில் தமிழர்கள் குவியல் குவியலாய் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதனை ஏன் மத்தியில் இருந்த …

Read More »

சசிகலாவை நிரந்தரமாக சிறையில் வைக்க தினகரன் சதி – நமது அம்மா செய்தி

சசிகலாவை நிரந்தரமாக சிறையில் வைக்க டிடிவி தினகரன் சதி செய்து வருகிறார் என அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா செய்தி வெளியிட்டுள்ளது. தமிழக அரசு சத்துணவு திட்டத்திற்கு உணவு பொருட்கள் வழங்கும் கிறிஸ்டி நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரில், கடந்த 5ம் தேதி தமிழகம் மற்றும் கர்நாடகாவில் உள்ள கிறிஸ்டி நிறுவனத்திற்கு சொந்தமான 76 இடங்களில் வருமான வரித்துறையின் சோதனையை தொடங்கினர். கிறிஸ்டி நிறுவன உரிமையாளர் …

Read More »

நிர்மலா தேவி விவகாரம் – குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த சிபிசிஐடி: சிக்கிய இரண்டு பேராசிரியர்கள்

பேராசிரியை நிர்மலா தேவி தொடர்பான வழக்கில் சிபிசிஐடி போலீஸார் முதல்கட்ட குற்றப்பத்திரிகையை விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தனர். அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி, துணை பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வழக்கை சிபிசிஐடி மற்றும் ஆளுனர் …

Read More »