ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு பெளத்த முறைப்படி அஞ்சலி அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அவரது சொந்த ஊரான ரம்பொடை வேவண்டனில் உள்ள பூர்வீக இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அன்னாரின் பூதவுடலுக்கு பௌத்த முறைப்படி அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலை நேற்றுக்காலை கொழும்பிலிருந்து எடுத்துச் சென்ற ஹெலிக்கொப்டர் கம்பளையில் மைதானம் ஒன்றில் தரையிறங்கி அங்கிருந்து தரைவழியாக மக்கள் அஞ்சலியுடன் வேவண்டனுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அரசியல் பிரமுகர்கள் …
Read More »இறுதி கிரியைக்கு கூட பங்கேற்க முடியாத நிலையில் தொண்டமானின் மகள் – சோகத்தில் குடும்பம்
இறுதி கிரியைக்கு கூட பங்கேற்க முடியாத நிலையில் தொண்டமானின் மகள் – சோகத்தில் குடும்பம் மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்ள முடியாத நிலையை அவரது மூத்த மகள் கோதை நாச்சியார் எதிர்நோக்கியுள்ளார். மத்திய கிழக்கு நாடான மஸ்கட்டில் இருந்த கோதை இலங்கைக்குவர கடந்த இரண்டு நாட்களாக முயன்று வந்தார். இறுதியாக அரச உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இராஜதந்திர நடவடிக்கையால் இந்தியா ஊடாக அவர் இன்று (29) அதிகாலை கொழும்பு …
Read More »மஹிந்த ஐக்கியத்தின் சின்னம் : சுப்பிரமணியன் சுவாமி
மஹிந்த ஐக்கியத்தின் சின்னம் : சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை ஐக்கியத்தின் சின்னமென கருதுவதாக இந்திய ராஜ்யசபா உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதன்போது இந்தியாவைப் போன்று இலங்கையிலும் சிங்கள பௌத்தர்களும், இந்து தமிழர்களும் ஒரே சமூகத்தினர் என்று குறிப்பிட்டுள்ள அவர் மேலும் கூறியுள்ளதாவது, இந்தியாவில் போன்று இலங்கையிலும் இந்து தமிழர்களும், சிங்கள பௌத்தர்களும் ஒரு சமூகத்தவர்கள், முஸ்லிமும், கிறிஸ்த்தவமும் இல்லாத ஒருவரே இந்து …
Read More »தேர்தலை நடத்துவத்திற்கு 3 மாதத்திற்கு மேல் ஆகலாம் ஜனாதிபதி தெரிவிப்பு
தேர்தலை நடத்துவத்திற்கு 3 மாதத்திற்கு மேல் ஆகலாம் ஜனாதிபதி தெரிவிப்பு தேர்தல்கள் ஆணையாளரின் கருத்துக்களை பார்க்கும் போது நாடாளுமன்ற தேர்தலை நடத்த இன்னமும் மூன்று மாதகாலமாவது செல்லுமென எண்ண வேண்டியுள்ளது என நேற்று (27) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேலும், ‘நீதிமன்ற தீர்ப்பு வந்து 9 தொடக்கம் 11 வாரத்திற்குள் தேர்தல் நடத்தப்படுமென்று தேர்தல்கள் ஆணையாளர் கூறியுள்ளார். அப்படியாயின் இன்னும் மூன்று மாத காலங்களுக்கு …
Read More »தொண்டமானின் இழப்பு சமூகத்திற்கு பேரிழப்பாகும் – ஜனாதிபதி
தொண்டமானின் இழப்பு சமூகத்திற்கு பேரிழப்பாகும் – ஜனாதிபதி நலிவுற்ற தோட்டத் தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக தன்னை அர்ப்பணித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் சமூக வலுவூட்டல், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் அகால மறைவு பற்றி அறிந்து நான் மிகவும் கவலையடைவதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறப்பிற்கு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அதில் …
Read More »தொண்டமானின் வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான் நியமனம்
தொண்டமானின் வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான் நியமனம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவையடுத்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார் என்று இ.தொ.கா.வின் உப தலைவர் செந்தில் தொண்டமான் இன்று தெரிவித்தார். பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னரே இந்த முடிவு எடுக்கபட்டுள்ளதாக செந்தில் தொண்டமான் கூறினார். இந்த சந்திப்பின் போது, முன்னாள் மத்திய …
Read More »புதிதாக 51 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று
புதிதாக 51 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று இன்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 51 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்று இனங்காணப்பட்ட 51 பேரும் யாழ்ப்பாணத்தில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையம் ஒன்றில் இருந்த கடற்படை வீரர்கள் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 732 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 628 …
Read More »இலங்கையில் மீண்டும் கொரோனா – 1,317 தொற்றாளர்கள் ஆக அதிகரிப்பு
இலங்கையில் மீண்டும் கொரோனா – 1,317 தொற்றாளர்கள் ஆக அதிகரிப்பு நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 39 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில், இதுவரை மொத்தமாக 1,317 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. இன்றைய தினம் புதிதாக கொரோனா தொற்றுக்குள்ளான 135 பேர் இனங்காணப்பட்டனர். இன்று இனங்காணப்பட்ட 135 நோயாளர்களில் 127 பேர் குவைத்திலிருந்து நாடு திரும்பிய நிலையில், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தோர் எனவும், 8 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கடற்படையினர் எனவும் அரசாங்கத் …
Read More »பாரிய ஆபத்து காத்திருக்கிறது, மக்களை எச்சரிக்கிறார் அணில் ஜயசிங்க ?
பாரிய ஆபத்து காத்திருக்கிறது, மக்களை எச்சரிக்கிறார் அணில் ஜயசிங்க ? ஊரடங்கு சட்டம் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் நிலையில், மக்கள் சுகாதார நடைமுறைகள், மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற தவறினால் அடுத்த 3 வாரங்களில் இலங்கை மிகமோசமான பின்விளைவுகளை சந்திக்க நோிடும். மேற்கண்டவாறு தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அணில் ஜயசிங்க எச்சரித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், தேர்தல் நடவடிக்கைகளை …
Read More »ஊரடங்கு தொடர்பில் ஜனாதிபதி அதிரடி தீர்மானம்..!
ஊரடங்கு தொடர்பில் ஜனாதிபதி அதிரடி தீர்மானம்..! இலங்கையில் கொரோனா அபாயம் காரணமாக அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்ட நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதுடன், நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படுகின்றது. மேற்படி தகவலை சற்று முன்னர் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இதன்படி 26ம் திகதி தொடக்கம் இலங்கை முழுவதும் ஊரடங்கு சட்டம் இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணிவரையே அமுல்படுத்தப்படும். மேலும் 26ம் திகதி தொடக்கம் கொழும்பு, ஹம்பகா …
Read More »