டெல்லியில் விவசாயிகள் முற்றுகை பேரணி இன்று மீண்டும் தொடங்குகிறது. அங்கே பதற்றமான சூழ்நிலை இதனால் நிலவுகிறது. மத்திய அரசுக்கு எதிரான விவசாயிகளின் டெல்லி முற்றுகை போராட்டம் இன்று மீண்டும் தொடங்குகிறது. இதனால் டெல்லி எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, பயிர்க் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்கள் கடந்த மாதம் 13ம் தேதி டெல்லி நோக்கிய பேரணியை தொடங்கினர். விவசாயிகள் மீது …
Read More »நீருக்கு அடியில் மெட்ரோ ரயில் சேவை – கொல்கத்தாவில் தொடங்கி வைத்தார் மோடி.!
இந்தியாவில் முதன்முதலாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவையை மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சியில் மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ், அம்மாநில பாஜக எம்எல்ஏவும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில், மெட்ரோ ரயில் சேவையை கொடி அசைத்து தொடங்கிவைத்த பிரதமர் மோடி, ரூ. 15,400 மதிப்பிலான திட்டங்களை …
Read More »வீல் சேர் கிடைக்காததால் பயணி மரணம்: ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம்
வீல் சேர் கிடைக்காததால், அமெரிக்காவில் இருந்து மும்பை வந்த 80 வயது முதியவர் உயிரிழந்த விவகாரத்தில் ஏர் இந்தியாவிற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்து விமான போக்குவரத்து கண்காணிப்பு இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டு உள்ளது. கடந்த 12ம் தேதி அமெரிக்காவில் இருந்து வயதான முதிய தம்பதி மும்பை வந்தனர். இதற்காக டிக்கெட் முன்பதிவு செய்யும்போது வீல்சேர் வசதி தேவை எனக் கூறியிருந்தனர். மும்பை வந்ததும், போதுமான வீல் சேர் இல்லாததால் …
Read More »டோலி சாய்வாலாவை சந்தித்து அவரது கைவண்ணத்தில் தயாரான டீயை பருகினார் – பில் கேட்ஸ்
இந்தியாவில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில் கேட்ஸ் இந்தியா வந்துள்ளார். அப்போது, நாக்பூர் சென்ற அவர் டோலி சாய்வாலாவை சந்தித்து அவரது கைவண்ணத்தில் தயாரான டீயை பருகினார். இந்தியாவில் திரும்புகிற திசை எங்கும் புதுமையை காணலாம் என்றும் அதில் ஒன்று இந்த டீ தயாரிப்பு என்றும் பில்கேட்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார். பல லட்சம் …
Read More »2 கைகளையும் இழந்த ஜம்மு காஷ்மீர் பாரா கிரிக்கெட் அணியின் கேப்டன் அமீர் ஹூசைனை சந்தித்தார் சச்சின் டெண்டுல்கர்.
கழுத்தில் பேட்டைப் பிடித்து கிரிக்கெட் விளையாடிய அமீரின் வீடியோ சமீபத்தில் வைரலானபோது, அவரைப் பாராட்டி X தளத்தில் பதிவிட்டிருந்தார் சச்சின். பேட்டி ஒன்றில் சச்சினை சந்திக்க ஆசை என கூறியிருந்தார் அமீர். அதனை நிறைவேற்றும் விதமாக, காஷ்மீர் சென்றுள்ள சச்சின் டெண்டுல்கர் அமீரை சந்தித்துப் பேசி, பேட் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்
Read More »பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக வருகிற 27ம் தேதி தமிழ்நாடு வருகிறார்
27ம் தேதி மதியம் 1.20 மணிக்கு கேரள மாநிலம், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து, விமானம் மூலம் மதியம் 2.06 மணிக்கு கோவை சூலூர் விமான நிலையம் வருகிறார். மதியம் 2.10 மணிக்கு சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் செல்லும் பிரதமர் மோடி அங்கு மாதாப்பூர் பஞ்சாயத்து பகுதியில் பிற்பகல் 2.45 மணி முதல் 3.45 மணி வரை நடக்கும் என் மண், என் மக்கள் பயணம் நிறைவு …
Read More »இந்திய கடற்படை வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு
இந்திய கடற்படை வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இந்திய கடற்படை வீரர்கள் 21 பேர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. மும்பாயில் உள்ள கடற்படை வீரர்களே இவ்வாறு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் மும்பாய் நகரில் உள்ள கடற்படை மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து கடற்படை வீரர்களுடன் தொடர்பை பேணியவர்களை கண்டுபிடிப்பதற்கான பாரிய நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐஎன்எஸ் ஆங்கிரே கடற்படை குடியிருப்பில் தங்கியிருந்த கடற்படையினரே பாதிக்கப்பட்டுள்ளனர். பயனுள்ள …
Read More »நிர்பயா வழக்கு குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர்!
நிர்பயா வழக்கு குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர்! இந்தியாவின் டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் நான்கு பேருக்கும் இன்று அதிகாலை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. கடந்த 2012ம் ஆண்டு காதலனுடன் சென்ற இளம்பெண்ணை ஓடும் பேருந்தில் வைத்து வன்கொடுமை செய்யப்பட்டு பின்னர் இரும்புத் தடியால் அடித்து பேருந்திலிருந்து தூக்கி வீசியெறியப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 5 பேரில் ராம் சிங் என்பவர் சிறையிலேயே தூக்கிட்டுத் …
Read More »கொரோனா பாதிப்பில்லை என உறுதி செய்யபட்ட நபர் பின்னர் உயிரிழப்பு!
கொரோனா பாதிப்பில்லை என உறுதி செய்யபட்ட நபர் பின்னர் உயிரிழப்பு! தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை என பரிசோதனை முடிவில் தெரியவந்த நிலையிலும் தாய்லாந்து இளைஞர் உயிரிழந்துள்ளார். தாய்லாந்தில் இருந்து தமிழகத்துக்கு 7 பேர் கொண்ட குழு சுற்றுலா வந்தது. இவர்களில் டான் ரோசாக் என்பவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் கோவையில் இருந்து அவரை விமானம் மூலம் தாய்லாந்து அனுப்பி வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கு முன்னதாக …
Read More »இந்தியாவில் கொரோனாவால் 3 பேர் பலி – 143 பேர் பாதிப்பு
இந்தியாவில் கொரோனாவால் 3 பேர் பலி – 143 பேர் பாதிப்பு சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவ துவங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகளவில் இந்த வைரசுக்கு 7,982 பேர் உயிரிழந்துள்ளனர். 1,98,400 பேர் பாதிக்கப்பட்டனர். அதில், 82 ,763 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சீனாவில் 3,237 பேர் உயிரிழந்துள்ளனர். 69,614 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். …
Read More »