மலையாள இளம் நடிகர் சித்து பிள்ளையின் உடல் கோவா கடற்கரையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மலையாள திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மலையாள ஆக்ஷன் கிரைம் திரைப்படமான செகண்ட் ஷோ திரைப்படத்தில் பிரபல நடிகர் துல்கர் சல்மானுடன் தனது முதல் படத்தில் நடித்தார் இளம் நடிகர் சித்து பிள்ளை. அதன் மூலம் பிரபலமான அவர் பின்னர் சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். திருச்சூரில் வசித்து வந்த 27 வயதான நடிகர் […]
இந்தியா செய்திகள்
காதல் திருமணம் குறித்து உச்ச நீதிமன்றம் அதிரடி ஆணை
நாட்டின் பல்வேறு பகுதிகளில் சாதி மறுப்பு காதல் திருமணத்தால் பல காதல் ஜோடிகள் கொலை அல்லது தற்கொலைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இதனைத் தடுக்க உச்ச நீதிமன்றம் ஒரு அதிரடி ஆணையை பிறப்பித்துள்ளது. இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் சாதி மாற்று காதல் திருமணம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இதனால் சம்பத்தப்பட்ட காதல் ஜோடியினர் பெற்றோர்கள், உறவினர்களால் கொலை அல்லது தற்கொலைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். குறிப்பாக வட மாநிலங்களில் பொது இடங்களில் காதல் ஜோடிகளைக் கண்டாலே, […]
ஓசூர் அருகே கோர விபத்து
ஓசூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் பேருந்தின் மீது மோதியதில் மாணவர் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். பெங்களூருவில் இருந்து திருப்பத்தூருக்கு அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதேபோல் சென்னையில் இருந்து ஓசூருக்கு ஹோண்டா சிட்டி காரில் 5 பேர் சென்று கொண்டிருந்தனர். நேற்று மாலை ஓசூரை அடுத்த சூளகிரி அருகே கார் வந்தபோது காரின் டயர் திடீரென்று வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை […]
இந்திய அமெரிக்கர் ஒருவருக்கு பிப்ரவரியில் மரண தண்டனை
அமெரிக்காவில் கொலை குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இந்திய அமெரிக்கர் ஒருவருக்கு பிப்ரவரியில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என தகவல் தெரிவிக்கின்றது ஆந்திர பிரதேசத்தினை சேர்ந்தவர் ரகுநந்தன் யண்டமுரி (வயது 32). மின் மற்றும் கம்ப்யூட்டர் அறிவியலில் பொறியியல் படிப்பு படித்துள்ள இவர் எச்1பி விசாவில் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். 61 வயது நிறைந்த இந்திய பெண் மற்றும் அவரது 10 மாத பேத்தி ஆகியோரை பணம் பறிக்கும் திட்டத்துடன் கடத்தி கொலை செய்த […]
எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ளமாட்டோம் இந்தியாவிற்கான அமெரிக்க தூதர்
எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை அமெரிக்கா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் ஜென்னத் ஜஸ்டர் கூறிஉள்ளார் இந்தியாவிற்கான புதிய அமெரிக்க தூதராக பொறுப்பு ஏற்றுக் கொண்ட ஜென்னத் ஜஸ்டர், பாகிஸ்தானுக்கு பயங்கரவாத விவகாரத்தில் மறைமுகமான தகவலை தெரிவித்து உள்ளார். அமெரிக்கா பயங்கரவாத விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான நடவடிக்கையை எடுத்து வருகிறது. அமெரிக்காவின் நடவடிக்கையை அடுத்து பயங்கரவாத இயக்கங்கள் நிதிஉதவி பெறுவதற்கு தடை விதித்து பாகிஸ்தான் அறிவிப்பு வெளியிட்டு […]
நடைபாதையில் வாழ்பவர்களின் நிலை என்ன?
இந்திய அரசின் சார்பில் நாடு முழுவதும் இதுவரை 90 கோடி பேருக்கு ஆதார் அட்டைகள் அளிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த கேள்வி ஒன்று தற்போது எழுந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் வீடுகளின்றி நடைபாதைகளில் வசித்து வருபவர்களுக்கு அரசின் சார்பில் காப்பகங்கள் அமைத்து தர வேண்டும் என்று வழக்கு தொடர்ப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இது குறித்து விவாதிக்கும் போது, முகவரி இல்லாததால் ஆதார் அட்டை பெறாத […]
தற்கொலைக்கு அனுமதி வேண்டும்
மும்பையை சேர்ந்த வயதான ஒரு தம்பதி தற்கொலை செய்துக்கொள்ள அனுமதி வேண்டும் என்று குடியரசு தலைவருக்கு மனு அனுப்பியுள்ளனர். தெற்கு மும்பையில் வசித்து வரும் நாரயணன் லவாடே(88) மற்றும் அவரது மனைவி ஐராவதி(78) தற்கொலை செய்துக்கொள்ள அனுமதி கேட்டு குடியரசு தலைவருக்கு மனு அனுப்பியுள்ளனர். அதில், நான் மற்றும் எனது மனைவி நல்ல உடல் நலத்துடன் உள்ளோம். எங்களுக்கு எந்தவித கடுமையான வியாதியும் இல்லை. நாங்கள் சமூகத்திற்கோ அல்லது எங்களுக்கோ […]
காலையில் பி.எச்.டி மாணவி, மாலையில் புரோட்டா மாஸ்டர்
கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மாலையில் கல்லூரி முடிந்தவுடன் வீட்டுக்கு செல்லும் நிலையில் சினேகா என்ற 28 வயது பிஎச்.டி மாணவி மட்டும் தன்னுடைய புரோட்டா கடைக்கு செல்கிறார். ஆம், காலையில் இவர் ஒரு பிஎச்டி மாணவி. மாலையில் ஒரு புரோட்டா மாஸ்டர். பிளாட்பாரத்தின் ஓரத்தில் ஒரு தார்ப்பாயின் அடியில் தான் இவரது கடை. ஸ்டவ், சிலிண்டர், மற்றும் பாத்திரங்களுடன் செல்லும் இவர் சரியாக மாலை 6 மணியில் இருந்து இரவு […]
‘பாபா’ முத்திரைக்கு உரிமை கோரும் மும்பை நிறுவனம்
அரசியல் கட்சி தொடங்க நடவடிக்கை எடுத்து வரும் ரஜினிகாந்த், பிரத்யேகமான முத்திரை ஒன்றை பயன்படுத்தி வருகிறார். 2 நடுவிரல்கள் மற்றும் கட்டை விரலை மடித்தும், ஆள்காட்டி விரல் மற்றும் சுண்டு விரலை உயர்த்தியும் காண்பிக்கும் அந்த முத்திரையை, தனது ‘பாபா’ படத்திலேயே பயன்படுத்தி இருந்தார். இந்த ‘பாபா’ முத்திரை அவரது ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சிகளில் மேடையில் பொறிக்கப்பட்டு இருந்ததுடன், அவரது ரசிகர்களும் அந்த முத்திரையுடன் கூடிய அட்டைகள், கொடி போன்றவற்றை […]
தாயைக் கொன்ற பேராசிரியர்!
உடல்நிலை சரியில்லாத தாயைச் சொந்த மகனே மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்த கொடூர சம்பவம் குஜராத்தில் நிகழ்ந்துள்ளது. சந்தீப் நத்வானி என்பவர் குஜராத் மாநிலம், ராஜ்கோட் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணிப்புரிந்து வந்தார். இவரின் 64 வயது தாயார் ஜெயாஸ்ரீ பென் (Jayshreeben) பல நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருந்துள்ளார். கடந்த செப்டம்பர் 29-ம் தேதி ஜெயாஸ்ரீ மாடியிலிருந்து கீழே விழுந்து சம்பவ […]





