இந்தியா செய்திகள்

ஜூன் மாதத்துக்குள்

சோனியா காந்தி சென்னை வரும் தேதி அறிவிப்பு

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் சிலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைக்க ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் இந்த சிலை திறப்பு விழாவிற்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வருவார் என்று கூறப்பட்டது. இருப்பினும் சிலை திறப்பு தேதி முடிவு செய்யமால் இருந்தது. இந்த நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க சோனியா காந்தி சென்னை வரவுள்ளார் என்ற உறுதி செய்யப்பட்ட செய்தி சற்றுமுன் திமுக […]

ஏழு தமிழர்களின் விடுதலை குறித்து ஆளுநர் மாளிகையின் அறிவிப்பு

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலை தொடர்பான விவகாரத்தில் இந்திய அரசியலமைப்பின் சட்டப்படி நியாயமான முறையில் உரிய முடிவு எடுக்கப்படும் என தமிழக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. அத்துடன் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க தேவையான ஆலோசனைகள் நடத்த வேண்டியுள்ளது என்றும் ஆளுநர் மாளிகை குறிப்பிட்டுள்ளது. ஏழு தமிழர்களின் விடுதலை தொடர்பில் ஆளுநர் அலுவலகத்தால் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தமிழக அமைச்சரவையின் பரிந்துரை […]

ஒரே வீட்டில் 11 பேர் தூக்கில் தொங்கி சாவு! நெஞ்சை உறைய வைக்கும் காரணம்

டெல்லியில் நேற்று ஒரு வீட்டிலிருந்து கைகள், கால்கள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாகத் தொங்கிய 11 பேர் கண்டெடுக்கப்பட்டனர். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் தற்போது மேலும் பல உண்மைகள் வெளியாகியுள்ளன. அவர்கள் வீட்டிலிருந்து போலீசார் கைப்பற்றிய டைரியில் எப்படி தற்கொலை செய்து கொள்வது? எந்த நாளில் செய்யலாம்? உள்ளிட்ட பல்வேறு குறிப்புகளை இறப்பதற்கு முன் அவர்கள் எழுதி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த டைரியில் சொர்க்கத்தை அடையும் […]

பாஜகவுடன் கூட்டணி இல்லை – குமாரசாமி திட்டவட்டம்

கர்நாடகாவில் ஆட்சி அமைப்பது தொடர்பான விவகாரத்தில், பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என மதசார்பற்ற ஜனதா தளம் முதலமைச்சர் வேட்பாளர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டி கிடைக்காததால், கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதில் குழப்பம் நீடிக்கிறது. திடீர் திருப்பமாக, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு கொடுக்க முன்வந்துள்ளது. அதேசமயம், 104 தொகுதிகளை பெற்றுள்ள பாஜக ஆட்சி அமைக்க அழைப்பு […]

Narendra Modi

காவிரி வாரியம் இல்லை

காவிரி நீர் விவகாரத்தில் அமைக்கப்பட்டது குழுதான் எனவும், அது காவிரி மேலாண்மை வாரியத்திற்கு நிகரானது எனவும் மத்திய நீர் வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் முடிந்து விட்ட நிலையில், காவிரி நீர் வழக்கு இன்று உச்ச நீதிமன்றதில் இன்று மீண்டும் தொடங்கியது. அப்போது, காவிரி நீருக்கான வரைவு திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. சீலிடப்பட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த வரைவுக்கு என்னென்ன […]

பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து – விபத்தில் 7 பேர் பலி

இமாச்சலப் பிரதேசத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இமாச்சலப் பிரதேசம் மாநிலம் சோலான் மாவட்டத்தில் பேருந்து ஒன்று பயணிகளோடு சோலான்-ராஜ்கார் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தது. பேருந்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் சென்று கொண்டிருந்தனர். நயி-நேட்டி என்ற இடத்தில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சிக்கி பேருந்தில் பயணித்த 7 பேர் […]

கேரளாவில் திருநங்கை திருநம்பி காதல் திருமணம்!

கேரள மாநிலத்தில் சூர்யா என்ற திருநங்கையும், இஷான் என்ற திருநம்பியும் காதலித்து சட்டப்படி திருமணம் செய்துக்கொண்டனர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த இஷான் பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர். சூர்யா பெண்ணாக ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவர். இவர்கள் இருவரும் நண்பர்களாக அறிமுகமாகி காதலர்களாக மாறினார்கள். இதைத்தொடர்ந்து இவர்கள் திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுத்து பெற்றோர் சம்மதத்துடன் சட்டப்படி திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களது திருமணம் கோலகலமாக நடைபெற்றது. மேலும் சட்டப்படி நடைப்பெற்ற […]

பயன்பாட்டில் இல்லாத 12 ஆயிரம் ஏக்கர் நிலத்தை விற்க ரெயில்வே முடிவு

நாடு முழுவதும் வளர்ச்சிப்பணிகளுக்காக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை 100 ஆண்டுகளுக்கு முன்பு ரெயில்வே இலாகா கையகப்படுத்தியது. இது தவிர அகல ரெயில் பாதை திட்டத்துக்காகவும் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் பெரும்பாலான மாநிலங்களில் மீட்டர் கேஜ் ரெயில் பாதை அகல ரெயில் பாதைகளாக மாற்றப்பட்டு விட்டன. இந்த பாதைகள் அகற்றப்பட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் அப்படியே வீணாக கிடக்கிறது. இதையடுத்து தன்னிடம் உபரியாக உள்ள 12 ஆயிரத்து 66 […]

தமிழக மாணவர்களுக்கு கேரளாவில் ‘நீட்’ தேர்வு மையம் ஒதுக்கியது ஏன்?

மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் ‘நீட்’ எனப்படும் தேசிய நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக மாணவர்களுக்கு தேர்வு மையங்கள் ஒதுக்கியதில் மிகப்பெரும் குளறுபடி நடந்தது. கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்கள் மட்டுமின்றி, ராஜஸ்தான், சிக்கிம் போன்ற வட மாநிலங்களிலும் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன. இதனால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். இந்த மாணவர்களுக்கு மாநில அரசு, தொண்டு […]

மூன்று நாடுகளுக்கு பயணம் செய்கிறார் வெங்கையா

புதுடில்லி: துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு பதவியேற்ற பின்னர் முதல்முறையாக 5 நாள் பயணமாக 3 நாடுகளுக்கு செல்கிறார். இது குறித்து துணை ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாவது, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வரும் 6-ம் தேதி கவுதமாலா சென்று அங்கு அந்நாட்டு அதிபர் ஜிம்மி மொரலெஸ், துணை ஜனாதிபதி ஜாபத் கேப்ரெரா ஆகியோரை சந்திக்கிறார். 7-ம் தேதி பனாமா செல்கிறார். அங்கு பனாமா அந்நாட்டு அதிபர் ஜுவான் […]