Saturday , November 16 2024
Home / தமிழ்மாறன் (page 40)

தமிழ்மாறன்

உமாஓயா திட்டத்துக்கு விரைவில் தீர்வு : அரசு திட்டவட்டம்

உமாஓயா திட்டத்தை நிறுத்த முடியாது. 75வீதமான பணிகள் முடிவடைந்துள்ளதால் மக்களுக்கு பாதுகாதுகாப்பான முறையில் திட்டத்தை முன்னெடுத்து செல்வதே சிறந்ததாக அமையும் என்று சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இத்திட்டம் குறித்து எடுக்கப்பட்டுள்ள முடிவுகளாவது,   • உரிய ஆய்வுகளினை மேற்கொண்டு …

Read More »

ஐ.நாவை பகைத்துக்கொண்டால் எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் : ராஜித எச்சரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகளை பாதுகாக்கும் அனைத்து உடன்படிக்கைகளிலும் நாம் கைச்சாத்திட்டுள்ளோம். ஐ.நாவின் விசேட நிபுணர்கள் இங்கு வரும் போது அவர்களுக்கான வசதிகளை நாம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியது கட்டாயனமானது. ஐ.நாவை பகைத்துகொண்டு எம்மால் சர்வதேசத்தில் செயற்பட முடியாது என்று அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. ஐ.நாவின் சிறப்பு நிபுணர் இலங்கை குறித்து தெரிவித்த கருத்துகள் …

Read More »

ஐரோப்பிய சந்தையில் பிரவேசிப்பதற்கான தடையை உடைத்தெறிந்துள்ளோம்

ஐரோப்பிய சந்தையில் பிரவேசிப்பதற்கான தடையை உடைத்தெறிந்துள்ளோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஐரோப்பிய வர்த்தக மண்டலம் நேற்று கொழும்பில் இன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்வாறு கூறினார். அவர் மேலும் வலியுறுத்தியதாவது, ஆடை உற்பத்தியை மட்டும் மட்டுப்படுத்தி பயணித்த கைத்தொழில் உற்பத்தில் இன்று பல்வேறு உற்பத்திகளை நோக்கி விரிவடைந்துள்ளது. கண்டிமுதல் அப்பாதோட்டை வரை கைத்தொழில் வலயத்தை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். சிலர் இரண்டு …

Read More »

புதிய அரசமைப்புக்கு சர்வதேச பங்களிப்பு அவசியம் : சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சரிடம் சம்பந்தன் எடுத்துரைப்பு

தேசிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் அதற்கு சர்வதேச ஆதரவளிக்க வேண்டும் என்றும் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனிடம் எடுத்துரைத்தாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். ஐந்துநாள் உத்தியோகப்பூர் விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலக்கிருஷணன் மற்றும் எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமான சந்திப்பு இன்று மாலை எதிர்கட்சியின் …

Read More »

ஜெருசலேம்: துப்பாக்கிச் சூடு நடந்த பழைமையான மசூதி மீண்டும் திறப்பு – இஸ்லாமியர்கள் மகிழ்ச்சி

இஸ்ரேல் நாட்டின் தலைநகரான ஜெருசலேமில் பாலஸ்தீனியர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் அதிகாரிகள் பலியானதால் மூடப்பட்ட அல் அக்ஸா மசூதி இன்று மீண்டும் திறக்கப்பட்டதால் அங்குள்ள இஸ்லாமியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கு இடையே அரை நூற்றாண்டு காலத்துக்கும் அதிகமாக தீராப்பகை நீடித்து வருகிறது. இஸ்ரேல் நாட்டை மீண்டும் தங்கள் வசப்படுத்த பாலஸ்தீனமும், பாலஸ்தீனத்தை முழுமையாக ஆக்கிரமித்து கொள்ள இஸ்ரேலும் முயன்று வருகின்றன. இதேபோல், இஸ்ரேல் நாட்டு …

Read More »

வெனிசுலாவில் அதிபருக்கு எதிரான வாக்கெடுப்பில் பெண் சுட்டுக்கொலை

வெனிசுலாவில் அதிபருக்கு எதிரான வாக்கெடுப்பின் போது மர்ம நபர்கள் தீடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர் பதவி விலக வலியுறுத்துகின்றனர். இப்போராட்டம் கடந்த ஏப்ரல் முதல் நடைபெற்று வருகிறது. அதில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் மற்றும் போலீஸ்- ராணுவம் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். …

Read More »

ஆப்கானிஸ்தான் எல்லையில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது பாக். ராணுவம் தாக்குதல் – குண்டுவீச்சு

ஆப்கானிஸ்தான் எல்லையில் பதுங்கி இருந்த ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் தற்போது ஐ.எஸ்.தீவிரவாதிகளின் கை ஓங்கி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் பாகிஸ்தானில் பல தாக்குதல்களை நடத்தி உள்ளனர். அவர்கள் ஆப்கானிஸ்தானில் வலுவாக உள்ளனர். எல்லை தாண்டி வந்து பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தி விட்டு மீண்டும் ஆப்கானிஸ்தானுக்குள் சென்று விடுகின்றனர். எனவே, ஆப்கானிஸ்தான் எல்லையில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் …

Read More »

எமது மண்ணில் இருந்து எம்மைத் துரத்தலாம் என நினைக்காதீர்கள்: ரவிகரன்

எமது மண்ணில் இருந்து எம்மைத் துரத்தலாம் என நினைத்து, இளைஞர்களின் மனநிலையினை மீண்டும் வேறு திசைகளுக்கு மாற்றாதீர்கள் என வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். முள்ளியவளையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது இளைஞர்கள் இன்று ஆக்கபூர்வமான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். எமது இளைஞர்களின் பலத்தினை தெரிந்தவர்கள் இன்று அரசாங்கத்தில் இனவாதிகளாக இருக்கின்றார்கள். முல்லைத்தீவில் சாதித்த எமது …

Read More »

ஜனாதிபதி- பிரதமரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், போலி ஆவணங்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகள் இன்று இடம்பெற்றன. இந்த வழக்கில் முதலாம் மற்றும் இரண்டாவது சாட்சியாளர்களாக ஜனாதிபதியும், பிரதமரும் பெயரிடப்பட்டுள்ள நிலையில், அவர்களை நீதிமன்றத்தில் …

Read More »

துரோகிகள் பட்டியலில் இருந்த குமார் பொன்னம்பலத்தை நாமே காப்பாற்றினோம்: கோவிந்தன் கருணாகரம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் துரோகிகள் பட்டியலில் இருந்த குமார் பொன்னம்பலத்தை நாமே காப்பாற்றினோம் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) 28 வது வீர மக்கள் தினம் மட்டக்களப்பு பல நோக்கு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நேற்றையதினம் (சனிக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இதனைத் தெரிவித்தார். இது குறித்த அவர் மேலும் தெரிவிக்கையில், “புலிகளின் துரோகிகள் பட்டியலில் …

Read More »