வடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தல் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயை நேற்று டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசினார். வடகொரியா கடந்த வெள்ளிக்கிழமை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. இந்த ஏவுகணையால் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அமெரிக்க நகரங்களையும் தாக்க முடியும். ஏற்கனவே இதேபோன்ற ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தி இருந்ததால் 2-வது சோதனையால் அமெரிக்கா கடும் […]
Author: தமிழ்மாறன்
வெனிசுலா அதிபர் மதுரோவுக்கு அமெரிக்கா திடீர் தடை – சர்வாதிகாரி என கடும் விமர்சனம்
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு அமெரிக்க நிர்வாகம் தடை விதித்துள்ளது. மதுரோ ஒரு சர்வாதிகாரி என்றும் அமெரிக்கா கடுமையாக விமர்சித்துள்ளது. தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் புதிய அரசியலமைப்பு சட்டம் இயற்றுவதற்காக அதிபர் நிக்கோலஸ் மதுரோ முடிவு செய்திருந்த நிலையில், இதற்கான அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களை நியமிப்பதற்கான தேர்தல் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இதனிடையே, எதிர்க்கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் பாராளுமன்றத்தை கலைக்கும் நோக்கில் நடத்தப்படும் இந்த தேர்தலை […]
நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக கிரிமினல் வழக்கு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவரது 2 மகன்கள், மகள் மற்றும் மருமகன் மீது 4 கிரிமினல் வழக்குகளை அந்நாட்டு ஊழல் தடுப்பு பிரிவு பதிவு செய்தது. நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக கிரிமினல் வழக்கு கராச்சி: பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவின் மூலம் பதவி இழந்தார். வருமானத்துக்கு அதிகமாக இவரது மகன்கள் மற்றும் மகள் வெளிநாடுகளில் சொத்து […]
வடக்கு மாகாண ஆளுநர் காங்கேசன்துறை கடற்படைத்தளத்திற்கு விஜயம்!
வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே வடக்கு மாகாண கடற்படைத் தளபதி ஜெயந்த டி சில்வாவின் அழைப்பின் பேரில் காங்கேசன்துறை கடற்படைத்தளத்திற்கு விஜயம் செய்தார். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இந்த விஜயத்தின் போது விடுவிக்கப்பட்ட மயிலிட்டி துறைமுகம் மற்றும் காரைநகர் துறைமுகம் ஆகியவற்றையும் ஆளுநர் பார்வையிட்டுள்ளார். கடற்படையினருடன் கலந்துரையாடிய ஆளுநர் யாழ் குடாநாட்டில் போதைப்பொருள் உள்நுழைவதை தடுப்பதற்கு கடற்படையினர் மேற்கொண்டுவரும் பணிகளை பாராட்டுவதாக இதன்போது தெரிவித்திருந்தார்.
வித்தியா வழக்கில் தலைமறைவான ஸ்ரீகஜன் விரைவில் கைது: பொலிஸ்மா அதிபர்
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் தலைமறைவாகியுள்ள உதவிப்பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜனைக் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் என பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார். யாழ்.பொலிஸ் தலைமையத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”வித்தியாவின் படுகொலை வழக்கில் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சம்பந்தப்பட்டுள்ளதுடன், அவருடன் உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜனும் தொடா்புபட்டுள்ளார். […]
ரவிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அதனை ஐ.தே.க. தோற்கடிக்கும்
அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படுமாயின் அதனை ஐக்கிய தேசியக் கட்சி தோற்கடிக்கும் என்று அமைச்சரும் அக்கட்சியின் பொதுச் செயலாளருமான கபீர் ஆஸீம் தெரிவித்தார். சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் நிரூபணம் இல்லாதவையாகும். குற்றச்சாட்டுகள் நிரூபணமாகும் வரை அல்லது நிராகரிக்கப்படும் வரை ஐ.தே.க. அவருக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தையுத் தோற்கடிக்க […]
எனது ஆசிர்வாதமின்றி ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு அரசமைப்பின் பிரகாரம் முடியாது
எனது ஆசிர்வாதமின்றி ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு அரசமைப்பின் பிரகாரம் முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஹிங்குராக்கொட இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். நாடாளுமன்றத்தை 113 ஆசனங்களை கைப்பற்றினால் ஆட்சியை பிடித்துவிடலாம். அதன்பின்னர் ஜனாதிபதியினதும், அரசினதும் ஆட்டம் முடிவடைந்துவிடும் என கூட்டு எதிரணி கூறிவருகிறது. அது வெறும் கனவு மாத்திரமே. நாட்டின் முன்னேற்றத்துக்கான தடைகளை அகற்றி, தற்போதைய அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது. எனினும், […]
அம்பாந்தோட்டை துறைமுகத்தை மஹிந்த ஆட்சியில் கைப்பற்றுவோம்
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் மேர்ச்சன்ட்ஸ் ஹோல்டிங் நிறுவனத்துக்குக் குத்தகைக்கு வழங்கும் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில், மஹிந்த ஆட்சியின்போது அது மீளப்பெறப்பட்டு மக்கள் மயப்படுத்தப்படும் என்று முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான பஸில் ராஜபக்ஷ தெரிவித்தார். அம்பாந்தோட்டை முறைமுகத்தை சீனாவுக்குக் குத்தகைக்கு வழங்கும் ஒப்பந்தம் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட நாளானது நாட்டுக்கு துக்கதினமாகும். குறித்த உடன்படிக்கை […]
வட கொரியாவுக்கு மிரட்டல்: கொரிய தீபகற்பத்தின் மீது சீறிப் பாய்ந்த அமெரிக்க போர் விமானங்கள்
வட கொரியாவின் ஏவுகணை பரிசோதனைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க விமானப்படையை சேர்ந்த இரு B-1B ரக போர் விமானங்கள் வட கொரியாவின் மீது பறந்தன. வட கொரியாவின் ஏவுகணை பரிசோதனைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க விமானப்படையை சேர்ந்த இரு B-1B ரக போர் விமானங்கள் வட கொரியாவின் மீது பறந்தன. ஐ.நா. சபை மற்றும் அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்பை மீறி வட கொரியா தொடர்ந்து […]
கத்தார் மீது மேலும் தடைகளை விதிக்கும் திட்டமில்லை என அரபு நாடுகள் அறிவிப்பு
வளைகுடா நாடான கத்தார் மீது ஏற்கனவே விதிக்கப்பட்ட தடைகள் தொடர்வதாகவும், மேலும் சில தடைகள் விதிக்கும் திட்டமில்லை எனவும் சவூதி, ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட அரபு நாடுகள் தெரிவித்துள்ளன. வளைகுடா நாடான கத்தார் மீது ஏற்கனவே விதிக்கப்பட்ட தடைகள் தொடர்வதாகவும், மேலும் சில தடைகள் விதிக்கும் திட்டமில்லை எனவும் சவூதி, ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட அரபு நாடுகள் தெரிவித்துள்ளன. பயங்கரவாதத்துக்கு கத்தார் நாடு துணை போவதாக எழுந்த குற்றச்சாட்டு காரணமாக […]





