ரவிராஜ் கொலை விவகாரம்: நேவி சம்பத்திற்கு பிடியாணை

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலையின் பிரதான சந்தேகநபரான நேவி சம்பத்திற்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) இவ் உத்தரவை பிறப்பித்துள்ளது. ரவிராஜ் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருந்த ஐந்து சந்தேகநபர்களும் …

ரவிராஜ் கொலை விவகாரம்: நேவி சம்பத்திற்கு பிடியாணை Read More

முல்லைத்தீவில் வெளிச்ச வீடு அமைக்க பிரேரணை நிறைவேற்றம்

மாவட்ட மீனவர்களுக்கான வெளிச்ச வீட்டை உடன் அமைக்குமாறு கோரும் பிரேரணை, வடக்கு மாகாண சபையில் இன்று (வியாழக்கிழமை) நிறைவேற்றப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் 100ஆவது அமர்வு இன்று (வியாழக்கிழமை) நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், மேற்படி வெளிச்ச வீட்டை அமைக்குமாறு கோரி கடந்த …

முல்லைத்தீவில் வெளிச்ச வீடு அமைக்க பிரேரணை நிறைவேற்றம் Read More

புலிகள் மீதான தடைநீக்கம் தமிழ் அரசியலுக்கு கிடைத்த அங்கீகாரம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத கறுப்புப் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கப்பட்டமையானது, தமிழ் மக்களின் அரசியலை சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ளதை வெளிப்படுத்துகின்றதென அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார். குறித்த தடை நீக்கம் தொடர்பாக கிளிநொச்சியில் இன்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு …

புலிகள் மீதான தடைநீக்கம் தமிழ் அரசியலுக்கு கிடைத்த அங்கீகாரம் Read More

உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரது மனைவிக்கு மீண்டும் பொலிஸ் பதவி!

யாழ். நல்லூர் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த உப பொலிஸ் பரிசோகர் ஜீ.எம்.சரத் ஹேமச்சந்திரவின் மனைவிக்கு பொலிஸ் உப பரிசோதகர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் இந்தப் பதவி உயர்வுடன் கூடிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சரத் ஹேமச்சந்திரவின் மனைவி, …

உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரது மனைவிக்கு மீண்டும் பொலிஸ் பதவி! Read More

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தடையை நீக்கியது ஐரோப்பிய ஒன்றியம்

விடுதலைப் புலிகள் இயக்கத்தை தீவிரவாத கறுப்புப் பட்டியலில் இருந்து ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் நீதிபதிகள் இன்று இந்த தீர்ப்பை அளித்துள்ளனர். 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தாக்குதல்களை நடத்தும் ஆபத்து …

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தடையை நீக்கியது ஐரோப்பிய ஒன்றியம் Read More

யாழ். நீதிபதி இளஞ்செழியன் தமிழ்தேசத்தின் சொத்து

உலகத்திற்கு மனிதாபிமானத்தை கற்றுக் கொடுத்த நீதிபதி இளஞ்செழியன் தமிழ்தேசத்தின் சொத்து என த.தே.மக்கள் முன்னணியின் மட்டுமாவட்ட அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார். யாழில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தினை கண்டித்து அவர் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையின் மூலமாகவே இதனைக் …

யாழ். நீதிபதி இளஞ்செழியன் தமிழ்தேசத்தின் சொத்து Read More

வவுனியாவில் வாள்வெட்டு: ஒருவர் படுகாயம்

வவுனியா, சமனங்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் வசிக்கும் சுப்பிரமணியம் சத்தியசீலன் (வயது – 27) என்பவருக்கும் அப் பகுதியைச் …

வவுனியாவில் வாள்வெட்டு: ஒருவர் படுகாயம் Read More

முல்லைத்தீவு மாவட்டத்தில் 2,296 மாற்றுத்திறனாளிகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் 2,296 மாற்றுத்திறனாளிகள் வசித்து வருவதாக மாவட்ட செயலகப் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேறிய மக்களில் பல்வேறு தேவையுடைய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில், கரைத்துரைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் 444 மாற்றுத்திறனாளிகளும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவில் …

முல்லைத்தீவு மாவட்டத்தில் 2,296 மாற்றுத்திறனாளிகள்! Read More

சொந்த இடத்தில் அகதி வாழ்க்கை: வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

வவுனியா தாலிக்குள மக்கள் தமக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட வேண்டும் எனக் கோரி இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த பிரதேசத்தில் கடந்த பத்து வருடங்களாக வசித்து வருகின்ற போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த சுமார் முப்பது குடும்பங்களுக்கும், உப குடும்பங்களுக்கும் இதுவரை வீட்டுத்திட்டம் …

சொந்த இடத்தில் அகதி வாழ்க்கை: வவுனியாவில் ஆர்ப்பாட்டம் Read More

எரிபொருள் விநியோகம் இன்றுமாலை முதல் வழமைக்குத் திரும்பும்

எரிபொருள் விநியோகம் இன்றுமுதல் வழமை நிலைமைக்கு திரும்பும் என்று அரசு தெரிவித்தது. இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரட்ன மேலும் தெரிவித்ததாவது, வேலைநிறுத்தம் தொடர்பாக அரசு பொது மக்களின் நலனைக்கருத்திற்கொண்டு மேற்கொண்டுள்ள …

எரிபொருள் விநியோகம் இன்றுமாலை முதல் வழமைக்குத் திரும்பும் Read More