பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக, சட்டமா அதிபருடன் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துரையாடவுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பத்தாரிடம் வடக்கு முதல்வர் இதனை தெரிவித்துள்ளதோடு, அவர்களை விடுவிப்பதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுமென குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, இப்பிரச்சினை தொடர்பாக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமிழ் அரசியல் கைதிகள் பலர், எவ்வித வழக்குகளும் தாக்கல் செய்யப்படாமல் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. […]
Author: தமிழ்மாறன்
கோப்பாய் வாள்வெட்டுச் சம்பவம்: மேலும் இருவர் கைது
யாழ். கோப்பாய் பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சந்தேகத்தின் பேரில், மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்.பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று (வியாழக்கிழமை) இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ். நல்லூர் அரசடி வீதியைச் சேர்ந்த முத்து எனப்படும் யோகராசா சதீஸ் மற்றும் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த அருள்சீலன் பிரட்றிக் தினேஸ் ஆகிய இருவமே கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, அதனைத் தொடர்ந்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக யாழ். பாதுகாப்புப் […]
உலக தமிழராய்ச்சி மாநாட்டு யாழ்ப்பாணத்தில்
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் மற்றும் யாழ்.பல்கலைக்கழகம் இணைந்து 13ஆவது உலக தமிழராய்ச்சி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் 5ஆம், 6ஆம் திகதிகளில் நடாத்த விருக்கின்றது. இம்மாநாட்டில் இந்தியா, இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளை சேர்ந்த 200 பேராளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். 1974ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4ஆவது உலக தமிழராய்ச்சி மாநாட்டில் உருவாக்கப்பட்ட உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் மற்றும் யாழ்.பல்கலைக்கழகம் இணைந்து மேற்படி 13ஆவது உலக தமிழராய்ச்சி மாநாட்டை நடத்தவுள்ளது. இதன்படி […]
வடக்கின் மீது கண்வைத்துள்ள அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர்
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள லெப்.கேணல் டக்ளஸ் ஹெஸ், முதற்கட்டமாக வடக்கு மாகாணத்தின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார். அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகராக கடந்த மாத இறுதியில் லெப்.கேணல் டக்ளஸ் ஹெஸ் பொறுப்பேற்றிருந்தார். முதலில் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர், இராணுவத் தளபதி உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசிய அவர், அடுத்த கட்டமாக வடக்கிலுள்ள படைத்தளங்களுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்தார். கடந்த 30ஆம் நாள் கிளிநொச்சி படைகளின் […]
மனதில் வஞ்சத்தினை வைத்துக் கொண்டு நல்லிணக்கம் பேச முடியாது: நஸீர் அஹமட்
மக்களின் மனதில் வஞ்சத்தினை வைத்துக் கொண்டு நல்லிணக்கத்தினைப் பேச முடியாது என கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற தேசிய நல்லிணக்க நிகழ்ச்சித்திட்டம் தொடா்பான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”இன்னுமொரு இனத்தினை நசுக்கும் விரோத மனப்பான்மையைக் கொண்டிருக்கும் மக்களால் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது. அதேவேளை ஒரு சிலரின் […]
மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டால் மட்டுமே நிரந்தர சமாதானம் ஏற்படும்: இரா.சம்பந்தன்
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் நிரந்தரமாகத் தீர்க்கப்பட்டால் மட்டுமே நாட்டில் சமாதானம் ஏற்படும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற தேசிய நல்லிணக்க நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”உண்மையான சமாதானம் ஏற்பட வேண்டுமாக இருந்தால் மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் சாசனம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். ஆட்சிமுறைகள் […]
கருணாவின் மாற்று தமிழ் சக்தி கனவு பலிக்காது: முபீன்
தனியொரு மாற்று தமிழ் சக்தியாக உருவாகுவதற்கு முன்னாள் பிரதியமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் முயற்சிப்பது, நிறைவேறாத பகற்கனவாகுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான யு.எல்.எம்.என்.முபீன் தெரிவித்துள்ளார். தமிழர்களை முஸ்லிம்களிடம் இருந்து மீட்பதற்கான போராட்டத்தில் வடக்கு கிழக்குத் தமிழர்கள் இணைந்துகொள்ள வேண்டுமென, அண்மையில் கருணா அம்மான் கருத்துத் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முபீன் வெளியிட்டுள்ள அறிக்கை […]
தேர்தலை பிற்போடுவது கிழக்கின் சிறுபான்மையினருக்கு சாதகமாகிவிடும்: பசீர் சேகுதாவூத்
கிழக்கு மாகாண சபை தேர்தலை ஒத்திவைப்பதானது, பெரும்பாண்மை சமூகத்திற்கு சாதகமான நிலையை ஏற்படுத்துமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். தேர்தல் ஒத்திவைக்கப்படும் காலங்களில் அதன் ஆட்சி சிங்களவர்களின் கைகளுக்குச் செல்வதால், அவர்கள் நினைத்ததை அக் காலப்பகுதிக்குள் நிறைவேற்றிக்கொள்வார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கிழக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நிறைவடையவுள்ள நிலையில், அதற்கான தேர்தலை உடன் நடத்துமாறு வலியுறுத்தப்பட்டு […]
ரவிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பாரதூரமானவை: தயாசிறி
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் மிகவும் பாரதூரமானவை என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நிதியமைச்சராக ரவி கருணாநாயக்க கடமையாற்றிய காலத்தில், அவரது உறவினர்களுக்கு பர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அர்ஜூன் அலோசியஸ் சொகுசு வீடொன்றை பெற்றுக்கொடுத்து, வாடகையும் செலுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டு, தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு […]
பெற்றோலிய தொழிற்சங்க வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது!
ஜனாதிபதியுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளமையை அடுத்து வேலை நிறுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பெற்றோலிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதனை அடுத்து இன்று மேற்கொள்ளவிருந்த பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளாமல் இருக்க பெற்றோலிய தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. இதேவேளை, தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டும் விடயங்கள் தொடர்பில் சீன நிறுவனத்துடன் கலந்தாலோசித்து குறித்த ஒப்பந்தத்தில் சேர்ப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதன்போது குறிப்பிட்டதாக அந்த சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.





