கொக்குவிலில் இரண்டு சிறிலங்கா காவல்துறையினர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்ட குழுவைச் சேர்ந்த மற்றொருவரையும் நேற்று கைது செய்திருப்பதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது. தெல்லிப்பழையைச் சேர்ந்த சந்திரநாதன் ரஜிதரன் என்பவரே பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே, இவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இவருடன் சேர்த்து, கொக்குவில் வாள்வெட்டுடன் தொடர்புபட்டிருந்த 11 பேரை இதுவரை கைது செய்திருப்பதாக சிறிலங்கா காவல்துறையினர் […]
Author: தமிழ்மாறன்
மத்தல விமான நிலையம் 40 ஆண்டுகள் இந்தியா வசமாகிறது
மத்தல அனைத்துலக விமான நிலையத்தை இந்திய நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு சிறிலங்கா அமைச்சரவையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்திய நிறுவனம் ஒன்றுக்கு மத்தல விமான நிலையத்தை 40 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கும் வகையில் இந்த அமைச்சரவைப் பத்திரம் நேற்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார். சீனாவின் நிதியுதவியில் கட்டப்பட்ட மத்தல விமான நிலையத்தை, இந்திய நிறுவனத்தின் உதவியுடன் […]
சற்றுமுன் தனது பதவியை இராஜனாமா செய்தார் ரவி
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க சற்றுமுன் தனது பதவியை இராஜனாமா செய்வதாக நாடாளுன்றில் அறிவித்தார். நல்லாட்சி அரசு உருவாக்கப்பட்ட நோக்கம் நாட்டில் இஞ்ச ஊழலை ஒழிப்பதற்காகும். மீண்டும் பழைய யுகத்தை நோக்கி செல்ல முடியாது. 32 வருடங்கள் நான் உழைத்த ஐக்கிய தேசியக் கட்சியக்கும், நல்லாட்சி அரசுக்கு பங்கம் ஏற்படாமல் இருக்கவே எனது பதவியை இராஜனாமா செய்கிறேன். மாறாக எவருக்கும் பயந்து அல்ல என்று தெரிவித்தே இராஜனாமா செய்வதாக அறிவித்தார். […]
நைஜீரியா: 30 மீனவர்களை கொன்று போகோ ஹராம் தீவிரவாதிகள் அட்டூழியம்
நைஜீரீயா நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் போகோ ஹராம் தீவிரவாதிகள் 30-க்கும் மேற்பட்ட மீனவர்களை சுட்டுக்கொன்றுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. கிருஸ்துவர்களும், முஸ்லிம்களும் சம அளவில் வாழ்ந்து வரும் நைஜீரியா நாட்டில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று போக்கோ ஹரம் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்குள்ள கிராமங்களுக்குள் கும்பலாக நுழையும் இவர்கள், அங்கு வசிக்கும் மக்களை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்று […]
ராணுவ பயிற்சி எதிரொலி: அமெரிக்க தீவு மீது ஏவுகணை வீச வடகொரியா திட்டம்
அமெரிக்கா ராணுவ பயிற்சி மேற்கொள்ளும் குயாம் தீவு மீது நீண்ட தூரம் சென்று தாக்கும் க்வாசாங்-12 ஏவுகணையை வீசி தாக்க வடகொரியா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. சமீப காலமாக வடகொரியா 5 தடவை ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. ஜூலையில் 2 முறை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதித்துள்ளது. அமெரிக்காவை குறிவைத்து இந்த சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில் ஐ.நா. சபை பொருளாதார தடை […]
மட்டக்களப்பில் மணல் அகழ்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்!
மணல் அகழ்வைக் கண்டித்தும், வனப் பகுதிகளில் மரம் வெட்டுவதை தடுக்குமாறு கோரியும் மட்டக்களப்பு – வேப்பவெட்டுவான் பகுதியில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இலுப்பையடிச்சேனை, வேப்பவெட்டுவான் மற்றும் பாலர்சேனை கிராம அபிவிருத்திச் சங்கங்களின் ஏற்பாட்டில் நடைபெற்றன. இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், எமது பிரதேசத்தில் 45 பேருக்கு மணல் அகழ்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை 9 மணல் வியாபாரிகள் நடத்துகின்றனர். நாங்கள் வறுமையில் வாடும் […]
கடற்படையினர் வெளியேற வேண்டும்: மீனவர்கள்
தமது பூர்வீக பூமியான இரணைதீவை ஆக்கிரமித்து தங்கள் வீடுகளில் நிலைகொண்டுள்ள கடற்படையினர், அங்கிருந்து வெளியேறி அரச காணிகளுக்கு செல்லவேண்டுமென இரணைதீவு மக்கள் குறிப்பிடுகின்றனர். அருகிலுள்ள அரச காணிகளில் கடற்படையினர் குடியிருப்பதில் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லையென்றும், தம்மை தமது சொந்த நிலத்தில் தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் இரணைதீவைச் சேர்ந்த அமிர்தநாதன் அந்தோனி என்ற மீனவர் குறிப்பிட்டுள்ளர். கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் நடத்தப்பட்ட செய்தியாளர் […]
முதல்வர் கூறினாலும் இராஜினாமா செய்ய மாட்டேன்: டெனீஸ்வரன்
முதலமைச்சர் என்னிடத்தில் இராஜினாமா செய்யுமாறு கேட்கவில்லை. அவ்வாறு கேட்டாலும் நான் இராஜினாமா செய்யவதற்கு தயார் இல்லை என வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார். மன்னாரில் உள்ள அமைச்சரின் உப அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) காலை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் அவ்வாறு கூறியுள்ளார். மேலும் கருத்து தெரிவிக்கையில், ”2013ஆம் ஆண்டு முதலமைச்சர் என்னிடம் அமைச்சுப் பொறுப்பை எவ்வாறு நேர்மையாகத் தந்தாரோ அதே போன்று […]
அரசாங்கத்தின் செயற்பாடுகள் போதுமானதல்ல: சம்பந்தன்
காணாமல் போனோர் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு, அரசாங்கம் மேற்கொண்டுள்ள முன்னெடுப்புக்கள் போதுமானதல்லவென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலாக, பிரித்தானிய அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு, எதிர்க்கட்சித் தலைவரை இன்று (புதன்கிழமை) சந்தித்தது. இதன்போதே, எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, காணிகளை விடுவித்தல் மற்றும் புதிய அரசியல் யாப்பு உருவாக்கப் பணிகளும் மந்த கதியிலேயே செல்கின்றதென எதிர்க்கட்சித் தலைவர் […]
யுத்த நிறைவே சம்பந்தனை சந்திக்க வைத்தது – மஹிந்த ராஜபக்ஷ
யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட காரணத்தினாலேயே தானும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனும் ஒரே மேடையில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற புத்தக வெளியீட்டு விழாவொன்றில், மஹிந்தவும் சம்பந்தனும் ஒரே மேடையில் சங்கமித்திருந்தனர். இந்நிகழ்வில் உரையாற்றிய போதே மஹிந்த மேற்குறித்தவாறு கூறியுள்ளார். அத்தோடு, யுத்தம் நிறைவடைந்தமையே நல்லிணக்கத்திற்கும் அடித்தளமிட்டதென குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அனைவருக்கும் சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்த தனக்கு, சுதந்திரம் பறிபோய்விட்டதெனவும் மஹிந்த […]





