Author: தமிழ்மாறன்

தமிழ் மக்களின் காணிகளை முஸ்லிம் மக்கள் அபகரிக்கின்றனர்: சுமணரத்ன தேரர்

தமிழ் மக்களுடைய காணிகளை முஸ்லிம் அமைப்புக்கள் அத்துமீறி கைப்பற்றுவதாகவும் அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சிங்கள தமிழ் இன விழிப்புணர்வுக்கான அமைப்பு தொடர்பான ஊடகவியலாளர் மகாநாடு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மங்களராமய விகாரையில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வாழைச்சேனை முறாவோடை சக்தி வித்தியாலயத்தின் விளையாட்டு […]

தமிழர்கள் தொடர்ந்தும் இன சுத்திகரிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர்: தர்மலிங்கம் சுரேஸ்

யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் தமிழர்கள் கலாச்சார, மொழி, பொருளாதார ரீதியில் சுரண்டப்படுவதாகவும் நில அபகரிப்பின் மூலம் தமிழ் இனத்தின் மீதான இன சுத்திகரிப்பு தொடர்ந்தும் இடம்பெற்றுவருகின்றது என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார். செஞ்சோலை படுகொலை நீதிகோரலும் 11ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வும் மட்டக்களப்பு தாண்டவன்வெளி கூட்டுறவ சங்க மண்டபத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே […]

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு மகாநாயக்கர்கள் எதிர்ப்பு!

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு, பௌத்த உயர்பீட மகாநாயக்கர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிப்பதோடு, கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயற்படுவதாக குறிப்பிட்டு, விஜயதாசவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவரும் முனைப்பில் ஐ.தே.க.வின் பின்வரிசை உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையிலேயே, இதற்கு மகாநாயக்கர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அமைச்சர் விஜயதாச தொடர்பில் கட்சிக்குள் அண்மைய காலமாக பாரிய சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், விஜயதாசவை வெளியேற்றுவது ஏனைய அணிகளுக்கு சாதகமாக […]

சீ.ஐ.டி.யில் ஆஜரானார் ஷிரந்தி ராஜபக்ஷ

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் சற்றுமுன் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளார். பிரபல ரக்பி வீரர் வஸீம் தாஜூதீனின் கொலை தொடர்பான விசாரணைக்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார். மேலும், நிதி மோசடி குறித்த விசாரணைக்காக மஹிந்தவின் மகன் ரோஹித்த, சற்றுமுன் நிதிக்குற்ற தடுப்புப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். மஹிந்த குடும்பத்திடம் இன்று புலனாய்வுப் பிரிவு விசாரணை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு எதிரான விசாரணைகளை தீவிரப்படுத்துவதற்கு அரசாங்கம் […]

ராஜபக்ஷர்களுக்கு எதிரான விசாரணைகள் துரிதகதியில்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் அவர் உட்பட அவரின் குடும்பம் மற்றும் ஆட்சியின் பங்குதாரர்களால் மேற்கொள்ளப்பட்ட ஊழல்மோசடிகளை அரசு துரித கதியில் முன்னெடுக்க சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அரசின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது. நல்லாட்சி அரசு அமைய பெற்று இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதிலும் இதுவரை முன்னாள் அரசின் காலத்தில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் குறித்த விசாரணைகளில் ஒன்ரேனும் முற்றுப்பறவில்லை. ஐ.தே.கவின் உறுப்பினர்கள் […]

நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவளிக்காது சுதந்திரக் கட்சி : திட்டவட்டமாக எதிர்போம்

நீதி அமைச்சர் விஜேதாஸவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதற்கு ஆதரவளிக்காது என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் மீன்வள அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அமைச்சர்களான விஜேதாஸ ராஜபக்ஷவுக்கோ அல்லது பைஸர் முஸ்தப்பாவுக்கோ எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எவர் கொண்டுவந்தாலும் அதற்கு நாங்கள் ஆதரவளிக்க […]

மகிந்த சுதந்திரக் கட்சியை அழிக்கிறார் : துமிந்த குற்றசாட்டு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழிக்கும் காரியத்தில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். காலியில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடங்க வேண்டியது புதிய கட்சியை அல்ல, கட்சிக்குள் இருந்து கொண்டு 2020ஆம் அண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அரசாங்கம் உருவாக்க வேண்டும். இதேவேளை, கட்சிக்குள் இருந்துக்கொண்டே கட்சியை பலப்படுத்த வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் […]

பர்கினா பாசோ நாட்டின் உணவு விடுதியில் துப்பாக்கிச் சூடு: 17 பேர் பலி

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள பர்கினா பாசோ நாட்டின் உணவு விடுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர். மேற்கு ஆப்பிரிக்காவில் கானாவிற்கு அருகில் உள்ள நாடு பர்கினா பாசோ. பர்கினாவின் தலைநகர் ஔகடோவுகோவில் உள்ள உணவு விடுதி ஒன்றில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டதாகவும், 8 பேர் காயம் அடைந்ததாகவும் அந்நாட்டின் அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் […]

ஆப்கானிஸ்தானில் நடந்த வான்தாக்குதலில் ஐ.எஸ். இயக்கத்தின் தளபதிகள் பலி

ஆப்கானிஸ்தானில் கடந்த மாதம் அமெரிக்கா நடத்திய வான்தாக்குதலில் ஐ.எஸ். இயக்கத்தின் தளபதிகள் உயிரிழந்தனர். இந்த தகவலை அமெரிக்க ராணுவ அதிகாரிகள் நேற்று வெளியிட்டனர். ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினர் சமீப காலமாக தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் அந்த இயக்கத்தை தலைமை தாங்கி நடத்தி வந்த அபு சயீத், கடந்த மாதம் குணார் மாகாணத்தில் நடந்த வான்தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த நிலையில், அந்த இயக்கத்தின் […]

பாகிஸ்தான் சுதந்திர தின விழா: எல்லைப்பகுதியில் மிகப்பெரிய கொடியை ஏற்றி கோலாகல கொண்டாட்டம்

பாகிஸ்தான் நாட்டின் சுதந்திர விழாவை அந்நாட்டு மக்கள் மிக கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். தெற்காசியாவில் மிகப்பெரிய தேசியக் கொடியை இன்று லாகூர்-அட்டாரி எல்லைப் பகுதியில் ஏற்றப்பட்டது. வெள்ளையரின் ஆட்சியின்கீழ் ஒன்றுபட்ட பாரத தேசமாக அடிமைப்பட்டு கிடந்த நமது நாட்டுக்கு சுதந்திரம் வழங்க பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தீர்மானித்தபோது, இங்குள்ள இந்துக்களோடு முஸ்லிம் சமுதாய மக்கள் சேர்ந்து வாழ்வது சாத்தியப்படாது. எனவே, முஸ்லிம்களுக்கு என ஒரு தனிநாடு பிரித்து தரப்பட வேண்டும் என […]