Author: தமிழ்மாறன்

வடக்கு, தெற்கிற்கு பாரபட்சம் காட்டும் பொலிஸார் – தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஜனாதிபதிக்கு

நீதிக்குப் புறம்பான விதத்தில் தமிழ் மக்கள் மீது அழுத்தங்களைக் கொடுப்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரான ரட்ணஜீவ கூல் தெரிவித்துள்ளார். தெற்கில் பொதுமக்களை கௌரவமாக நடத்துகின்ற பொலிஸார் வடக்கில் வேறுவிதமாக செயற்படுவதாக அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். இந்த கடிதத்திலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் அவர் மேலும், 16ஆம் திகதி எனது வீட்டுக்கு வந்த பொலிஸார் என்னைக் கைது செய்வதற்கான நீதிமன்ற […]

பரிகார பூஜை செய்ய இந்தியா செல்லும் பிரதமர் ரணில்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 25 ஆம் திகதி தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா புறப்பட்டுச் செல்ல உள்ளார். தென் இந்தியாவில் கோயில் ஒன்றில் பூஜை ஒன்றை மேற்கொள்ளும் நோக்கில் அவர் இந்தியா செல்ல உள்ளதாக தெரியவந்துள்ளது. ரணில் விக்ரமசிங்கவுக்கு தற்போது பாரதூரமான கெட்ட காலம் ஏற்பட்டுள்ளதால், அதற்கு பரிகாரமாக தென் இந்தியாவில் உள்ள கோயிலில் பூஜை ஒன்றை செய்யும் சதாசிவம் என்பவர் யோசனை கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு […]

அதிதீவிர பாதுகாப்பில் நீதிபதி இளஞ்செழியன்!

இலங்கை நீதித்துறையில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனுக்கு விசேட அதிரடிப்படையினருடன் கூடிய விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கடமை நேரத்தில் நீதிமன்றத்திலும், அவருடைய வாசஸ்தலத்திற்கும் இந்த விசேட பாதுகாப்பை அரசாங்கம் வழங்கியுள்ளது. நல்லூர் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தையடுத்து, நீதிபதி இளஞ்செழியனுடன் உடனடியாகத் தொடர்பு கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்தச் சம்பவம் பற்றிய விபரங்களைக் கேட்டறிந்ததுடன், அவருடைய பாதுகாப்பு தொடர்பிலான விடயங்களிலும் கூடிய கவனம் செலுத்தியிருந்தார். அதேநேரம் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர், […]

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்த கடைசி நகரமும் மீட்பு

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்த தல் அபர் என்ற கடைசி நகரமும் நேற்று ராணுவத்தால் மீட்கப்பட்டது. ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் மேலோங்கி இருந்த போது மொசூல் மற்றும் அதை சுற்றியுள்ள நகரங்கள் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்தது. தாங்கள் கைப்பற்றிய பகுதிகளை தன் நாடு ஆக அறிவித்து ஆட்சிசெய்து வந்தனர். அவர்களின் ஆதிக்கத்தை ஒடுக்க ஈராக் ராணுவத்துக்கு அமெரிக்கா கை கொடுத்தது. அதன் உதவியுடன ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் இருந்த […]

தென் கொரியா: கப்பல் கட்டும் தளத்தில் வெடி விபத்தில் சிக்கி 4 தொழிலாளர்கள் பலி

தென் கொரியா நாட்டில் உள்ள கப்பல் கட்டுமான நிறுவனத்தில் டேங்கர் வெடித்த விபத்தில் சிக்கிய நான்கு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தென் கொரியா நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள வர்த்தகப் பகுதியான ஜின்ஹானே என்ற நகரில் எஸ்.டி.எக்ஸ். ஆஃப்ஷோர் என்ற கப்பல் கட்டுமான நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்துக்கு கிரீஸ் நாட்டில் இருந்து கிடைத்த ஆர்டருக்காக 74 ஆயிரம் டன் கொள்ளளவு கப்பல் தயாரிக்கப்பட்டு வருகிறது. வரும் அக்டோபர் […]

ஜனாதிபதியை சந்திக்கும் கட்சித் தலைவர்கள்

அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நாளை சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. மாகாண சபைத் தேர்தல்களை பிற்போட முயற்சிக்கப்படுகின்றமை குறித்து கட்சித் தலைவர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர். வடமத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் ஆயுட்காலம் விரைவில் நிறைவடையவுள்‌ளது. இந்த நிலையில், தேர்தலை பிற்போடுவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறித்து பல கட்சிகள் அதிருப்தி வெளியிட்டு வருகின்றன. எனவே, இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை கட்சித் தலைவர்கள் ஜனாதிபதியை சந்தித்து பேசவுள்ளதாக அமைச்சர் […]

யாழில் வரலாறு காணாத வகையில் திரண்டுள்ள மக்கள்!

யாழ். நல்லூரானின் தேர்த் திருவிழாவைக்காண வரலாறு காணாத வகையில் இன்று இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகைத் தந்துள்ளார்கள். உள்நாட்டில் இருந்து மட்டுமல்லாது வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் மக்களும் இன்று யாழ்ப்பாணத்திற்கு படையெடுத்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது. யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் தற்போது வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. கடந்த 28ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூர் திருவிழா தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறுவதோடு, 24ஆம் நாளான இன்று தேர்த்திருவிழா […]

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கட்சித்தாவல்கள் செப்டம்பரில்

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 உறுப்பினர்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் மஹிந்த ராஜபக்ச அணியில் இணைந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. குறிப்பாக செப்டம்பர் 8-16 திகதிகளுக்கு இடையில் இந்த இணைவு இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது. இதேவேளை மஹிந்த தரப்பின் 7 பேர் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நல்லிணக்க அரசாங்கத்தின் இரண்டு வருட பூர்த்தி வரும் நிலையில் இந்த நடவடிக்கைகள் எதிர்ப்பார்க்கப்படுகின்றன.

மஹிந்த முன்னதாகவே ஆட்சியை கலைத்தமைக்கான காரணம் இதுதான்: மட்டக்களப்பில் பிரதமர்

தாங்க முடியாதளவு கடன் சுமை இருந்த காரணத்தினாலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியை முன்னரகவே கலைத்தார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 55 கோடி ரூபாய் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்கள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வின் முதல் நிகழ்வாக இன்று ஏறாவூர் நகரத்தில் 120 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஏறாவூர் நகரசபைக் கட்டடத்தை பிரதமர் திறந்து வைத்தார். கிழக்கு மாகாண […]

நல்லூர் திருவிழாவைக் கண்டு பிரம்மித்துப்போயுள்ள அமெரிக்க தூதுவர்

யாழ்.நல்லூர் திருவிழாவையும், அங்கு திரண்டுள்ள மக்களின் பக்தியையும் கண்டு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அடுல் கெசாப் பிரம்மித்துப் போயுள்ளார். “யாழ். நல்லூர் ஆலயத்திற்கு வருகைத் தரும் பக்தர்களின் நம்பிக்கை, கலாச்சாரம் மற்றும் பக்தி என்பவை மிகவும் சிறப்பான ஒன்று” என தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.