ஹாங்காங் நகரை இன்று சுழற்றியடித்த ஹாட்டோ புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ராட்சத அலைகளின் எழுச்சியால் தெற்கு சீனா வெள்ளக்காடானது. ஆசியாவின் பொருளாதார மையம் என அழைக்கப்படும் ஹாங்காங் நகரை இன்று பத்தாம் எச்சரிக்கை எண் கொண்ட ஹாட்டோ புயல் தாக்கியது. மணிக்கு 155 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கிய இந்த பெரும்புயலால் கடல் அலைகள் சீற்றத்துடன் நகர வீதிகளுக்குள் பாய்ந்து மோதின. புயலின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் […]
Author: தமிழ்மாறன்
கூட்டு எதிர்க்கட்சி பொது வேட்பாளரை நிறுத்தாது
கூட்டு எதிர்க்கட்சி எப்போது பொது வேட்பாளரை நிறுத்தாது என நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் விஜேதாச ராஜபக்சவை பொது வேட்பாளராக நிறுத்த கூட்டு எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கூட்டு எதிர்க்கட்சி விஜேதாச ராஜபக்சவுக்கு சார்பாக […]
மைத்திரியின் உத்தரவை ஏற்றுக்கொண்ட விஜயதாச! கட்சியில் தொடர்வதாக அறிவிப்பு
அமைச்சர் பதவிகளில் இருந்து ஜனாதிபதி தன்னை நீக்கியதை ஏற்றுக்கொள்வதாக விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனினும் தான் ஐக்கிய தேசியக் கட்சியில் தொடர்ந்தும் அங்கம் வகிக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் விடுத்த கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விஜேதாச ராஜபக்சவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியமைக்கான கடிதத்தை அவருக்கு அனுப்பியிருந்தார். விஜேதாச ராஜபக்சவை அனைத்து அமைச்சு பதவிகளில் இருந்தும் நீக்குமாறு, ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக ஐக்கிய […]
கொழும்பு அரசியலில் அதிரடி திருப்பம்! அமைச்சர் விஜயதாசவை பதவியிலிருந்து தூக்கிய மைத்திரி
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவை பதவி நீக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி அளித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைய அவரது பதவி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பில் அமைச்சர் விஜயதாசவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறி செயற்பட்டதாக விஜயதாச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனால் அவர் அமைச்சரவைப் பொறுப்புக்களை வகிக்கத் தகுதியற்றவர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு […]
சுமந்திரன் மீதான கொலை முயற்சி – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மீதான கொலை முயற்சி வழக்குடன் தொடர்புடைய ஐந்து சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்றைய தினம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே எதிர்வரும் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலை நீடிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்கள் பிரமுகர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்தமை உட்பட சில குற்றச்சாட்டுக்களின் கீழ் கடந்த பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு பொலிஸாரால் கைது […]
20ஆவது அரசமைப்புத் திருத்தத்துக்கு எதிராக உயர் நீதிமன்றம் செல்ல பொது எதிரணி தீர்மானம்
20ஆவது அரசமைப்பு சட்டமூலத்தைத் திருத்துவதன் மூலம் அரசு மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திவைக்க முயன்றால் அதற்கு எதிராக தாங்கள் உயர்நீதிமன்றம் செல்லத் தீர்மானித்திருப்பதாக பொது எதிரணியின் உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் தெரிவித்துள்ள ஏனைய விளக்கங்கள் வருமாறு, 20ஆவது அரசமைப்பைத் திருத்துவதற்கு சர்வஜன வாக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டும். அதற்கு மேலதிகமாக நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையும் தேவை. இந்தத் திருத்தத்துக்கான வர்த்தமானி அறிவித்தலை […]
செப் முதலாம் திகதி தொடக்கம் மக்களுக்கு காத்திருக்கும் ஆபத்து!
எதிர்வரும் செப்டெம்பர் 1ஆம் திகதி முதல் பொலித்தீன் இறக்குமதி, உற்பத்தி மற்றும் பாவனை என்பன தடைசெய்யப்படவுள்ளது. இதேவேளை, இதற்கெதிராக கைது செய்யும் சட்டநடவடிக்கைகள் உடனடியாக இடம்பெறாது என்று இன்றைய அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. இத்துறையை சார்ந்தவர்களின் நலன் கருதி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை ஆராய்வற்காக உரிய நிறுவனங்களின் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றினை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2017.07.11 ஆம் திகதி அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு இணங்க 2017 […]
பிரதமரின் தேவைக்கு அமையவே தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டது: ராஜித
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தேவைக்கு அமையவே தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். 100 நாள் வேலைத்திட்டம் மற்றும் தேசிய அரசாங்கம் ஆகிய வேலைத்திட்டங்கள் அரசியல் இலாபம் கருதிய வேலைத்திட்டங்கள் அல்ல. நாட்டின் முக்கிய பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் மிகவும் சிரமப்பட்டு உருவாக்கிய வேலைத்திட்டம். […]
தீவிரவாதத்தை எதிர்ப்பதில் பாகிஸ்தான் முதலிடம்: சீனா சர்டிபிகேட்
தீவிரவாதிகளை வளர்த்து வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ள நிலையில் தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதில் பாகிஸ்தான் முதலிடத்தில் இருப்பதாக சீனா வக்காலத்து வாங்கியுள்ளது. தெற்காசிய நாடுகள் தொடர்பான அமெரிக்காவின் புதிய கொள்கைகள் குறித்து அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைக்காட்சி மூலமாக நாட்டு மக்களிடையே உரையாற்றினார். ‘பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கான டாலர்கள் அமெரிக்கா நிதியுதவியாக அளிக்கிறது. அதேநேரம், நாம் எதிர்த்துப் போரிட்டுவரும் தீவிரவாதிகளின் புகலிடமாக அந்நாடு விளங்குகிறது. தலிபான் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் […]
ஆசிய-பசிபிக் கடற்பகுதியில் அமெரிக்க கடற்படை செயல்பாடுகளால் ஆபத்து அதிகரிப்பு: சீனா விமர்சனம்
சிங்கப்பூர் கடற்பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல் சரக்கு கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானதை தொடர்ந்து அமெரிக்க கடற்படை ஆபத்தானது என சீன ஊடகம் விமர்சனம் செய்துள்ளது. சிங்கப்பூர் கடல் பகுதியில் மலாக்கா தீவு அருகே சென்று கொண்டிருந்த ஜான் மெக்கெயின் அமெரிக்க போர்க்கப்பல், லிபியாவை சேர்ந்த அல்னிக் என்ற சரக்கு கப்பலுடன் நேற்று திடீரென மோதி விபத்துக்குள்ளானது. இது இந்த ஆண்டு பசிபிக் கடற்பகுதியில் அமெரிக்க கப்பல் ஏற்படுத்திய நான்காவது விபத்தாகும். இந்த […]





