இலங்கை உள்ளிட்ட நாடுகளில் மனித உரிமைகள் மீறப்படுவதை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும் என்று ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் மேரி கத்தரின் பீ தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரில் நேற்று உரையாற்றிய அவர், ஈரான் போன்ற மனித உரிமைகளை மீறும் நாடுகளை ஒரு விதமாகவும், இஸ்ரேல் விடயத்தில் பாரபட்சமாகவும் ஐ.நா மனித […]
Author: தமிழ்மாறன்
சிங்கப்பூருக்கு பறந்தார் பிரதமர்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை சிங்கப்பூருக்கு பயணம் செய்துள்ளார். இலங்கையில் முதலீடு செய்வது குறித்த மாநாட்டில் பங்கேற்கவே பிரதமர் சிங்கப்பூர் சென்றுள்ளார். இந்த மாநாடு நாளை நடைபெறவுள்ளது. இதில் பிராந்தியத்தின் முக்கியமான முதலீட்டாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இதற்கு முன்னதாக, இலங்கையில் முதலீடு என்ற பெயரிலான மாநாடுகள், அமெரிக்கா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, பிரித்தானியா, சுவிற்சர்லாந்து, ஹொங்கொங் ஆகிய நாடுகளில் இடம்பெற்றிருந்தன.
காணாமல் போனோர் பணியகத்தின் தலைவராக சாலிய பீரிஸ் நியமனம்
காணாமல் போனோர் பணியகத்தின் ஏழு உறுப்பினர்களின் நியமனங்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கீகாரம் அளித்துள்ளார். ஜனாதிபதியின் சட்டவாளர் சாலிய பீரிஸ், காணாமல் போனோர் பணியகத்தின் தலைவராகச் செயற்படுவார் என்றும், ஏனைய ஆறு உறுப்பினர்களும் அவருடன் இணைந்து பணியாற்றுவார்கள் என்றும் ஜனாதிபதி செயலகத்தில் நடந்த கூட்டத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் பணியகத்தின் ஏனைய உறுப்பினர்களாக, ஜெயதீபா புண்ணியமூர்த்தி, மேஜர் ஜெனரல் மொஹந்தி அன்ரோனெட் பீரிஸ், கலாநிதி சிறியானி […]
பிராங்க்பர்ட் நகரில் இருந்து 70,000 பேர் வெளியேற்றம்
பிராங்க்பர்ட் நகரில் இரண்டாம் உலகப் போரில் வீசப்பட்ட குண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் அந்நகரில் இருந்து சுமார் 70 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட உள்ளனர். ஜெர்மனி நாட்டின் வர்த்தக மையமாக பிராங்க்பர்ட் நகரம் திகழ்கிறது. உலக அளவில் முக்கிய போக்குவரத்துகளுக்கான சந்திப்பு பகுதியாகவும் இந்த நகரம் உள்ளது. இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனியை எதிர்த்த நாடுகள் ஏராளமான குண்டுகளை வீசின. அப்படி வீசப்பட்ட பல வெடிகுண்டுகள் வெடிக்கவில்லை. அவை ஜெர்மனி நாட்டின் முக்கிய […]
அமெரிக்காவில் வரலாறு காணாத மழை: 1½ கோடி பேர் வெள்ளத்தில் சிக்கி தவிப்பு – 37 பேர் பலி
அமெரிக்காவில் வரலாறு காணாத மழையால் ஹூஸ்டன் மற்றும் அதை ஒட்டி உள்ள பகுதிகளில் 1½ கோடி பேர் வெள்ளத்தில் சிக்கி தவிக்கிறார்கள். இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 37 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவின் தென் பகுதியில் மையம் கொண்டு இருந்த ஹார்வி புயல் டெக்சாஸ் மாகாணத்தை தாக்கியது. இதனால் அங்குள்ள ஹூஸ்டன் நகரம், ஆஸ்டின் நகரம் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடற்கரை நகரமான ஹூஸ்டனில் வரலாறு காணாத அளவுக்கு […]
கிரிக்கெட் அணியின் தோல்வி – நாடாளுமன்றத்தில் விவாதம் கோரும் கூட்டு எதிர்க்கட்சி
இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்வி தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் ஒன்றை கோர கூட்டு எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த யோசனையை முன்வைத்துள்ளனர் எனவும் அடுத்த கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். பொரளையில் கூட்டு எதிர்க்கட்சி இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கிரிக்கெட் போட்டியில் […]
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தும் திருத்தச் சட்டமூலத்தில் கையொப்பமிட்டார் சபாநாயகர்
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தும் திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று காலை கையெழுத்திட்டுள்ளார். இந்த திருத்தச்சட்டமூலம் அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. சபாநாயகர் சட்டமூலத்தில் கையெழுத்திட்டுள்ளதால், அது தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும். இதனடிப்படையில், தேர்தல் ஆணைக்குழு உள்ளூராட்சி சபைத் தேர்தலை துரிதமாக நடத்தவுள்ளது. எதிர்வரும் டிசம்பர் 9 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் கயந்த கருணாதிலக்க நேற்று நடைபெற்ற அமைச்சரவை […]
இலங்கையின் முன்னேற்றங்கள் மிகவும் பாராட்டத்தக்கவை: அமெரிக்கா
நாட்டிற்குள் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பவும் ஜனநாயக ரீதியான திருத்தங்களை மேற்கொள்வதற்காகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றங்கள் மிகவும் பாராட்டத்தக்கவை என அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்க செயலாளர் ஹெலிஸ் வேல்ஸ் தெரிவித்துள்ளார். விமர்சனங்கள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் ஜனாதிபதி எடுத்துள்ள இந்த வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவின் உதவி தொடர்ந்தும் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதியுடனான சந்திப்பில் அவர் இதனை […]
கடன் பொறியில் இருந்து நாடு காப்பற்றப்பட்டுள்ளது
கடந்த இரண்டு வருடங்களில் கடன் பொறியில் இருந்து நாட்டை காப்பாற்றியதாகவும், அடுத்த இரண்டு வருடங்களில் கடனை திரும்ப செலுத்துவதற்காக நிரந்தரமான வேலைத்திட்டத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடனை திரும்ப செலுத்துவதற்கு தேவையான வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பு மாவட்டத்தில் வீடுகள் இல்லாதவர்களுக்கு வீட்டுக்கடனை வழங்குவதற்காக அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற வைபவத்தில் பிரதமர் இதனை கூறியுள்ளார். கொழும்பு […]
ஜெனரல் ஜகத் ஜயசூரியவை பாதுகாக்க வேண்டும் – ஜாதிக ஹெல உறுமய
முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்காக இலங்கை அரசாங்கம் குரல் கொடுக்க வேண்டும் எனவும் அவரை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். ஜகத் ஜயசூரிய நாட்டின் பாதுகாப்புக்காகவே வன்னி பிராந்திய கட்டளை தளபதியாக கடமையாற்றினார், அது சட்ட ரீதியானது. நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த அவர பங்களிப்பு கிடைத்தது. […]





