Monday , October 20 2025
Home / தமிழ்மாறன் (page 129)

தமிழ்மாறன்

யுத்தக் குற்ற விவகாரம் : தண்டனை வழங்காதிருக்க ஸ்ரீலங்கா பிடிவாதம்

யுத்தக் குற்ற விவகாரம்

யுத்தக் குற்ற விவகாரம் : தண்டனை வழங்காதிருக்க ஸ்ரீலங்கா பிடிவாதம் ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சர்வதேச சட்டத்தின் கீழ் இழைக்கப்பட்ட போர் குற்றங்களுக்கு சட்டவிலக்களிப்பை வழங்குவதில் ஸ்ரீலங்கா அரசாங்கம் பிடிவாதமாக உள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. 2016/2017 ஆம் ஆண்டுக்கான 159 நாடுகள் மற்றும் பிராந்தியங்களின் மனித உரிமை விடயங்கள் குறித்த சர்வதேச மன்னிப்பு சபையின் அறிக்கையில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சட்டத்தின் …

Read More »

தமிழ் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக்கூடாது இந்தியாவிடம் எடுத்துரைத்தது இ.தொ.க.

தமிழ் பிரதிநிதித்துவம் இ.தொ.க.

தமிழ் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக்கூடாது இந்தியாவிடம் எடுத்துரைத்தது இ.தொ.க. புதிய அரசியலமைப்பை விட தேர்தல் முறை மாற்றமே மலையக மக்களிடையே அதிக தாக்கத்தை செலுத்துமென்றும் ஆகவே தமிழ் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாத வகையில் தேர்தல் முறை மாற்றம் இடம்பெறவேண்டுமென்பதை இலங்கைக்கு இந்தியா எடுத்துரைக்க வேண்டுமெனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கரை கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) சந்தித்த இ.தொ.க. இக்கோரிக்கையை முன்வைத்தது. …

Read More »

பிணை முறி விவகாரம்: மத்திய வங்கி ஆளுநரிடம் இன்று வாக்குமூலம்

பிணை முறி விவகாரம்

பிணை முறி விவகாரம்: மத்திய வங்கி ஆளுநரிடம் இன்று வாக்குமூலம் மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிணை முறி மோசடி குறித்து, மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமியிடம் இன்று (செவ்வாய்க்கிழமை) வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. பிணை முறி குறித்து விசாரிக்கப்படவென ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் முன்னிலையிலேயே மத்திய வங்கியின் ஆளுநர் வாக்குமூலம் வழங்கவுள்ளதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது. மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் குறித்த …

Read More »

மட்டக்களப்பில் வேலையற்றபட்டதாரிகள் காலவரையறையற்ற சத்தியாக்கிரகம்

மட்டக்களப்பில் வேலையற்றபட்டதாரிகள்

மட்டக்களப்பில் வேலையற்றபட்டதாரிகள் காலவரையறையற்ற சத்தியாக்கிரகம் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்றிருக்கும் சுமார் 1500 இற்கு மேற்பட்ட பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கோரி காலவரையறையற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் இன்று காலை 9 மணி தொடக்கம் இந்த சத்தியாக்கிரகம் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்குப் பின்னர் தற்போது வரை பட்டாரிகளாக வெளியேறியுள்ள சுமார் 1500 மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் இந்த சத்தியாக்கிரகப் …

Read More »

கடும் பனிக்கு மத்தியில் கேப்பாப்புலவு மக்கள் 22 ஆவது நாளாக போராட்டம்

கேப்பாப்புலவு மக்கள்

கடும் பனிக்கு மத்தியில் கேப்பாப்புலவு மக்கள் 22 ஆவது நாளாக போராட்டம் முல்லைத்தீவு – கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் இன்று 22 ஆவது நாளாக கடும் பனிக்கு மத்தியில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பிலவுக்குடியிருப்பு இராணுவ முகாமிற்கு முன்னால் பொதுமக்களால் தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு, இன்றைய தினம் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் ஆதரவு வழங்கியுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திகதி ஸ்ரீலங்கா விமானப் படையினரால் …

Read More »

முறக்கொட்டாஞ்சேனை ராணுவ முகாமிற்கு அருகில் மேலும் பல மனித எச்சங்கள்

முறக்கொட்டாஞ்சேனை ராணுவ முகாமிற்கு

முறக்கொட்டாஞ்சேனை ராணுவ முகாமிற்கு அருகில் மேலும் பல மனித எச்சங்கள் மட்டக்களப்பு – முறக்கொட்டாஞ்சேனையில், ராணுவ முகாமிற்கு அருகே மனித எச்சங்கள் காணப்பட்டதாகச் சந்தேகிக்கப்பட்ட இடத்தில் இரண்டாவது நாளாகவும் இன்று முன்னெடுக்கப்பட்ட ஆய்வு நடவடிக்கைகளின் போது மேலும் பல மனித எச்சங்கள் மீட்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். அத்தோடு துருப்பிடித்த இரும்புக் கம்பிகள், மண்மாதிரிகள் என்பனவும் கண்டெடுக்கப்பட்டு ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஒப்படைக்கப்பட்டு மேற்படி எச்சங்கள் பகுப்பாய்விற்காக …

Read More »

மனித உரிமை ஆணைக்குழுவினர் கேப்பாபிலவு விஜயம்

மனித உரிமை ஆணைக்குழு

மனித உரிமை ஆணைக்குழுவினர் கேப்பாபிலவு விஜயம் கேப்பாப்பிலவு பிளக்குடியிருப்பில் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் நேரில் சென்று மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்ததோடு இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் நிலங்களையும் பார்வையிட்டுள்ளனர். மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்க வேண்டுமெனக்கோரி அதனை விடுவிக்க வேண்டுமெனக்கோரி நேற்று 21ஆவது நாளாகவும் தொடர் கவனயீர்ப்பு போராடடத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்றைய தினம் …

Read More »

பழைய முறையிலேயே தேர்தல் நடத்தப்பட வேண்டும்: மனோ கணேசன்

பழைய முறையிலேயே தேர்தல் மனோ கணேசன்

பழைய முறையிலேயே தேர்தல் நடத்தப்பட வேண்டும்: மனோ கணேசன் புதிய தேர்தல் முறையின் கீழ் சிறுபான்மை மக்களின் அரசியல் பிரவேசம் பாதிக்கப்படுகின்றதென தெரிவித்துள்ள அமைச்சர் மனோ கணேசன், பழைய முறையிலேயே தேர்தல் நடத்தப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை மீள் நிர்ணயம் தொடர்பான அறிக்கை கடந்த வாரம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருந்த நிலையில், சிறுபான்மை கட்சிகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இதுகுறித்து நேற்று (திங்கட்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தின. இச் சந்திப்பின்போது …

Read More »

திகளின் வாக்குகள் பொய்த்த நிலையில் தொடரும் பரவிப்பாஞ்சான் போராட்டம்

திகளின் வாக்குகள் பரவிப்பாஞ்சான் போராட்டம்

திகளின் வாக்குகள் பொய்த்த நிலையில் தொடரும் பரவிப்பாஞ்சான் போராட்டம் கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி, காணி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதேவேளை தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை நேற்றைய தினம் இராணுவத்தினர் புகைப்படம் எடுத்ததுடன், அச்சுறுத்தலும் விடுத்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமிற்கு முன்பாக நேற்றுக் காலை முதல் பொதுமக்கள் தொடர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். …

Read More »

வடக்கு மாகாண சபை அமர்வில் அமளி: நீர் பிரச்சினை குறித்த அமர்வு பிற்போடப்பட்டது

வடக்கு மாகாண சபை

வடக்கு மாகாண சபை அமர்வில் அமளி: நீர் பிரச்சினை குறித்த அமர்வு பிற்போடப்பட்டது நாளைய தினம் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த வடக்கு மாகாண நீர் பிரச்சினை தொடர்பான விசேட அமர்வு பிற்போடப்பட்டதைத் தொடர்ந்து, மாகாண சபை உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. வடக்கு மாகாண சபையின் 85ஆவது அமர்வு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9.30இற்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. கடந்த அமர்வின்போது, வடக்கின் நீர்வழங்கல் மற்றும் …

Read More »