காவிரி விவகாரம் தொடர்பாக ஐபிஎல் போட்டியை சென்னையில் நடத்தக்கூடாது என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சேப்பாக்கத்தில் இன்று நடைபெறுகிறது. மும்பையுடனான போட்டி முடிந்து சென்னை அணியினர் திரும்பிய நிலையில், கொல்கத்தா வீரர்களும் நேற்றுமாலை சென்னை வந்தடைந்தனர். வீரர்கள் பலத்த பாதுக்காப்புடன் ஓட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வீரர்கள் தங்குமிடத்திலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த […]
Author: குமார்
இன்று முதல் ஈரோடு வழியாய் மாடி ரயில்(Double decker)இயக்கம் கோவைTO சென்னை
நெல்லை, தூத்துக்குடியில் மழை – வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி
நெல்லை, தூத்துக்குடியில் கடும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் மழை பெய்தது பொதுமக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
நெல்லையில் மழை – பாபநாசம், அடவிநயினார் அணைகளில் நீர்மட்டம் உயர்வு
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்ததால் கடுமையான வெப்பம் நிலவியது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நெல்லை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பலத்த மழை பெய்ததால் பாபநாசம், அடவிநயினார் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று நள்ளிரவில் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, குண்டாறு ஆகிய நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் அம்பை, ஆய்க்குடி, […]
தனது தனிப்பட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில் ரெய்டு – FBI மீது பாய்ந்த டிரம்ப்
அமெரிக்க அதிபர் டிரம்பை சுற்றி அடிக்கடி பல்வேறு சர்ச்சை கருத்துகள் எழும். அந்த வகையில் அவர் தன்னை காதலித்ததாக முன்னாள் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. செய்தி நிறுவனத்திற்கு ஒன்று பேட்டி அளித்த அவர் கடந்த 2006 ம் ஆண்டு டிரம்ப்புடன் உடல் ரீதியான உறவு இருந்ததாக கூறினார். டிரம்ப் தன்னுடன் காதலில் இருந்ததாகவும் இருவரும் பலமுறை உறவு வைத்துள்ளதாகவும் அவர் கூறிய குற்றச்சாட்டுக்கு […]
ஜப்பானில் தொடர் நிலநடுக்கங்கள் ஏற்படலாம் – புவியியல் ஆய்வுமையம் எச்சரிக்கை
ஜப்பானின் மேற்கு பகுதியில் ஹோன்சு தீவில் உள்ள ஹிரோஷிமா நகரில் நேற்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 புள்ளிகளாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வுமையம் தெரிவித்து உள்ளது. ஆனால் ஜப்பான் புவியியல் ஆய்வுமையம் 6.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்தது. நிலநடுக்கத்தின் போது, வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. உறக்கத்தில் இருந்த மக்கள் திடுக்கிட்டு எழுந்தனர். அவர்கள் அலறிஅடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி […]
ஜப்பானில் 5.8 ரிக்டர் அளவுகோலில் திடீர் நிலநடுக்கம்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு அருகில் உள்ள ஹோஸ்னுவில் உள்ள ஷிமானே பகுதியில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சுமார் 5.8 ரிக்டர் அளவுகோலில் பதிவானது. சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.
நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றியிருந்த அவர், சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அருண்ஜெட்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். இன்று அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாகவும்,இதுதொடர்பான அனைத்து நடைமுறைகளும் பூர்த்தி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது
போலீசாரே இல்லாமல் முற்றிலும் இணைய வழியில் இயங்கக்கூடிய உலகின் முதல் ஸ்மார்ட் போலீஸ் நிலையம்
போலீசாரே இல்லாமல் முற்றிலும் இணைய வழியில் இயங்கக்கூடிய உலகின் முதல் ஸ்மார்ட் போலீஸ் நிலையம் துபாயில் செயல்பாட்டுக்கு வந்து உள்ளது. ‘எஸ்.பி.எஸ்.’ என பெயர் சுருக்கம் கொண்ட இந்த ஸ்மார்ட் போலீஸ் நிலையத்தில், புகார் அளித்தல், போக்குவரத்து அபராதம் செலுத்துதல், விபத்து குறித்து பதிவு செய்தல், தேவையான ஆவணங்கள் பெறுதல் உள்ளிட்ட 60 சேவைகளை பொதுமக்கள் பெற முடியும். இந்த ஸ்மார்ட் போலீஸ் நிலையத்தில் காத்திருப்பு பகுதி, கண்காட்சி பகுதி, […]
அமெரிக்காவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணத்தில் மேற்கு கடற்கரையோர பகுதியில் நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் அதிர்ந்தது. வீடுகள் குலுங்கின. எனவே பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்ட வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர். பாதுகாப்பான இடங்களில் தங்கினர். அங்கு 6.6 ரிக்டரில் நில நடுக்கம் பதிவானது. புல்டிர் தீவில் 111.8 கி.மீட்டர் (69 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடலில் வழக்கத்தை விட அதிக உயரத்துக்கு அலைகள் […]





