Saturday , October 11 2025
Home / குமார் (page 8)

குமார்

ஊடகம், இலக்கியத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் புலிட்சர் விருதுகள் அறிவிப்பு

ஹங்கேரிய அமெரிக்கப் பத்திரிகையாளரும், செய்திப் பத்திரிகை வெளியீட்டாளருமாகிய ஜோசேப் புலிட்சர் பெயரில் 1912-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஊடகவியல், இணைய ஊடகம், இலக்கியம் மற்றும் இசையமைப்பு ஆகிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்காக விருதுகள் வழங்கப்படுகிறது. மிகவும் கவுரவமிக்கதாக கருதப்படும் புலிட்சர் விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அமெரிக்க ஊடகங்களான நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், நியூ யார்கெர், பிரெஸ் டெமோக்ரட், அரிசோனா ரிபப்ளிக், யு.எஸ்.ஏ டுடே, தி சின்சின்னாட்டி என்கொயர், …

Read More »

ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால் மன அழுத்தம் ஏற்படும் ஆய்வில் தகவல்

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாகாண பல்கலைக்கழக ஆராய்ச்சி பிரிவு மாணவர்கள் எரிக் பெப் தலைமையில் ஸ்மார்ட்போன் பயன்பாடு குறித்து ஆய்வு நடத்தினார்கள். 135 மாணவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் அளவுக்கு அதிகமாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு தனிமை, கவலை, மனஅழுத்தம் ஆகிய உணர்வுகள் அதிகமாக இருந்தது. போதைப் பொருளுக்கு ஒருவர் எப்படி படிப்படியாக அடிமையாவாரோ அதே போன்று ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகி அதை அதிகம் பயன்படுத்துவதும் கண்டறியப்பட்டது. முதலில் மூளையில் உள்ள நரம்பு …

Read More »

கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய மே 2-ம் தேதி வரை தடை நீட்டிப்பு

ஏர்செல்-மேக்சிஸ் மோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு தொடர்பு இருப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்ட ஆணையம் அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து அவரை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்யலாம் என பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஓ.பி.ஷைனி, கார்த்தி சிதம்பத்துக்கு முன்ஜாமீன் வழங்கினார். …

Read More »

அமெரிக்காவில் சீக்கிய கோவிலில் தகராறு – 4 பேர் காயம்

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள இண்டியன்போலிஸ் நகரில் சீக்கிய குருத்வாரா உள்ளது. அந்த குருத்வாராவில் தலைவரை தேர்வு செய்வதற்காக ஆலோசனை நேற்று நடந்தது. இதில் பலர் கலந்து கொண்டனர். அப்போது தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக இருதரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் அது தகராறாக மறியது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். தகவலறிந்து அங்கு போலீசார் விரைந்து சென்றனர். இந்தக் கலவரத்தில் சிக்கி காயம் அடைந்த 4 …

Read More »

இந்தோனேசியாவில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

இந்தோனேசியா நாடு பல்வேறு தீவுகளை கொண்டது. இது அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்படும் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ளது. இதனால் அடிக்கடி பூகம்பம் ஏற்பட்டு வருகிறது. இதேபோல இன்று அதிகாலை மொலுகாஸ் பகுதியில் திடீரென பூகம்பம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் 36 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த திடீர் நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த வீடுகளும், கட்டிடங்களும் குலுங்கியதால் மக்கள் அலறியடித்து வெளியே ஓடினர். இந்த நிலநடுக்கத்தால் …

Read More »

திருவிடந்தை சர்வதேச ராணுவ தளவாடக் கண்காட்சியைக் காணக் குவியும் பொதுமக்கள்

தமிழ்ப்புத்தாண்டு விடுமுறையை அடுத்து காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தை சர்வதே ராணுவ தளவாடக் கண்காட்சியைக் காண அதிக அளவில் பொதுமக்கள் வருகின்றனர். கடந்த 11- ஆம் தேதி தொடங்கிய இந்தக் கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆதார் கார்டு பான்கார்டு உள்ளிட்ட அடையாள அட்டைகளை காட்டியபிறகே பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். சென்னை, காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் …

Read More »

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 127வது பிறந்தநாள் விழா – குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மரியாதை

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 127வது பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். இந்திய அரசியல் சாசன சட்டத்தின் பிதாமகனும், இந்தியாவின் முதல் சட்டத்துறை அமைச்சருமான டாக்டர் அம்பேத்கரின் 127வது பிறந்தநாள், இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன்படி, டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலை பீடம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. காலையில் அங்கு …

Read More »

காவிரி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் பயணம் மேற்கொள்வது மிகப்பெரிய மோசடி – H. ராஜா சாடல்

காவிரி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் பயணம் மேற்கொள்வது மிகப்பெரிய மோசடி என்று பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா விமர்சனம் செய்துள்ளார். நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களுடன் பேசிய ஹெச்.ராஜா, ஸ்டாலினின் குடும்பமே தமிழக மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Read More »

இஸ்ரேல் வான்தாக்குதலில் ஹமாஸ் போராளி பலி

ஹமாஸ் போராளிகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் துப்பாக்கி ஏந்திய ஹமாஸ் போராளி ஒருவர் உயிரிழந்தார்  பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேல் படையினருக்கும் சமீப காலமாக மோதல்கள் அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் நாட்டை பாலஸ்தீனர்களுக்கு மீட்டுக்கொடுப்பதுடன், இஸ்ரேல், மேற்குக்கரை, காசா ஆகிய பகுதிகளை ஒன்றிணைத்து இஸ்லாமிய குடியரசாக மாற்றுவதுதான் ஹமாஸ் போராளிகளின் நோக்கமாக இருக்கிறது. இந்த போராளிகள், பாலஸ்தீன மக்களிடையே மிகுந்த ஆதரவைப் பெற்று விளங்குகின்றனர்.இந்த நிலையில் சமீபத்தில் இஸ்ரேல் உருவானதின் 70-வது …

Read More »

சோமாலியாவின் கால்பந்து மைதானத்தில் வெடிகுண்டு தாக்குதல் – 5 ரசிகர்கள் பலி

சோமாலியா நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தில் அல் ஷபாப் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.  ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் நடைபெற்றுவரும் ஆட்சியை எதிர்த்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அல் ஷபாப் தீவிரவாதிகள், இங்கு பாதுகாப்பு மற்றும் அமைதியை நிலநாட்டும் பணியில் ஈடுபட்டிருக்கும்  கென்யா, ஜிபோட்டி, உகாண்டா, எத்தியோப்பியா ஆகிய நாடுகளை சேர்ந்த ஆப்பிரிக்க யூனியனை …

Read More »