Author: குமார்

புதிய ரூ.1000 நோட்டுகள்

புதிய ரூ.1000 நோட்டுகள் விரைவில் அறிமுகம் – ரிசர்வ் வங்கி திட்டம்

புதிய ரூ.1000 நோட்டுகள் விரைவில் அறிமுகம் – ரிசர்வ் வங்கி திட்டம் புதிய ரூ.1000 நோட்டுகள் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், விரைவில் அறிமுகம் செய்ய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8–ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த ரூ.1000, ரூ.500 நோட்டுகள் தடை செய்யப்பட்டு, அவை […]

வெயிலின் தாக்கம்

10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் இருக்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம்

10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் இருக்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயில் அதிகமாக இருக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் மராட்டியம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது வெயில் அதிகமாக கொளுத்த தொடங்கிவிட்டது. டெல்லியில் 93 டிகிரிக்கு அதிகமான வெப்பம் இருக்கிறது. பிப்ரவரி மாதத்தில் இது வரை இல்லாத அளவுக்கு தற்போது வெயில் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

திருப்பதி ஏழுமலையான்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.5 கோடி நகை காணிக்கை – சந்திரசேகரராவ்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.5 கோடி நகை காணிக்கை – சந்திரசேகரராவ் தெலுங்கானா மாநிலம் உதயமானதால் திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.5 கோடி நகை காணிக்கை முதல்வர் சந்திரசேகரராவ் நாளை வழங்குகிறார். இது குறித்த செய்தியை பார்க்கலாம். ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் உதயமானது. தனி மாநிலத்துக்காக போராடிய தெலுங்கானா ராட்டிரீய சமிதி தலைவர் சந்திரசேகரராவ் அம்மாநில முதல்-மந்திரியாக உள்ளார். தெலுங்கானா தனி மாநிலம் உதயமானால் திருப்பதி கோவில் ஏழுமலையானுக்கு அரசு […]

பாகிஸ்தானில் கோர்ட்டு

பாகிஸ்தானில் கோர்ட்டு அருகில் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் – 7 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் கோர்ட்டு அருகில் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் – 7 பேர் உயிரிழப்பு பாகிஸ்தானில் கோர்ட்டு அருகில் தீவிரவாதிகள் இன்று நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர், 14 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தானில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் அதிகம் உள்ள மாகாணம் கைபர் பாக்துன்க்வா மாகாணம். இங்கு அடிக்கடி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை கொன்று குவித்துவருகின்றனர். இந்நிலையில், தாங்கி நகரில் உள்ள செசன்ஸ் கோர்ட்டில் இன்று காலை […]

பிரான்ஸ் அதிபர் தேர்தலில்

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஊழல்வாதிகள் – பொதுமக்கள் போராட்டம்

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஊழல்வாதிகள் – பொதுமக்கள் போராட்டம் பிரான்ஸ் அதிபர் தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெறுகிறது. அதற்கான வேட்பாளர் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. அதில் கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளராக பிரான் சியஸ்பிலனும், வலதுசாரி வேட்பாளராக மெரைன் லிபென்னும் தேர்வாகியுள்ளனர். இவர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இவர்களுக்கு எதிராக தலைநகர் பாரீசில் நேற்று முன்தினம் ஆயிரக் கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டின் பிற […]

தேசிய பாதுகாப்பு ஆலோசகரை

தேசிய பாதுகாப்பு ஆலோசகரை நியமித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்

தேசிய பாதுகாப்பு ஆலோசகரை நியமித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப் அமெரிக்க அதிபர் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் பிளின் ராஜினாமா செய்ததையடுத்து, அவருக்குப் பதில் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஹெர்பர்ட் ரேமண்ட் மெக்மாஸ்டர் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க 45-வது அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக்கேல் பிளினை நியமித்திருந்தார். அமெரிக்க பாதுகாப்புத்துறை புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவரான மைக்கேல், டொனால்டு டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர். […]

சபாநாயகர்

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மான கடிதத்தை பேரவைச் செயலாளரிடம் வழங்கினேன்: ஸ்டாலின்

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மான கடிதத்தை பேரவைச் செயலாளரிடம் வழங்கினேன்: ஸ்டாலின் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான கடிதத்தை பேரவைச் செயலாளரிடம் வழங்கியதாக ஸ்டாலின் கூறினார். திமுகவின் செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலகத்திற்கு இன்று நேரில் சென்று, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான கடிதத்தை பேரவைச் செயலாளரிடம் வழங்கினார். மேலும், அந்தக் கடிதத்தின் பிரதியை சட்டப்பேரவை தலைவரிடமும் வழங்கினார். […]

விவசாயிகளுக்கு வறட்சி-எடப்பாடி பழனிச்சாமி

விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாக ரூ.2247 கோடி அளித்து எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாக ரூ.2247 கோடி அளித்து எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு விவசாயிகளுக்கு உரிய நிவாரண உதவித் தொகை வழங்கிட, வருவாய் மற்றும் வேளாண் துறைகள் இணைந்து செய்த கணக்கெடுப்புப் பணிகள் தற்போது முடிக்கப்பட்டுள்ளன. இந்த கணக்கெடுப்பின்படி 32,30,191 விவசாயிகளுக்குச் சொந்தமான 50,34,237 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளதால் பயிர் இழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு இடு பொருள் நிவாரண உதவித் தொகையாக 2,247 கோடி ரூபாய் வழங்கப்பட […]

தமிழகம் முழுவதும்-அன்புமணி

தமிழகம் முழுவதும் மார்ச் 1-ம் தேதி டாஸ்மாக் வழிகாட்டி, அறிவிப்புப் பலகைகளில் ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம் – அன்புமணி

தமிழகம் முழுவதும் மார்ச் 1-ம் தேதி டாஸ்மாக் வழிகாட்டி, அறிவிப்புப் பலகைகளில் ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம் – அன்புமணி தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் குறித்த வழிகாட்டி மற்றும் அறிவிப்புப் பலகைகள் மீது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை விளக்கும் ஸ்டிக்கர்கள் ஒட்டும் போராட்டத்தை தமிழகம் முழுவதும் மார்ச் 1-ம் தேதி நடத்த பாமக முடிவு செய்திருக்கிறது என்று அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இது தொடர்பாக […]

மும்பை மாநகராட்சி தேர்தல்

மும்பை மாநகராட்சி தேர்தல் – சச்சின் டெண்டுல்கர் பாந்த்ரா பகுதியில் வாக்களிப்பு

மும்பை மாநகராட்சி தேர்தல் – சச்சின் டெண்டுல்கர் பாந்த்ரா பகுதியில் வாக்களிப்பு முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மும்பை பாந்த்ரா பகுதியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார். மராட்டியத்தில் மும்பை, தானே, நாக்பூர், புனே, நாசிக் உள்பட 10 மாநகராட்சிகள், 11 மாவட்ட பஞ்சாயத்துக்கள், 118 பஞ்சாயத்துகள் ஆகியவற்றுக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 5,512 பதவிகளுக்கு 17,331 பேர் போட்டியிடுகிறார்கள். 3.77 கோடி வாக்காளர்கள் […]