பெங்களுரு டெஸ்ட் போட்டி – இந்திய அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெங்களுருவில் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. புனேயில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 333 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. […]
Author: குமார்
அறிவால் பெண்கள் சாதிக்க முடியும்: கனிமொழி பேச்சு
அறிவால் பெண்கள் சாதிக்க முடியும்: கனிமொழி பேச்சு திருச்சி, புனித வளனார் கல்லூரி மற்றும் புனித வளனார் மேலாண்மை நிறுவனம் சார்பில் பெண்கள் தின விழாவில் தி.மு.க. எம்.பி. கனிமொழி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:- அறிவு என்று வருகையில் பெண்கள் யாருக்கும் எந்த இடத்திலும் சளைத்தவர்கள் கிடையாது. இந்த அறிவு என்ற ஆயுதத்தை வைத்து நாம் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும். உங்கள் கனவுகளை எதற்காகவும் விட்டுக் […]
இலங்கை கடற்படை துப்பாக்கி சூட்டில் இறந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
இலங்கை கடற்படை துப்பாக்கி சூட்டில் இறந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே நேற்று மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பிரிட்ஜோ என்ற மீனவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒரு மீனவர் படுகாயம் அடைந்திருக்கிறார். சிங்களப்படையினரின் தாக்குதல் கண்டிக்கத்தக்கது. ராமநாதபுரம் […]
மூத்தோர் தடகளம்: 83 வயதானவருக்கு 3 தங்கப்பதக்கம்
மூத்தோர் தடகளம்: 83 வயதானவருக்கு 3 தங்கப்பதக்கம் தேசிய மூத்தோர் தடகள போட்டி ஐதராபாத்தில் சமீபத்தில் நடந்தது. இதன் ஆண்கள் பிரிவில் தமிழக அணி சாம்பியன் பட்டம் பெற்றது. 80 முதல் 85 வயது பிரிவில் பங்கேற்ற சென்னை அண்ணா நகரை சேர்ந்த நம்பிசேஷன் 3 தங்கம் வென்றார். 83 வயதான அவர் 800 மீட்டர், 1,500 மீட்டர் மற்றும் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் வென்று முத்திரை பதித்தார். […]
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் அறிக்கை தாக்கல்
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் அறிக்கை தாக்கல் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி தமிழக அரசிடம் எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் 5 அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது டெல்லி எய்ம்ஸ் டாக்டர்களும் வந்து சிகிச்சை அளித்தனர். அவர்கள் அளித்த சிகிச்சைகள் பற்றி தமிழக அரசு அறிக்கை கேட்டு இருந்தது. அதை ஏற்று டெல்லி […]
சாக்ஷி மாலிக் புகாருக்கு அரியானா மாநில அரசு மறுப்பு
சாக்ஷி மாலிக் புகாருக்கு அரியானா மாநில அரசு மறுப்பு கடந்த ஆண்டு பிரேசிலில் நடந்த ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக்குக்கு கோடிக்கணக்கில் பரிசுத்தொகை, வேலை வாய்ப்பு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும் என்று அவரது சொந்த மாநிலமான அரியானா அரசு அறிவித்தது. இந்த நிலையில் சாக்ஷி மாலிக் நேற்று முன்தினம், ‘அரியானா அரசு எனக்கு அளித்த வாக்குறுதியை இன்னும் காப்பாற்றவில்லை. இந்த அறிவிப்பு […]
பரிசுப் பொருள் தொடர்பான வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா விடுவிப்பு
பரிசுப் பொருள் தொடர்பான வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா விடுவிப்பு ரூ.2 கோடி பரிசுப் பொருள் தொடர்பான வழக்கில் இருந்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா விடுவிக்கப்பட்ட நிலையில், செங்கோட்டையன் மீதான வழக்கு கோடை விடுமுறைக்கு பின் விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா 1991-1996-ம் ஆண்டுகளில் பதவி வகித்தார். 1992-ம் ஆண்டு அவர் தன் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடினார். அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் […]
தமிழக அரசியலில் விரைவில் பெரிய மாறுதல் வரும்: துரைமுருகன்
தமிழக அரசியலில் விரைவில் பெரிய மாறுதல் வரும்: துரைமுருகன் தமிழகத்தில் விரைவில் பெரிய மாறுதல் வரப்போகிறது. தமிழகத்தின் அரசியல் 25 ஆண்டுகள் தளபதி மு.க.ஸ்டாலின் கையில் இருக்கும் என்று துரைமுருகன் கூறியுள்ளார். சென்னை மேற்கு மாவட்டம் தியாகராய நகர் கிழக்கு மேற்கு பகுதி தி.மு.க. சார்பில் மறைந்த பழக்கடை கி.ஜெயராமன் 33-வது நினைவு நாள் மற்றும் இளைஞர் எழுச்சி நாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டம் தி.நகரில் நடந்தது. கிழக்கு […]
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை எடப்பாடி பழனிசாமி வழங்கி வைப்பு
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை எடப்பாடி பழனிசாமி வழங்கி வைப்பு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- 2016-ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை மூலம் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய மழையின் அளவு மிகக் குறைவாகவே கிடைத்துள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் இது வரை இல்லாத அளவிற்கு கடும் வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களும் வறட்சியால் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டது. […]
போயஸ் கார்டன் வீட்டுக்கு தீபா பேரவையினர் வரப்போவதாக தகவல் இல்லை
போயஸ் கார்டன் வீட்டுக்கு தீபா பேரவையினர் வரப்போவதாக தகவல் இல்லை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா நிலையம் வீட்டை நினைவு இல்லமாக்கி பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் கடந்த 23-ந் தேதி பேட்டியளிக்கும் போது போயஸ் கார்டன் வீடு தனக்கும் தீபாவுக்கும் மட்டுமே சொந்தம். வேறு யாரும் அதை உரிமை […]





