தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று பத்திரப்பதிவு தடையை ஐகோட்டு தளர்த்தி உள்ளது. இதன் மூலம் அக்டோபர் 20-ந்தேதிக்கு முன் வாங்கிய நிலத்தை பதிவு செய்யலாம். சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் யானை ராஜேந்திரன் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். ‘தமிழகம் முழுவதும் விவசாய நிலங்கள் அனைத்தும் சட்டவிரோதமாக வீட்டு மனையாக மாற்றப்படுகிறது. இதனால், விவசாயமும், விவசாய நிலங்களும் அழிந்து வருகின்றன. விவசாய நிலத்தில் வீட்டு மனைகள் அமைக்க சட்டப்படி அனுமதி […]
Author: குமார்
மீனவ சமுதாயத்திற்காக கச்சத்தீவை மீட்க போராடுவேன் என்று ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தீபா தேர்தல் வாக்குறுதி
‘மீனவ சமுதாயத்திற்காக கச்சத்தீவை மீட்க போராடுவேன்’ என்று ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தீபா வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கூறி உள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:- புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மீனவ சமுதாயத்தின் மீது அதிகமான நம்பிக்கை வைத்திருந்தார். அவர் மறைவுக்கு பின் அவரது அரசியல் வாரிசும் எனது அத்தையுமான அம்மா கோட்டையில் சுதந்திர […]
நடிகர் ரஜினியின் இலங்கை பயணம் ரத்து: எங்களுக்கு எதிராக தமிழர்களை திசை திருப்பி விடுகிறார்கள் – விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்
நடிகர் ரஜினியின் இலங்கை பயணம் ரத்து செய்யப்பட்டது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எங்களுக்கு எதிராக தமிழர்களை திசை திருப்பி விடுவதாக தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த் இலங்கையில் லைக்கா நிறுவனம் சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கும் விழாவில் பங்கேற்க செல்ல இருந்தார். அவரது இலங்கை பயணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டவர்கள் கூறினர். […]
ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் ஆதரவாளர்கள் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக தேர்தல் கமிஷனிடம் ஓ.பி.எஸ். அணியினர் மனு
ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் ஆதரவாளர்கள் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக டெல்லியில் தேர்தல் கமிஷனிடம் ஓ.பி.எஸ். அணியினர் மனு கொடுத்தனர். ஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.இங்கு அ.தி.மு.க. இரு அணிகளாக போட்டியிடுகிறது. சசிகலா அணியின் சார்பாக டி.டி.வி. தினகரனும், ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பாக மதுசூதனனும் போட்டியிடுகிறார்கள். ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் அணியினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவதாக ஓ.பி.எஸ்.அணியினர் தொடர்ந்து புகார் கூறி வந்தனர். […]
மத்திய பிரதேசத்தில் கொலை செய்யப்பட்ட கேரள கன்னியாஸ்திரிக்கு அருளாளர் பட்டம் – போப் பிரான்சிஸ் ஒப்புதல்
மத்திய பிரதேசத்தில் கொலை செய்யப்பட்ட கேரள கன்னியாஸ்திரிக்கு அருளாளர் பட்டம் வழங்க போப் பிரான்சிஸ் ஒப்புதல் அளித்துள்ளார். கேரள மாநிலம் கொச்சிக்கு அருகிலுள்ள புல்லுவழி என்ற ஊரில் 1954-ம் ஆண்டு பிறந்தவர் ராணி மரியா. இவர் 1972-ல் கிடங்கூரில் உள்ள பிரான்சிஸ்கன் கிளாரட் துறவற சபையில் சேர்ந்து கன்னியாஸ்திரி ஆனார். 1975-ல் உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னூருக்கு அனுப்பப்பட்டார். 1980-ல் கன்னியாஸ்திரியான இவர், 1992ல் மத்திய பிரதேச மாநிலம் உதய்நகருக்கு பணியாற்ற […]
எதிர்காலத்தில் நவீன தொழில்நுட்ப உதவியுடன் இந்தியா போரை சந்திக்கும் – ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத்
முன்பு போல் இல்லாமல் எதிர்காலத்தில் நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் இந்தியா போர்களை சந்திக்கும் என ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற ராணுவம் சார்ந்த அறிக்கை தொகுப்பு வெளியீட்டு விழாவில் ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் பங்கேற்றார். அப்போது ராணுவ வடிவமைப்பு பிரிவின் சார்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கையின் இரண்டாவது தொகுப்புகளை வெளியிட்டு பேசிய அவர் ,” முன்பு போல் இல்லாமல் வரும் காலங்களில் […]
தெலுங்கானா மாநில சட்டசபையில் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் இருந்து சஸ்பெண்ட் – தெலுங்கானா பா.ஜ.க கட்சியினர் கண்டனப் பேரணி
தெலுங்கானா மாநில சட்டசபையில் இருந்து பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து அக்கட்சியினர் இன்று கண்டனப் பேரணி நடத்தினர். தெலுங்கானா மாநிலத்தில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டு விகிதத்தை அதிகரிக்க அம்மாநில அரசு முடிவெடுத்தது. அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து அம்மாநில பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் 5 பேரையும் இரண்டு நாட்கள் சஸ்பெண்டு செய்து சபாநாயகர் நடவடிக்கை மேற்கொண்டார். சபாநாயகரின் இந்த […]
வரலாறு காணாத அளவில் இந்த ஆண்டு தீவிர தட்பவெப்ப நிலை நீடிக்கும் – உலக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
வரலாறு காணாத அளவில் இந்த ஆண்டு தீவிர தட்பவெப்ப நிலை நீடிக்கும் என்று உலக வானிலை ஆய்வு அமைப்பு எச்சரித்துள்ளது. கடல் நீர்மட்டம் இதுவரையில்லாத அளவு அதிகரித்துள்ளது, கடல் பனிப்பாறை 40 லட்சம் சதுர கி.மீ பரப்பளவுக்கு உருகிக்கரைந்துள்ளது. மேலும், 2017 இல் வலுவான எல் நினோ விளைவு இல்லை என்றாலும் உலகில் ஏற்படும் மாற்றங்கள் வானிலை அமைப்பின் செயல்பாடுகள் புரிந்து கொள்வதற்கு சவாலாக உள்ளது. இது பற்றிய ஆய்வை […]
ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் இந்திய வீரர்களின் பங்களிப்பு அபாரமானது – அமைதிப்படை தலைவர் ஹெர்வ் லாட்சவுஸ் புகழாரம்
ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் இந்திய வீரர்களின் பங்களிப்பு அபாரமானது எனவும், திறமையான வீரர்களை இந்தியா கொண்டுள்ளதாகவும் அமைதிப்படை தலைவர் ஹெர்வ் லாட்சவுஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் சபையில் உள்ள அமைதிப்படை அமைப்பானது, உள்நாட்டு போர் நிலவும் நாடுகளில் அமைதி ஏற்பட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. மேலும், அப்பகுதியில் உள்ள பொது மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனது. இந்த அமைதிப்படையில் பல நாடுகளைச் சேர்ந்த ராணுவ […]
காயமடைந்த போலீஸ் அதிகாரியின் உயிரை காப்பாற்ற போராடிய மந்திரியை உயர் பதவி அளித்து இங்கிலாந்து ராணி எலிசபத் கவுரவித்துள்ளார்
இங்கிலாந்து நாட்டு பாராளுமன்றம் மீது சமீபத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது காயமடைந்த போலீஸ் அதிகாரியின் உயிரை காப்பாற்ற போராடிய மந்திரியை உயர் பதவி அளித்து இங்கிலாந்து ராணி எலிசபத் கவுரவித்துள்ளார். இங்கிலாந்து பாராளுமன்ற கட்டிடம் லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் பாலம் அருகே உள்ளது. கடந்த 22-ம் தேதி இந்த கட்டிடத்தின் வழியாக காரை வேகமாக ஓட்டி வந்த ஒரு தீவிரவாதி அங்கிருந்த மக்கள் கூட்டத்தின்மீது மோதினான். அதன் பின்னர் பாராளுமன்ற நுழைவு […]





