Author: குமார்

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 77 புள்ளிகள் உயர்வு

இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 77 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த நான்கு நாள் வர்த்தகத்தில் குறியீடு 512 புள்ளிகளாக உயர்ந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 77.58 புள்ளிகள் உயர்ந்து 31,749.29 புள்ளிகளாக உள்ளது. ரியல் எஸ்டேட், சுகாதாரம், ஆட்டோ, உலோகம் மற்றும் மூலதன பொருட்கள் போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை அதிகரித்து காணப்பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி […]

இளைஞர்கள் அரசியலுக்கு வரலாம் – : அன்னா ஹசாரே அறிவுரை

டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அன்னா ஹசாரே கூறியதாவது: இளைஞர்கள் யாரும் என்னை பின்பற்றி திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க வேண்டாம். திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது சுலபமல்ல. இது கூர்மையான வாளின் மீது நடந்து செல்வதை விட கடினமானது. எனவே இளைஞர்கள் திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் வாழ வேண்டும். தூய்மையான எண்ணங்களும், செயல்களும் இருக்க வேண்டும். இளைஞர்கள் அரசியலுக்கு வரலாம். ஆனால் திருமண […]

தமிழக புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித் இன்று(அக்.,5) சென்னை வருகிறார்.

தமிழக கவர்னராக இருந்த ரோசையாவின் பதவிக்காலம் முடிந்த பின், மஹாராஷ்டிர மாநிலம் கவர்னராக இருந்து வந்த வித்யாசாகர் ராவ் தமிழக பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தமிழகத்தின் புதிய கவர்னராக பன்வாரிலால் புரோஹித்தை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 30ம் தேதி(செப்.,30) உத்தரவு பிறப்பித்தார்.  இந்நிலையில், புதிய கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று(அக்.,5) பிற்பகல் சென்னை வருகிறார். கிண்டி ராஜ்பவனில் நாளை காலை 9.30 மணிக்கு நடைபெறும் விழாவில், […]

லாஸ் வேகாஸ் துப்பாக்கிச் சூடு: ஐபோன் மூலம் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த பெண்மணி

அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் இசை நிகழ்ச்சியின் போது ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 59 பேர் பிரதாபமாக உயிரிழந்ததோடு 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  துப்பாக்கி சூட்டில் காயமுற்றோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தாக்குதல் சார்ந்த விசாரணை ஒருபுறம் நடைபெற்று வருகிறது. அதேவேளையில், சம்பவத்தில் அரங்கேறிய வீரதீர செயல்கள் சார்ந்த தகவல்கள் வெளியாகத் துவங்கியுள்ளன. அந்த வகையில் துப்பாக்கி […]

இந்தியாவின் பிரதமராக பயங்கரவாதி நரேந்திர மோடி ஆட்சி செய்கிறார் என பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி கவாஜா ஆசிப் கருத்து

மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் சமீபத்தில் பேசியபோது பாகிஸ்தானை கடுமையாக சாடினார். அந்த நாடு, பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்து வருகிறது என அவர் கூறினார். அவர் அவ்வாறு கூறியதற்கு பதிலடி தருவதுபோல, பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி கவாஜா ஆசிப் கருத்து வெளியிட்டுள்ளார். அவர், ஜியோ டி.வி.யில் ‘டாக் ஷோ’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது, “இந்த நேரத்தில் அங்கு (இந்தியா) ஒரு […]

ஜியோ

ரூ.149க்கு அன்லிமிட்டெட் டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ

புதிய திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு ரூ.149 செலுத்தும் போது அன்லிமிட்டெட் டேட்டா வழங்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்த ரூ.149 திட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி புதிய மாற்றம் வாடிக்கையாளர்களுக்கு 2 ஜிபி டேட்டா வழங்குகிறது. 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 300 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவற்றை வழங்குகிறது. எனினும் இந்த திட்டத்தில் வழங்கப்படும் 2 ஜிபி டேட்டா மட்டுமே […]

ரிலையன்ஸ்

ரிலையன்ஸ் டிஜிட்டலில் புதிய ஐபோன் வாங்குவோருக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் டிஜிட்டல் மூலம் ஐபோன் 8, ஐபோன் பிளஸ் ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு 70 சதவிகிதம் பைபேக் சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆண்டிற்கு பின் ஐபோனினை திரும்பி வழங்குவோருக்கு பைபேக் சலுகை வழங்கப்படுகிறது. செப்டம்பர் 22-ம் தேதி முதல் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் முன்பதிவு துவங்கியது. இந்நிலையில், வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் டிஜிட்டல், அமேசான், ஜியோ அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் ஜியோ ஸ்டோரில் இருந்து முன்பதிவு […]

உலகின் மிகப்பெரிய பட்டை தீட்டப்படாத வைரம் 53 மில்லியன் டாலருக்கு ஏலம்

உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான வைரம் ஏலம் விடப்பட்டது. கனடாவின் லூகரா வைர கார்ப்பரேஷன் இத்தகவலை தெரிவித்தது. இதன் எடை 1,109 காரட்டாகும். இந்த வைரம் 3,106.75 காரட் குல்லியன் அளவு கொண்டது. இதனை 105 சிறிய வைரங்களாக வெட்டலாம். ஏலத்தில் இதை இங்கிலாந்தின் பிரபல கிராஃப் டயமண்ட்ஸ் நிறுவனம் ஒரு காரட்டிற்கு 47,777 டாலர் வீதம் என்ற கணக்கில் ஏலம் எடுத்துள்ளது. இந்த வைரம் போட்ஸ்வானாவின் சுரங்கம் ஒன்றில் […]

சமாஜ்வாடி கட்சியில் பிளவு கிடையாது, புதிய கட்சியை தொடங்கப்போவது இல்லை – முலாயம் சிங் யாதவ்

உத்தரபிரதேசத்தில் பிப்ரவரி – மார்ச் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக சமாஜ்வாடி கட்சியில் பெரும் மோதல் வெடித்தது, இது கட்சி உடைவிற்கும், தேர்தலில் தோல்விக்கும் வழிவகை செய்தது. சமாஜ்வாடி கட்சியின் உடைவு பாரதீய ஜனதாவிற்கு ஆதரவான நிலையை மேலும் வலுப்படுத்தியது. சமாஜ்வாடி கட்சியின் பிளவு தேர்தல் ஆணையம் வரையில் சென்று, கட்சி, சின்னம் அகிலேஷ் யாதவிற்கே சென்றது. இதனையடுத்து தனிப்பிரிவாக செயல்பட்ட முலாயம் சிங் யாதவ் பா.ஜனதா சார்பு […]

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக மூத்த தலைவர் முகுல் ராய் அறிவிப்பு

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ள மூத்த தலைவர் முகுல் ராய், எம்.பி. பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார். மேற்கு வங்காளம் மாநிலத்தை ஆட்சி செய்யும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் முகுல் ராய். பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துவரும் இவர், மம்தா பானர்ஜிக்கு அடுத்தபடியாக துணைத்தலைவராகவும் பதவிவகித்தார். அக்கட்சியின் இரண்டாவது தலைவராக மதிக்கப்பட்டு வந்தார். சமீப காலமாக பா.ஜ.க. […]