Author: தமிழவன்

கதவில்லாத கோவிலில் சிறுமியை எப்படி?

காஷ்மீரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி ஆஷிபா குறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதம், ஜம்மு காஷ்மீ மாநிலத்தில் 8 வயது சிறுமி ஆஷிபா கடத்தப்பட்டு ஒரு கோவிலில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். அந்த சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து சிலர் அவரை சீரழித்துள்ளனர். 7 நாட்களில் ஒரு கோவிலில் அந்த சிறுமியை அடைத்து […]

கங்கை அமரனிடம் அடித்து பிடுங்கிய பங்களாவை ஒப்படை: தினகரனுக்கு எச்.ராஜா

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஒரு பூஜையில் கலந்துக்கொண்டார் பாஜக தலைவர் எச்.ராஜா. இவர் எப்போதும் சர்ச்சை கிளப்பும் வகையில் பேசக்கூடியவர். தற்போதும் அதே மாதிரிதான் பேசியுள்ளார். எச்.ராஜா கூறியது பின்வருமாறு, காவிரி மேலாண்மை வாரியமோ அல்லது ஏதாவது ஒரு அமைப்போ ஏற்படுத்தும்போது, அந்த அமைப்பில் கருத்தொற்றுமையுடன் 4 மாநிலங்களும் பங்குபெற வேண்டும். ஆனால் கருத்தொற்றுமை ஏற்படவில்லை இதனால் உச்ச நீதிமன்றத்தை மத்திய அரசு அணுகியுள்ளது. ஆனால், கடைசி நேரத்தில் ஸ்கீம் […]

சிரியாவின் கோர நிலை

சிரியாவில் அரசு தரப்பிற்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் மத்தியில் போர் நடைபெற்று வருகிறது. சிரிய அரசுக்கு ஆதரவாக ரஷ்யா செயல்பட்டு வருகிறது. இருதரப்பினருக்கும் இடையேயான போர் காரணமாக மக்கள் காரணமின்றி தங்களது உயிரைவிட்டு வருகின்றனர். இதில் குழந்தைகள், பெண்கள் என அனைவரும் அடக்கம். சமீபத்தில் சிரியாவில் நடத்தப்பட்ட ராசாயன தாக்குதலால் பல குழந்தைகள் முச்சிதிணறி உயிர் இழந்தனர். இதனால், கோபம் அடைந்த டிரம்ப், சிரியா மற்றும் ரஷ்யா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் […]

5 வயதில் நானும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டேன்

என்னைப்போல் நிறைய பேர் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படுகிறார்கள் என்று நடிகை நிவேதா பெத்துராஜ் தெரிவித்துள்ளார். ஒரு நாள் கூத்து திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். சிறுமி ஆசிபாவுக்கு நடந்த பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நடிகைகள் உள்பட பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இதுதொடர்பாக நடிகை நிவேதா பெத்துராஜ் தானும் சிறு வயதில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:- நானும் சிறுவயதில் பாலியல் […]

டொனால்ட் ட்ரம்ப்

சிரியா மீதான தாக்குதல் தொடரும்

சிரியா ரசாயன தாக்குதல் நடத்தினால் மீண்டும் பதிலடி தாக்குதல் நடத்தப்படும் என்றும், இதற்காக அமெரிக்கா ஆயுதங்களை தயார் நிலையில் வைத்துள்ளது என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக எச்சரித்து உள்ளார். சிரியாவில் கிளர்ச்சி படைகளுக்கும் அரசு தரப்பிற்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடைபெறுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்யா மீதும் சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். […]

பாஜகவிற்கு அடிபணிந்தாரா தினகரன்?

அமமுக கட்சியின் தலைவர் தினகரன், பாஜகவிற்கு அடிபணிந்துவிட்டார் என்று வெளியான செய்திக்கு, தினகரன் பதில் அளித்துள்ளார். கடந்த 12 ந் தேதி தமிழக வந்த பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தை திமுக உள்ளிட்ட கட்சிகள் நடத்தினர். இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன், என்னதான் இருந்தாலும் மோடி இந்தியாவின் பிரதமர் என்றும் அவருக்கு கருப்புக்கொடி காட்டுவது தவறு என்றும் கருத்து தெரிவித்திருந்தார். இதனால்ன் […]

சாதனை படைத்த கேப்டன் விஜயகாந்திற்கு பாராட்டு விழா

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் திரைத்துறைக்கு வந்து 40 ஆண்டுகள் ஆகிய நிலையில் இன்று அவருக்கு காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் பாராட்டு விழா நடைபெறுகிறது. 150 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் கேப்டன் விஜயகாந்த், 1978 ஆண்டு திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். மதுரையில் இருந்து சினிமா ஆசையோடு வந்த விஜயகாந்த் இயக்குநர் எம்.ஏ கஜாவின் இனிக்கும் இளமை படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். ஆரம்பத்தில் இவரது படம் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. பின்னர் […]

தீக்குளித்த வைகோவின் உறவினர் மரணம்

சமீபத்தில் தீக்குளித்த வைகோவின் உறவினர் சரவண சுரேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சமீபத்தில் அவருக்கும், சீமான் தரப்புக்கும் ஒரு மோதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பலரும் வைகோ தரக்குறைவாக விமர்சித்து சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களை பதிவு செய்து வந்தனர். காவிரி விவகாரம் மற்றும் வைகோவை பற்றிய அவதூறு மீம்ஸ்களை கண்ட வைகோவின் உறவினர் சரவண சுரேஷ் மனமுடைந்து தீக்குளித்தார். அதன்பின், சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டு மருத்துவமனையில் […]

நிலைமை சரியில்லை

தமிழ்நாட்டில் தற்போது தனக்கு சாதகமில்லாத சூழ்நிலை நிலவுதால், அரசியல் அறிவிப்பை நடிகர் ரஜினிகாந்த் தள்ளிப்போட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆன்மீக அரசியலை முன்னெடுப்பதாக அறிவித்த ரஜினி காவிரி நீர், ஸ்டெர்லைட், மீத்தேன், திருச்சி உஷா மரணம் உள்ளிட்ட மக்கள் பிரச்சனைகளில் பெரும் அமைதி காத்தார். அதனால், அவர் எதற்கும் கருத்து தெரிவிக்காமல் இருக்கிறார் என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், தான் இன்னும் முழுநேர அரசியல்வாதி ஆகவில்லை என ரஜினி பதில் கூறி […]

பழிவாங்கும் எண்ணத்துடன் மூண்டுள்ள பனிப்போர்

ஐக்கிய நாடுகள் அவையின் பொது செயலாளர் ஆன்றணியோ குட்டர்ஸ் பழிவாங்கும் எண்ணத்தோடு பனிப்போர் மனப்பான்மை திரும்பி வந்துள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். சிரியா தொடர்பாக பதற்றம் அதிகரிப்பது உலகம் முழுவதும் ராணுவ தளவாடங்களின் அதிகரிப்புக்கு இட்டுச்செல்லும் என்று குட்ரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிரியாவின் டூமா நகரில் நடைபெற்றதாக சந்தேகிக்கப்படும் ரசாயன தாக்குதலால் உருவாகியுள்ள மோசமான நிலைமையில் கூடிய ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை கூட்டத்தின் தொடக்கத்தில் குட்ரஸ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். […]