Author: மலரவன்

தொடர்கிறது அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம்! வடக்கு ஹர்த்தாலுக்கு வலுக்கிறது பேராதரவு!!

வவுனியா மேல்நீதிமன்றத்தில் 4 வருடங்களாக இடம்பெற்ற வழக்கை சட்டமா அதிபர் அநுராதபுரம் மேல்நீதிமன்றத்துக்கு மாற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தமது வழக்கை மீளவும் வவுனியா மேல்நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு வலியுறுத்தியும் அநுராதபுரம் சிறைச்சாலையில் செங்கன் எனப்படும் இராஜதுரை திருவருள், மதியழகன் சுலக்ஷன், கணேசன் தர்ஷன் ஆகிய மூன்று தமிழ் அரசியல் கைதிகளும் அநுராதபுரம் சிறைச்சாலையில் முன்னெடுத்துவரும் உண்ணாவிரதப் போராட்டம் இன்று வியாழக்கிழமை 18ஆவது நாளாகவும் தொடர்கின்றது. அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் தொடர்பில் மைத்திரி […]

ஜனாதிபதி

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம்: ஜனாதிபதியின் அழைப்புக்காக காத்திருக்கிறது சம்பந்தன் குழு!

அநுராதபுரம் சிறைச்சாலையில் மூன்று தமிழ் அரசியல் கைதிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், அவர்களின் கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரில் பேசுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் அனுமதி கேட்டுள்ளனர். எனினும், ஜனாதிபதி செயலகத்திலிருந்து சந்திப்புக்குரிய அழைப்பு இதுவரை வரவில்லை. உண்ணாவிரதக் கைதிகளுக்கு அரசு உடனடியாக உரிய பதிலை வழங்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் […]

விஜய் நடிக்கும் புதிய படத்தில் நடிக்கும் நடிகை

தெலுங்கிற்கு சென்று நடிக்கத் தொடங்கிய ரகுல் பிரீத் சிங் நடித்த பல படங்கள் ஹிட்டாக அமையவே, தெலுங்கு சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாகி விட்டார் அவர். இந்த நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்த ஸ்பைடர் படத்தில் நடித்து, தமிழில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்த ரகுல்பிரீத்சிங், தற்போது கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தில் […]

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மரணம் பற்றி ராகுல்காந்தி உருக்கம்

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் சடலத்தை கண்டு, தாம் மிகுந்த வேதனையடைந்ததாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி, வதோதராவில் நேற்று தொழில் அதிபர்களுடன் கலந்துரையாடினர். அப்போது, அதில் பங்கேற்றவர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு ராகுல்காந்தி பதில் அளித்தார். இந்த நிலையில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டது குறித்து ராகுலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், பிரபாகரனின் சடலத்தை […]

தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு வலியுறுத்தி வடக்கில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்கள்!

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும், நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்கக் கோரியும் யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் இன்று மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. யாழ்ப்பாணத்தில் இன்று காலை 9 மணியளவில் யாழ். நகர் மத்திய பஸ் நிலையத்துக்கு முன்னால் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் போராட்டம் […]

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: முதல் 10 இடங்­க­ளுக்­குள் தமிழ் மாண­வர் இல்லை!

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய ரீதியில் முதல் 10 இடங்களுக்குள் எந்தவொரு தமிழ் மொழிமூலமான மாணவரும் இடம்பெறவில்லை என்று பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தமிழ்மொழிமூலமான முதலிடத்தை யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் பொஸ்கோ மாணவி அனந்திகா உதயகுமாரும், கொழும்பு பம்பலப்பிட்டி இராமநாதன் மகளிர் கல்லூரி மாணவி நிர்ஜா ரவீந்திரராஜாவும் 194 புள்ளிகளைப் பெற்று பகிர்ந்து கொண்டுள்ளனர். நீர்கொழும்பு ஹரிஸ்சந்திர மகா வித்தியாலய மாணவன் தினுக கிரிசான் குமார் […]

அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு

அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் மேண்டலே பே ஓட்டல் அருகில் திறந்த வெளியில் பாரம்பரிய இசை நிகழ்ச்சி நடந்தது. இசை நிகழ்ச்சியில் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருந்த போது, அங்கிருந்த உயரமான கட்டிடத்தில் இருந்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அமெரிக்க நேரப்படி இரவு 10:30 மணியளவில் இந்த துப்பாக்கி சூடு தொடங்கியது. துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட மக்கள் அலறியடித்து ஓடினர். இதில் இருவர் உயிரிழந்தனர். 24 பேர் […]

பௌத்த தேரர்களை அரசியல் தலைவர்களே தீர்வுக்கு வழிப்படுத்த வேண்டும்!

“அரசியல் தீர்வுக்கு தமிழர் தரப்பில் இருந்து எந்த எதிர்ப்பும் இல்லை. மாறாக பௌத்த தேரர்களும் தென்னிலங்கை இனவாதிகளுமே தீர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். அவர்களை தெற்கு அரசியல் தலைவர்களே வழிப்படுத்த வேண்டும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் பேசி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதும் உங்களின் பொறுப்பு.” – இவ்வாறு பஸில் ராஜபக்ஷவிடம் நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் எடுத்துரைத்தார். இரண்டு நாள் பயணமாக வடக்குக்கு […]

வடக்கு, கிழக்கு வாழ் மலையகத்தவர்களுக்கு தமிழரசுக் கட்சியில் பிரதிநிதித்துவம் வேண்டும்!

வடக்கு – கிழக்கில் உள்ள மலையக மக்களுக்கு தேர்தலின்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்று மலையக மக்கள் ஒன்றியத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில், அந்தக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் ஆகியோரை நேற்று மாலை சந்தித்துக் கலந்துரையாடியபோதே மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கில் உள்ள மலையக மக்கள் […]

காணாமல்போனோர் பணியகத்துக்கு நான்கு தமிழ் ஆணையாளர்கள் கட்டாயம் வேண்டும்

“காணாமல்போனோர் அலுவலகத்துக்கு நியமிக்கப்படும் 7 ஆணையாளர்களில் 4 பேர் தமிழர்களாக இருக்கவேண்டும். எமது பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாட ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்து தரவேண்டும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனிடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். வடக்கு மாகாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கும் இடையேயான சந்திப்பு மன்னார் மாவட்ட ஆயர் இல்லத்தில் நேற்று இடம்பெற்றது. […]