மேஷம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம் ரிஷபம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். அதிஷ்ட எண்: 5 […]
Author: மலரவன்
முன்னாள் மத்திய மந்திரி பா.சிதம்பரத்தின் கருந்து இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் உள்ளது என மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.
முன்னாள் மத்திய மந்திரி பா.சிதம்பரம் குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அப்போது அவர் ஜம்மு காஷ்மீர் மக்கள் தன்னாட்சி அதிகாரம் கேட்பது நியாயமானது தான் எனவும், அது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்யலாம் என கூறியிருந்தார். அவரது கருத்திற்கு பதில் அளித்த ஸ்மிருதி இரானி கூறுகையில், சிதம்பரம் கூறிய கருத்து இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளது. வல்லபாய் படேல் இந்தியா முழுவதும் ஒரு […]
“காஷ்மீருக்கு சுயாட்சி அளிக்க வேண்டும்” ப.சிதம்பரம் கோரிக்கை; பா.ஜனதா கண்டனம்
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘காஷ்மீரில் உள்ளவர்கள் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை அப்படியே பின்பற்ற வேண்டும் என்று கேட்கிறார்கள். அதாவது, தங்களுக்கு அதிகபட்ச சுயாட்சி வேண்டும் என்பதுதான் அவர்களது கோரிக்கை. அவர்களுடன் நான் உரையாடியபோது, பெரும்பாலானோர் சுயாட்சியை விரும்புவதை உணர்ந்தேன். நானும் கூட அதையே விரும்புகிறேன்’ என்று கூறினார். இந்நிலையில், ப.சிதம்பரத்துக்கு பா.ஜனதா கடும் கண்டனம் […]
கேட்டலோனியா மாநில அரசு கலைக்கப்பட்டதாக அறிவிப்பு!
கேட்டலோனியா மாநில அரசு கலைக்கப்பட்டதாகவும் வரும் டிசம்பர் 21ஆம் தேதி அம்மாநிலத்திற்கு தேர்தல் நடத்தப்படும் என்றும் ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய் அறிவித்துள்ளார். ஸ்பெயின் நாட்டில் இருந்து விடுதலைபெறுவது குறித்த கருத்தை அறிவதற்கான பொதுவாக்கெடுப்பு கேட்டலோனியா மாநிலத்தில் கடந்த ஒன்றாம் தேதி நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலானோர் விடுதலைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். இதை ஸ்பெயின் ஏற்காத நிலையில் கேட்டலோனியா விடுதலையடைந்ததாகத் தன்னிச்சையாக அறிவித்தது. இதையடுத்து அந்த மாநில அரசு கலைக்கப்பட்டதாகவும், மீண்டும் […]
டெங்கு காய்ச்சலுக்கு மட்டும் பயன்படுகிறதா நிலவேம்பு குடிநீர்?
தமிழகத்தில் வேகமாக பரவிவரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் நிலவேம்பு குடிநீர் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. சித்த வைத்தியத்தின் மூலம் எளிதில் குணப்படுத்தலாம் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.
வடிவேலை யாரும் கேட்க மாட்டிங்களா? கோர்த்து விட்ட குஷ்பு
‘மெர்சல்’ படத்தில் விஜய் பேசிய ஜிஎஸ்டி வசனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக தலைவர்கள் அதே படத்தில் மத்திய அரசின் பண மதிப்பிழப்பு திட்டங்களை கேலி செய்த வடிவேலுவை யாரும் கண்டுகொள்ளவில்லை இந்த நிலையில் விஜய்யை எல்லோரும் மாற்றி மாறி கேள்வி கேட்கிறீர்களே. வடிவேலுவை மட்டும் ஏன் கேள்வி கேட்பதில்லை. அப்படியென்றால் விஜய்யை மட்டும் எதிர்ப்பதுதான் பாஜகவின் நோக்கமா? என்று கூறியுள்ளார். போகிற போக்கில் தன்னை கோர்த்துவிட்ட குஷ்பு மீது வடிவேலு […]
சம்பளத்தைக் குறைத்த தகதக நடிகை
வாய்ப்புகள் எதுவும் இல்லாததால், தகதக நடிகை தன்னுடைய சம்பளத்தைக் குறைத்துவிட்டார் என்கிறார்கள். பிரமாண்டமாக வெளியாகி 1000 கோடிக்கு மேல் வசூலித்த சரித்திரப் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார் தகதக நடிகை. அந்தப் படத்தின் முதல் பாகத்தில் நடிகைக்கு ஏகப்பட்ட ஸ்கோப். எனவே, தன்னுடைய சம்பளத்தை ஒரு கோடியாக உயர்த்தினார். ஆனால், இரண்டாம் பாகத்தில் ஒரு காட்சியில் மட்டுமே தலைகாட்ட வாய்ப்பு கிடைத்தது. எனவே, இவரை மறந்துவிட்டு இன்னொரு ஹீரோயினைக் கொண்டாட […]
பேனர் தடையை நீக்க சென்னை மாநகராட்சி மேல்முறையீடு
உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர்கள், கட்-அவுட்டுக்கள் வைக்க கூடாது என்று சமீபத்தில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவால் அரசியல் கட்சி தலைவர்களும் சினிமா நடிகர்களின் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இந்த தடையால் பிரிண்டிங் பிரஸ் தொழில் பாதிப்பு அடையும் என்றும் கருத்து கூறப்பட்டது இந்த நிலையில் உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர், கட்-அவுட் வைக்க தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை மாநகராட்சி சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த […]
மருத்துவமனையில் நடராஜன் ; வெளியான புகைப்படம்
புதிய பார்வை இதழின் ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான நடராஜன் உடல் நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயலிழப்பால் சென்னை குளோபல் மருத்துவமனையில் நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடராஜனின் உடல் நிலை கவலைக்கிடமாக இருந்ததால் அவரை பார்க்க பரோல் கேட்டு சிறையில் இருந்து 5 நாட்கள் பரோலில் வந்து விட்டு சென்றார் சசிகலா. முன்னதாக நடராஜனுக்கு உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. அதன்பின், அவருக்கு செயற்கை […]
நமது இயக்கத்தில் இணையுங்கள்
நடிகர் கமல்ஹாசன் விரைவில் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற நவ.7ம் தேதி அவரது பிறந்தநாளன்று அவர் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஒரு செய்திதாளுக்கு அவர் அளித்த பேட்டியில் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். செய்வார்கள் என காத்திருந்தது போதும். நம்மால் முடியும். கடமையை செய்ய விரும்புபவர்கள் வாருங்கள். இளைஞர்களை ஒன்றிணைக்க வேண்டிய தருணம் இது. கடமையை செய்ய யார் முன்வந்தாலும் அவர்களை இருகரம் கூப்பி வரவேற்கிறேன். […]





