கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 45). இவர் அப்பகுதியில் உள்ள கல்குவாரி ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 13 மற்றும் 10 வயதில் 2 மகள்கள் உள்ளனர். மேலும் மஞ்சுநாத் தனது தாய், மனைவி, குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் குடிபோதைக்கு மஞ்சுநாத் அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் அவர் அடிக்கடி குடிபோதையில் வீட்டுக்கு வந்து குடும்பத்தினருடன் தகராறு […]
Author: மலரவன்
பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க ஒருங்கிணைந்த செயல்பாட்டு பொறிமுறை அவசியம் – ஜனாதிபதி
அனர்த்தத்திற்குப் பிறகு மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க, சாதாரண அரச பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டு பொறிமுறை அவசியம் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார். கண்டி மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். மாவட்டத்தின் நெடுஞ்சாலை கட்டமைப்பு, மின்சாரம், நீர் மற்றும் எரிபொருள் விநியோகம், நீர்ப்பாசனம் மற்றும் தொடர்பாடல் கட்டமைப்புகளை சீர்செய்வது உள்ளிட்ட அத்தியாவசிய உட்கட்டமைப்பு […]
டிசம்பர் 14 வரை இலங்கைக்கு ஆபத்து! – நாகமுத்து பிரதீபராஜா
இலங்கை முழுவதிலும் இன்று முதல் எதிர்வரும் 14ஆம் திகதி வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்று இலங்கையின் தென்மேற்கு பகுதியை மையமாகக் கொண்டு வளிமண்டல தளம்பல் நிலை உருவாகும் வாய்ப்புள்ளது. அத்தோடு அதிக ஈரப்பதன் கொண்ட கீழைக்காற்றுக்களின் வருகையும் இருக்கும். எனவே, இன்று முதல் எதிர்வரும் 14ஆம் […]
அமெரிக்காவின் இரண்டு பெரிய விமானங்கள் இலங்கைக்கு வந்தடைந்தன!
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான நிவாரண போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், அமெரிக்க விமானப்படையின் இரண்டு C-130J சுப்பர் ஹெர்குலஸ் ரக விமானங்கள், அதன் பணியாளர்களுடன் இன்று கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தை வந்தடைந்தன. அனர்த்த முகாமைத்துவ நிலையம் அடையாளம் கண்டுள்ள மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவசரகால விநியோகப் பொருட்களான,கூடாரங்கள், நீர், சுகாதார வசதிகள், உணவு மற்றும் மருத்துவ உதவிகளை கொண்டு செல்ல இந்த அணி இலங்கை விமானப்படையுடன் இணைந்து பணியாற்றவுள்ளது. இந்த […]
எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும் அனர்த்தத்தைத் தடுக்க முடியாது! – சரத் பொன்சேகா
இலங்கையில் கடந்த நாட்களில் நிலவிய அதிதீவிர காலநிலையைத் தடுப்பதற்குத் தவறியதற்காக அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடரும் எதிர்க்கட்சியின் நடவடிக்கை அபத்தமானது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சி காலங்களின் போதும், இது போன்ற நிலைமை ஏற்பட்டிருந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் இது போன்ற அனர்த்தம் ஏற்படக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த கால ஆட்சியாளர்கள் ஆட்சியில் […]
தெஹிவளை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – ஒருவர் கைது
தெஹிவளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தெஹிவளை- “ஏக்வாடஸ்” விளையாட்டு மைதானம் அருகே சற்று முன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவானது. குறித்த சம்பவத்தில் காயமடைந்த 34 வயதுடைய பொதுமகன் ஒருவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
மனிதாபிமான நிவாரணப்பொருட்களுடன் இலங்கை வந்தது சுவிஸ் விமானம்!
டித்வா புயல் ஏற்படுத்திய பேரழிவைத் தொடர்ந்து, இலங்கைக்கான அவசர மனிதாபிமான உதவிகளை சுவிற்சர்லாந்து தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அந்நாட்டு விமானம் ஒன்று நிவாரணப் பொருட்களுடன் இன்று (6) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. சுவிஸ் மனிதாபிமான உதவி (Swiss Humanitarian Aid-SHA) வழியாக ஒருங்கிணைக்கப்பட்ட இந்த உதவியின் ஒரு பகுதியாக, இன்று ஏழு நிபுணர்களைக் கொண்ட Swiss Rapid Response Team இலங்கைக்கு வந்துள்ளது. இந்த நிபுணர் குழு, இலங்கையில் உள்ள […]
மீண்டும் உக்ரைன் மீது டிரோன் தாக்குதல்: ரஷ்யா
நேற்று இரவு ரஷ்யா, உக்ரைன் மீது 653 டிரோன்களையும் 51 ஏவுகணைகளையும் ஏவியுள்ளது. அவற்றில் பெரும்பாலானவை சுட்டு வீழ்த்தப்பட்ட போதிலும், இந்தத் தாக்குதல்கள் உக்ரைனின் முக்கியமான உள்கட்டமைப்பைப் பெரிய அளவில் பாதித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்ய ஏவுகணை தாக்குத்தலில் கீவ்வுக்கு வெளியே உள்ள ஃபாஸ்டிவ் (Fastiv) நகரில் ஒரு ரயில் நிலைய மையத்தில் விழுந்து வெடித்ததில் அதன் பிரதான நிலையக் கட்டிடத்தையும், ரயில் பெட்டிகளையும் (rolling stock) சேதப்படுத்தியது. மற்றும் […]
அரசாங்கத்தின் 25,000 கொடுப்பனவு யாருக்கு கிடைக்கும்?
இலங்கையில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் நிவாரணக் கொடுப்பனவு வழங்குவதற்கான வழிகாட்டுதலைத் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் மூலம் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது. அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள இந்தச் சுற்றறிக்கையில், பாதிக்கப்பட்ட வீடுகளின் அனைத்து வகைகளுக்கும் இந்தக் கொடுப்பனவு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில், முற்றிலும் சேதமடைந்த வீடுகள், பகுதியளவில் சேதமடைந்த வீடுகள், கட்டமைப்புச் சேதம் இல்லாவிட்டாலும் சிறு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட […]
அமைச்சர் சுனில் ஹந்துனெத்தியை கைது செய்யுமாறு தேரர் வலியுறுத்து!
அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி அவசரகால சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட வேண்டும் என்று மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கலாநிதி. வலவாஹங்குனவெவே தம்மரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார். விசேட ஊடக சந்திப்பொன்றை இன்று நடத்தியே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார். “மட்டக்களப்புக்கு சென்றிருந்த அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி, மல்வத்து ஓயா நீர் நிலை தொடர்பில் தவறான கருத்தை வெளியிட்டிருந்தார். எனவே, அவரைதான் முதலில் அவசரகால சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும். மல்வத்து ஓயா […]





