Friday , August 29 2025
Home / பார்த்தீபன் (page 54)

பார்த்தீபன்

கொழும்பிலும் வெடித்தது போராட்டம்!

கொழும்பிலும் வெடித்தது போராட்டம்

கொழும்பிலும் வெடித்தது போராட்டம்! சகல அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசு பதில் கூறவேண்டும், பயங்கரவாத தடைச் சட்டம் உட்பட சகல அடக்குமுறை சட்டங்களும் இரத்துச் செய்யப்பட வேண்டும், இராணுத்தினர் வசப்படுத்தியுள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து ஒருவாரகால தொடர் போராட்டம் கொழும்பில் இன்று ஆரம்பமானது. சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாடில் காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் அரசியல் …

Read More »

திருமலையில் டெங்கு நோய் கோரத்தாண்டவம்! 6 வயது சிறுமி மரணம்!! – உயிரிழந்தோர் எண்ணிக்கை 15ஆக உயர்வு

திருமலையில் டெங்கு நோய்

திருமலையில் டெங்கு நோய் கோரத்தாண்டவம்! 6 வயது சிறுமி மரணம்!! – உயிரிழந்தோர் எண்ணிக்கை 15ஆக உயர்வு திருகோணமலையில் டெங்கு நோயால் 6 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லாரியின் தரம் 1 மாணவி அஞ்சனா உதயராஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது. டெங்கு நோய் கோரத்தாண்டவத்தால் திருகோணமலை மாவட்டம் டெங்கு அபாய வலயமாகப் …

Read More »

உள்ளக விசாரணையே அரசின் திட்டம்! – உலக நாடுகளும் பச்சைக்கொடி என்கிறார் மங்கள

உள்ளக விசாரணையே அரசின் திட்டம்

உள்ளக விசாரணையே அரசின் திட்டம்! – உலக நாடுகளும் பச்சைக்கொடி என்கிறார் மங்கள “அனைத்துலக விசாரணைப்பிடிக்குள் இருந்து இலங்கையை மீட்டெடுத்தது சர்வதேசமட்டத்தில் தேசிய அரசு அடைந்த மிகப்பெரிய வெற்றியாகும்” என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். “போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதற்கு அரசமைப்பில் இடமில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார். “உரிய வழியில் உள்ளக விசாரணையை முன்னெடுப்பதற்கு உலக நாடுகள் இலங்கைக்கு ஆதரவை வழங்கியுள்ளன. எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் …

Read More »

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தமிழர் தாயகத்தில் கவனயீர்ப்புப் போராட்டங்கள்!

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தமிழர் தாயகத்தில் கவனயீர்ப்புப் போராட்டங்கள்! சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் நேற்றுக் கவனயீர்ப்புப் போராட்டங்களும் பேரணிகளும் நடைபெற்றன. அதன் இறுதியில் ஐ.நாவுக்கு அனுப்பி வைக்கவென மனுக்களும் கையளிக்கப்பட்டன. வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு இந்தப் போராட்டங்களை ஏற்பாடு செய்திருந்தது. யாழ்ப்பாணம் யாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், இராணுவத்திடம் காணிகைளைப் பறிகொடுத்த மக்கள் …

Read More »

மைத்திரி ஆட்சியிலும் கொடூர சித்திரவதைகள்! – சூக்கா சுட்டிக்காட்டு

மைத்திரி ஆட்சியிலும் கொடூர சித்திரவதைகள் - சூக்கா

மைத்திரி ஆட்சியிலும் கொடூர சித்திரவதைகள்! – சூக்கா சுட்டிக்காட்டு “ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்ற பின்னர் 6 கொடூரமான சித்திரவதைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன என்று பதிவாகியுள்ளது.” – இவ்வாறு சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த நிறுவனத்தின் தலைமைப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- “2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி இலங்கையில் …

Read More »

ஜோசப் படை முகாமில் சித்திரவதைகள்: – ஜகத் ஜயசூரியவை கைதுசெய்யக் கோரிக்கை

ஜோசப் படை முகாமில் சித்திரவதைகள் - ஜகத் ஜயசூரியவை

ஜோசப் படை முகாமில் சித்திரவதைகள்: – ஜகத் ஜயசூரியவை கைதுசெய்யக் கோரிக்கை “வவுனியா ஜோசப் முகாமில் பலர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டமைக்கு தெளிவான – உறுதியான ஆதாரங்கள் போதியளவு உள்ளன. இந்த முகாமின் பொறுப்பாளராகப் பணியாற்றிய இப்போதைய பிரேஸில் தூதுவர் ஜகத் ஜயசூரியவை விசாரணை செய்ய வேண்டும்.” – இவ்வாறு சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் கோரியுள்ளது. இது தொடர்பில் அந்த நிறுவனத்தின் தலைமைப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா வெளியிட்டுள்ள …

Read More »

சர்வதேச நீதிபதிகள் விடயத்தில் விட்டுக்கொடுக்காது கூட்டமைப்பு! – மங்களவின் கருத்துக்கு சுமந்திரன் பதிலடி

சர்வதேச நீதிபதிகள் விடயத்தில் விட்டுக்கொடுக்காது கூட்டமைப்பு

சர்வதேச நீதிபதிகள் விடயத்தில் விட்டுக்கொடுக்காது கூட்டமைப்பு! – மங்களவின் கருத்துக்கு சுமந்திரன் பதிலடி “சர்வதேச நீதிபதிகள் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விட்டுக் கொடுப்புக்குத் தயாரில்லை. சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணைகளைச் செய்வதற்கு அரசமைப்பில் எந்தத் தடையும் இல்லை. அப்படி ஏதாவது தடை இருக்கின்றது என்றால் அந்தத் தடையை நீக்கி விட்டு அதனைச் செயற்படுத்துங்கள்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் …

Read More »

காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடி மருதங்கேணியிலும் கவனயீர்ப்புப் போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டவர்களை

காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடி மருதங்கேணியிலும் கவனயீர்ப்புப் போராட்டம்! காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினது போராட்டம் வடக்கில் ஏற்கனவே 3 மாவட்டங்களில் தொடரும் நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்திலும் மருதங்கேணியில் உறவினர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகம் முன்பாக உள்ள மரம் ஒன்றின் கீழ் நேற்றுப் புதன்கிழமை முதல் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உரிய பதில் வழங்க வேண்டும், அவர்களை மீண்டும் …

Read More »

கடத்தப்பட்ட கப்பலிலுள்ள 8 இலங்கையர்களின் விவரங்கள் வெளியீடு!

கடத்தப்பட்ட கப்பலிலுள்ள 8 இலங்கையர்களின் விவரங்கள்

கடத்தப்பட்ட கப்பலிலுள்ள 8 இலங்கையர்களின் விவரங்கள் வெளியீடு! சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட எண்ணெய்க்கப்பலில் பணிபுரிந்துகொண்டிருந்த 8 இலங்கையர்களின் விவரங்கள் வெளியாகியிருக்கின்றன என்று இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அத்தகவல்களின்படி இந்த 8 இலங்கையர்களின் பதவிகளும் இருப்பிடங்களும் வருமாறு:- 1) கப்பல் கப்டன் நிகலஸ் என்டனி (மட்டக்குளி) 2) பிரதம அதிகாரி ருவன் சம்பத் (மத்துகம) 3) பிரதான பொறியியலாளர் ஜயந்த களுபோவில (ஹொரணை) 4) இரண்டாம் …

Read More »

நல்லிணக்கத்தை ஏற்படுத்த பொறுப்புக்கூறல் அவசியம்! – ஐ.நா. அறிக்கையாளர் ரீட்டா வலியுறுத்து

நல்லிணக்கத்தை ஏற்படுத்த பொறுப்புக்கூறல் அவசியம்

நல்லிணக்கத்தை ஏற்படுத்த பொறுப்புக்கூறல் அவசியம்! – ஐ.நா. அறிக்கையாளர் ரீட்டா வலியுறுத்து “வடக்கிலிருந்து படையினரை அகற்றுதல், காணாமல்போனோர் விவகாரம், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விவகாரங்கள் தொடர்பில் இலங்கை அரசு உடனடியாகக் கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.” – இவ்வாறு சிறுபான்மை இன மக்கள் விவகாரங்கள் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியா தெரிவித்தார். ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 34ஆவது …

Read More »