Friday , August 29 2025
Home / பார்த்தீபன் (page 53)

பார்த்தீபன்

இலங்கை அரசுக்கு கடும் கண்காணிப்பு வேண்டும்! – ஐ.நாவை வலியுறுத்துகின்றார் ஸ் ரீபன் ரப்

இலங்கை அரசுக்கு கடும் கண்காணிப்பு

இலங்கை அரசுக்கு கடும் கண்காணிப்பு வேண்டும்! – ஐ.நாவை வலியுறுத்துகின்றார் ஸ் ரீபன் ரப் “போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் செயன்முறையை செயற்படுத்த இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கப்படும்போது, அதற்கான கால அட்டவணையையும் வலுவான கண்காணிப்பையும் ஐ.நா. உறுதிப்படுத்த வேண்டும்.” – இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் போர்க்குற்றங்கள் தொடர்பான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ஸ் ரீபன் ரப். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- “ஐ.நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கைக்கு …

Read More »

மதவாச்சியில் மரத்துடன் மோதியது வான்! – சம்பவ இடத்திலிலேயே சாரதி பலி

மதவாச்சியில் மரத்துடன் மோதியது வான்

மதவாச்சியில் மரத்துடன் மோதியது வான்! – சம்பவ இடத்திலிலேயே சாரதி பலி மதவாச்சி, பூனாவைப் பகுதியில் இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிலந்துள்ளார். இவ்விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ரம்பாவ பகுதியிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த அரிசி மூடைகளை ஏற்றிய பட்டா ரக வாகனம் இன்று மாலை 4.30 மணியளவில் மதவாச்சி, பூனாவைப் பகுதியில் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் பட்டா …

Read More »

மஹிந்தவுக்கு நடந்ததை நினைவில் வையுங்கள்! – அரசை எச்சரிக்கின்றார் சுமந்திரன்

மஹிந்தவுக்கு

மஹிந்தவுக்கு நடந்ததை நினைவில் வையுங்கள்! – அரசை எச்சரிக்கின்றார் சுமந்திரன் “சர்வதேச சமூகத்துக்கு வாக்குறுதி வழங்கிவிட்டுப் பின்னர் போக்குக் காட்டிய மஹிந்த ராஜபக்ஷவுக்கு நடந்த கதியை இந்த அரசு நினைவில் வைத்திருக்க வேண்டும். இதனை மனதிலிருத்தியாவது சரியாகச் செயற்பட வேண்டும். வெளிநாட்டு நீதிபதிகளைப் போர்க்குற்ற விசாரணையில் ஈடுபடுத்தவேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் …

Read More »

சொன்னதை அரசு செய்யத்தவறின் ஐ.நா வே பொறுப்பேற்க வேண்டும்! – சம்பந்தன் ஆக்ரோஷம்

அரசு

சொன்னதை அரசு செய்யத்தவறின் ஐ.நா வே பொறுப்பேற்க வேண்டும்! – சம்பந்தன் ஆக்ரோஷம் “போர்க்குற்ற விசாரணைக்கான நீதிமன்றப் பொறிமுறை தொடர்பில் இலங்கை அரசு கூறிக் கொண்டிருப்பதைப் பற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. இலங்கை அரசு ஐ.நா. தீர்மானத்தில் சொல்லப்பட்டவற்றை நடைமுறைப்படுத்த ஒத்துழைக்கவில்லையாயின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மையைப் – பெறுபேற்றைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஐ.நா. நடவடிக்கை எடுக்கவேண்டும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் …

Read More »

வாக்குறுதியையடுத்து முடிவுக்கு வந்தது பன்னங்கண்டி மக்களின் போராட்டம்!

பன்னங்கண்டி மக்களின் போராட்டம்

வாக்குறுதியையடுத்து முடிவுக்கு வந்தது பன்னங்கண்டி மக்களின் போராட்டம்! கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி மக்களின் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் நேற்று 15ஆவது நாள் முடிவுக்கு வந்துள்ளது. நேற்றுப் பிற்பகல் பன்னங்கண்டியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்த மக்களை கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், காணி உரிமையாளர்களின் ஒருவரின் மகளான வைத்தியர் மாலதிவரன் மற்றும் காவேரி கலாமன்ற இயக்குநர் அருட்தந்தை கலாநிதி யோசுவா ஆகியோர் சென்று …

Read More »

காத்தான்குடியிலும் டெங்கினால் 9 வயது சிறுமி பரிதாப மரணம்!

காத்தான்குடியிலும் டெங்கினால் 9 வயது சிறுமி பரிதாப மரணம்

காத்தான்குடியிலும் டெங்கினால் 9 வயது சிறுமி பரிதாப மரணம்! மட்டக்களப்பு மாவட்டம், காத்தான்குடியில் டெங்குக் காய்ச்சலினால் சிறுமி ஒருவர் உரிழந்துள்ளார். புதிய காத்தான்குடி நூறானிய்யா மைய்யவாடி வீதியைச் சேர்ந்த ஜி.பாத்திமா ஹதீஜா (வயது – 9) எனும் சிறுமியே நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்துள்ளார். கடந்த திங்கட்கிழமையன்று, குறித்த சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றும் பயனில்லாததால், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிறுமியை சேர்த்துள்ளனர். காத்தான்குடி ஆதார …

Read More »

மஹிந்த, கோட்டாவை உடன் கைதுசெய்! – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வலியுறுத்து

மஹிந்த, கோட்டாவை உடன் கைதுசெய்

மஹிந்த, கோட்டாவை உடன் கைதுசெய்! – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வலியுறுத்து “மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் – கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த காலத்தில்தான் எமது உறவுகள் பலர் காணாமல் ஆக்கப்பட்டனர். இதனை தற்போதைய மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசும் வெளிப்படையாகக் கூறியுள்ளது. எனவே, மஹிந்தவையும், கோட்டாபயவையும் உடன் கைதுசெய்து கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை இந்த அரசு …

Read More »

தொடர்கின்றது கேப்பாப்பிலவு மண்மீட்புப் போர்!

கேப்பாப்பிலவு மண்மீட்புப் போர்

தொடர்கின்றது கேப்பாப்பிலவு மண்மீட்புப் போர்! கேப்பாப்பிலவு மக்கள் முன்னெடுத்துவரும் மண்மீட்பு அறவழிப் போராட்டம் பேரெழுச்சியுடன்  தொடர்கின்றது. “அடிப்படைத் தேவைகளையே போராடித்தான் பெறவேண்டும் என்றால் அபிவித்தி எப்போது?” என்று கேப்பாப்பிலவுப் போராட்டக் களத்தில் வைத்துக் கேள்வி எழுப்பிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்களைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் நேற்று அங்கு கவனவீர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். கேப்பாப்பிலவில் உள்ள தங்கள் பூர்வீக நிலங்கள் 482 ஏக்கர் காணிகளை விடுவிக்கக் கோரிக் கேப்பாப்பிலவு …

Read More »

தாய்மார்களின் கண்ணீருக்குப் பதில் என்ன ?

தாய்மார்களின் கண்ணீருக்குப் பதில்

தாய்மார்களின் கண்ணீருக்குப் பதில் என்ன ? காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீதி வேண்டி வவுனியாவில் முன்னெடுத்துவரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் சளைக்காமல் தொடர்கின்றது. நேற்றுப் பிற்பகல் 2 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வீதியில் இறங்கிக் கவனயீர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். “ஜ.நாவே கால அவகாசம் நீடிப்பு வழங்கி காணாமல் ஆக்கப்பட்டோருக்குத் துரோகம் இழைக்காதே!”, “கடத்தியவர்களைக் காப்பாற்றவா காலநீடிப்பு?”, “தெருவில் இருக்கும் தாய்மார்களின் கண்ணீருக்குப் பதில் என்ன?” போன்ற வாசகங்களைத் தாங்கியவாறு …

Read More »

காணாமல்போன குடும்பஸ்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!

காணாமல்போன குடும்பஸ்தர்

காணாமல்போன குடும்பஸ்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு! காணாமல்போயுள்ளதாகத் தேடப்பட்டு வந்த குடும்பஸ்தர் இன்று காலை கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார் என வவுனியாப் பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா நெடுங்கேணி பழைய மாமடுப் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான ஜெயபாலன் தர்மசீலன் (வயது 34) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை முதல் குறித்த நபரைக் காணவில்லை என்று உறவினர்கள் தெரிவித்தனர். நேற்று வெள்ளிக்கிழமையும் அவர் …

Read More »