வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முடியுமா அல்லது இல்லையா என்பது தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய தனது முடிவை நாளை வியாழக்கிழமை நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கவுள்ளார். இது விடயம் குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறப்பட்டே தீர்மானம் அறிவிக்கப்படும் என்று அவர் நேற்றுத் தெரிவித்தார். நாடாளுமன்றம் நேற்றுப் பிற்பகல் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுத் தாக்கல், வாய்மூல […]
Author: பார்த்தீபன்
ரவி குறித்து ஜனாதிபதியின் முடிவு இரண்டு வாரத்தில் வெளியாகும் என்கிறது சு.க.
“சர்ச்சைக்குரிய பிணைமுறி மோசடி விவகாரம் மற்றும் சொகுசு வீடு தொடர்பில் விசாரணைகளில் சிக்கியுள்ள வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தொடர்பில் இரண்டு வாரங்களில் தனது தீர்மானத்தை ஜனாதிபதி அறிவிப்பார்” என்று விவசாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். அரச விவசாய அபிவிருத்தி அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “பிணைமுறி மோசடி தொடர்பில் […]
பிணைமுறி மோசடிக்கான முழுப்பொறுப்பையும் ரணிலே ஏற்கவேண்டும்! – ஜே.வி.பியின் ரில்வின் சில்வா சுட்டிக்காட்டு
இலங்கை மத்திய வங்கியின் பாரிய பிணைமுறி மோசடியில் சம்பந்தப்பட்டுள்ள ரவி கருணாநாயக்க உடனடியாகப் பதவி விலகுவதுடன் இந்த மோசடிக்கான முழுப்பொறுப்பையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே ஏற்கவேண்டுமென மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பிரதம செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளவை வருமாறு:- “பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் மத்திய வஙகியின் ஆளுநர் பதவியை ரணில் விக்கிரமசிங்க தனது உயிர்த் தோழனான அர்ஜுன் மகேந்திரனுக்கு பெற்றுக்கொடுத்தார். அதன் […]
மாகாண சபைத் தேர்தல் ஒத்திவைப்புக்கு தேர்தல் ஆணையகத் தலைவரும் கடும் ஆட்சேபம்!
மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திவைப்பதற்காக இரண்டு சட்டமூலங்களைத் திருத்துவதற்கு அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தேர்தல் ஆணையகத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறியிருக்கும் மேலதிக கருத்துகள் வருமாறு:- “நாடாளுமன்றம் எடுக்கும் தீர்மானத்துக்குக் கட்டுப்படவேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையகத்துக்கு உள்ளது. எனினும், ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு விரோதமாக தேர்தல்களை ஒத்திவைப்பதற்காக ஓரிரு சட்டமூலங்களைத் திருத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. உரிய காலத்தில் தேர்தல்களை நடத்தி மக்களின் ஆணைக்கு […]
யாழ்.குடாநாட்டில் தொடரும் கைதுவேட்டையை உடன் நிறுத்துங்கள்! – ஜனாதிபதி, பிரதமரிடம் கூட்டமைப்பு வலியுறுத்து
“யாழ்.குடாநாட்டில் இளைஞர்களைக் குறிவைத்து பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் கைதுவேட்டை சில தினங்களாகத் தொடர்கின்றது. இதனை உடன் நிறுத்துவதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – இவ்வாறு வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன். “யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலைவரங்கள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் இவ்வாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்தும். அதன்போதும் இந்தக் கோரிக்கையை நாம் நேரில் விடுக்கவுள்ளோம்” எனவும் […]
பரபரப்பான சுழ்நிலையில் இன்று கூடுகின்றது நாடாளுமன்றம்! – நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து ஆளும், எதிர்க்கட்சிகள் ஆலோசனை
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையால் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறும் நாடாளுமன்ற அமர்விலும் அது குறித்து சூடான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாடாளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது. அதற்கு முன்னர் சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டமும் இடம்பெறவுள்ளது. இது முக்கியத்துவமிக்க சந்திப்பாகக் கருதப்படுகின்றது. வழமையாக நாடாளுமன்றம் ஆரம்பமாவதற்கு […]
வடக்கு அமைச்சர் நியமனத்தில் புவிசார் அரசியல் தலையீடு!
வடக்கு மாகாண அமைச்சரவை விடயத்தில் அயல்நாட்டுத் தூதரகம் ஒன்று மூக்கை நுழைத்துள்ளது என அறியமுடிகின்றது. கட்சி ஒன்றினால் மாகாண அமைச்சர் பதவிக்குப் பெயரிடப்பட்ட ஒருவருக்கு அந்தப் பதவியைக் கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தைக் கையாளும் தலைவரின் தனிப்பட்ட செயலாளரிடமே ஒரு ஆலோசனைப் பாணியில் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது என்று தெரிகின்றது. தமது எதிரி நாடு ஒன்றின் உளவாளியாக குறித்த உறுப்பினர் இருக்கின்றார் எனச் சந்தேகிப்பதன் காரணத்தாலேயே […]
வடக்கு அமைச்சரவை மாற்றத்தின்போது புளொட்டுக்குரிய பதவி யாருக்கு?
மாற்றியமைக்கப்படும் வடக்கு மாகாண அமைச்சரவையில் புளொட் அமைப்புக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டால், அந்தக் கட்சி சார்பில் யாருக்கு அதனை வழங்குவது என்பதில் குழப்பம் தோன்றியுள்ளது. வடக்கு மாகாண சபையின் அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்படும் என்றும், இதன்போது, புளொட்டுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படும் என்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார். புளொட் அமைப்புக்கு அமைச்சுப் பதவி கிடைக்கப் பெற்றால் அந்தக் கட்சி சார்பில் யாரை நியமிப்பது என்பதில் குழப்பம் தோன்றியுள்ளது […]
வடக்கு அமைச்சரவையில் அனந்தி, சர்வேஸ்வரனின் பதவிகள் நிரந்தரமாகும்!
வடக்கு மாகாண புனர்வாழ்வு, மகளிர் விவகாரம், கூட்டுறவு அமைச்சராக நியமிக்கப்பட்ட திருமதி அனந்தி சசிதரன் மற்றும் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்ட க.சர்வேஸ்வரன் இருவருக்கும் பதவிகள் நிரந்தரமாக்கப்படும் என்று தெரிகின்றது. மூன்று மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாகவே அவர்களுக்குப் பதவி வழங்கப்படுவதாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்திருந்தார். எனினும், மாகாண சபையின் எஞ்சிய காலப் பகுதிக்கும் அவர்கள் அமைச்சர்களாகத் தொடர்வார்கள் என்று கூறப்படுகின்றது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் […]
விக்கிக்குக் கீழ் அமைச்சராக இருப்பதற்கு விரும்பவில்லை! – பதவி விலகிய சத்தியலிங்கம் தெரிவிப்பு
வடக்கு மாகாண சுகாதா அமைச்சர் ப.சத்தியலிங்கம் பதவி விலகியுள்ளார். அரசியல் உள்நோக்கத்துடனேயே அமைச்சரவையிலிருந்து தன்னை வெளியேற்ற வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துள்ளார் என்பதைத் தன்னால் புரிந்துகொள்ள முடிவதால் அவருக்குக் கீழ் ஓர் அமைச்சராக இருக்க விரும்பவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். “கட்சியின் தீர்மானத்துக்கு கட்டுப்பட்டு நான் எனது பதவியிலிருந்து விலகுகின்றேன்” என்று தெரிவித்து வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு தனது பதவி விலகல் கடிதத்தை அவர் […]





