இலங்கையில் கடந்த ஞாயிற்றுகிழமை அன்று தீவிரவாதிகளின் சதிவேலையால் குண்டு வெடித்த சம்பவத்தில் 310 பேர்பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெடிகுண்டு பொருத்தப்பட்ட லொறி மற்றும் சிறிய ரக வேன் ஒன்று கொழும்பு நகரிற்குள் பிரவேசித்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
Author: அருள்
கண்ணீருக்கு மத்தியில் இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் இறுதி சடங்குகள்
இலங்கையில் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்குகள் உறவினர்களின் கண்ணீருக்கு மத்தியில் துவங்கியுள்ளன. ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட இருந்தோரும் இலங்கைக்கு சுற்றுலா வந்தோரும் என சுமார் 321 பேர் வரை ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இறந்தவர்களை அடக்கம் செய்யும் பணிகள் துவங்கியுள்ளன. இன்று தேசிய அளவில் துக்கம் அனுஷ்டிக்கப்படும் நிலையில், கொழும்பில் கட்டிடங்களில் வெள்ளைக்கொடிகள் பறக்க விடப்பட்டதோடு, காலை 8.30 முதல் […]
பல கோணங்களில் விசாரணைகள்!! இதுவரை 40 பேர் கைது
கடந்த ஞாயிற்றுக்கிழமை 8 இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரான காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார். இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்களுள் 26 பேர் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன், 3 சந்தேகத்துக்குரியவர்கள் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரின் பொறுப்பில் […]
இன்றைய ராசிபலன் 23.04.2019
மேஷம்: இன்று மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறவும், மேல்படிப்பு படிக்கவும் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சொத்து பிரச்சனை தீரும். குடும்ப குழப்பம் தீரும். சரி என்று நினைப்பதை தைரியமாக உறுதியுடன் செயல்படுத்துவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5 ரிஷபம்: இன்று வாழ்க்கைக்கு தேவையான புதிய வசதிகள் கிடைக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். புதிய ஆடை அணிகலன் வாங்குவீர்கள். ஆடம்பரமாக செலவு […]
இன்றைய ராசிபலன் 22.04.2019
மேஷம்: இன்று கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் காணப்படும். பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது கருத்து வேற்றுமை வராமல் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 4, 5 ரிஷபம்: இன்று சாமர்த்தியமாக செயல்பட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து புகழ் பெறுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், […]
யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் வெடிப்பு சம்பவம்!
யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் மற்றுமொரு குண்டுவெடிப்புச் சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள தேவாலயமொன்றின் உள்ளே பொதுமக்கள் வழிபாடுகளில் ஈடுபட்டுகொண்டிருந்த வேளையில் குண்டுவெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. எனினும் டைனமைட் என்ற வெடிபொருள்களாக இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. எனினும் உறுதியான தகவல் வெளியாக வில்லை. சம்பவ இடத்தில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் பல பகுதிகளில் அடுத்து அடுத்து இடம்பெற்றுள்ள குண்டு வெடிப்பு சம்பவத்தால் மக்கள் […]
நாளை மறுதினம் நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு தீர்மானம்
தற்போதைய அவசர நிலையை கருத்திற் கொண்டு நாடாளுமன்றத்தை நாளை மறுதினம் கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. சபாநாயகர் ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து
பொலிஸ் அதிகாரிகளுக்கான விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து பொலிஸ் மா அதிபரினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தெஹிவளையில் குண்டு வெடிப்பு! இருவர் பலி
தெஹிவளை மிருகக்காட்சிக்கு அருகில் அருகிலுள்ள ஒரு உணவகத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சற்று முன்னர் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இருவர் பலியாகியுள்ளனர். இதனால், தெஹிவளை மிருகக்காட்சிசாலையை தற்காலிகமாக மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜுலோகிக்கல் கார்டனை பாதுகாப்பாக பார்வையிடும் பார்வையாளர்களை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்
சிறிலங்கா முழுவதும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வரை ஊரடங்குச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. சிறிலங்காவில் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் குண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்தே நாடு முழுவதும் ஊடரங்குச் சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சற்று முன்னதாக கொழும்பு தெமட்டகொட பகுதியிலும் மற்றொரு குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. அடுத்தடுத்து குண்டுகள் வெடித்து வரும் நிலையிலேயே அவசரமான ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, சிறிலங்காவின் அனைத்து உள்நாட்டு விமான சேவைகளும் […]





