Author: அருள்

சஹ்ரானின் நெருங்கிய சகா வாழைச்சேனையில் சிக்கினார்

டெட்டனேற்றர் வெடிபொருட்களுடன் ஒருவரை குற்றத்தடுப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். மட்டக்களப்பு ரிதிதென்ன ஓமடியாமடு பிரதேசத்தில் வைத்தே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடமிருந்து 138 டெட்டனேற்றர் குச்சிகளை குற்றத்தடுப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளதுடன் கைதுசெய்யப்பட்டவரிடம் குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கைதுசெய்ப்பட்ட நபர் 48 வயதுடைய ஆதம் லெப்பை காதர் என அடையாளம் காணப்பட்டதுடன் சஹ்ரானின் வாகன சாரதியான அண்மையில் கைதுசெய்யப்பட்ட கபூரின் நெருங்கிய சகாவென விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

கிளிநொச்சியில் மோப்ப நாயுடன் பாடசாலைகளில் சோதனை!!

கிளிநொச்சி மாவட்டத்தில் ஆரம்பப் பிரிவு பாடசாலைகளை தவிர ஏனைய பாடசாலைகள் இரண்டாம் தவணைக் கல்விச் செயற்பாடுகளுக்காக இன்று ஆரம்பிக்கப்பட்டன. மாணவர்கள் பாடசாலைகளின் நுழைவாயிலில் வைத்து கடும் சோதனைகளுக்கு பின்னர் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். மாணவர்களின் புத்தக பைகள் சோதனையிடப்பட்டன. சோதனைக்கு மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டன. இலக்கத் தகடற்ற மோட்டார் சைக்கிளால் பரபரப்பு!! கிளிநொச்சி முறிகண்டி பிள்ளையார் ஆலயத்துக்கு அருகில் இலக்கத்தகடற்ற மோட்டார் சைக்கிள் நீண்ட நேரம் தரித்து விடப்பட்டிருந்ததால், குழப்பமடைந்த […]

இலங்கை தொடர் குண்டு தாக்குதல்களின் தீவிரவாதி சஹரான் தப்பிவிட்டார்?

சஹரான் ஹாசிம் இந்தியாவுக்கு விமானம் ஊடாக பயணம் மேற்கொண்டமைக்கான எந்த குடிவரவு, குடியகல்வு பதிவுகளும் இல்லையென அதிகாரிகள் குறிப்பிட்ட இராணுவ தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இலங்கை தொடர் குண்டு தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹரான் ஹாசிம் மன்னார் ஊடாகவே தமிழ்நாட்டுக்கு கடல் வழியாக பயணம் மேற்கொண்டிருக்க வாய்ப்புக்கள் உள்ளதாக சந்தேகம் வெளியிட்டுள்ளார். ‘த ஹிந்து’ நாளிதழுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே மகேஸ் சேனநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, […]

பயங்கரவாதிகளின் 40 ஏக்கரிற்கும் அதிகமான கோட்டை படையினர் வசம்

ரிதிதென்னவில் பயங்கரவாதிகளின் பயிற்சி முகாமொன்றை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர். ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பயிற்சி முகாமொன்று நேற்று காத்தான்குடியில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இன்று ரிதிதென்ன பகுதியில் இன்னொரு பயிற்சி முகாம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஓட்டமாவடி பிரதேசசபைக்குட்பட்ட இந்த பயிற்சி முகாம் 40 ஏக்கரிற்கும் அதிக விஸ்தீரணமுடையது. இந்த காணி உரிமையாளர், ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்தே, இன்று அங்கு தேடுதல் நடத்தப்பட்டது. தேடுதலின்போது […]

சஹரானுடன்

சஹரான் மனைவியிடம் தினந்தோறும் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள்!!

சஹரான் ஹாஷிம் என்ற பயங்கரவாதியின் கீழ் செயற்பட்ட குழுவின் ஆயுதப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்தவராக கருதப்படும் மில்ஹான் என்ற சந்தேக நபரை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றுகூடி வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது தற்கொலை குண்டுதாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 250 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர். இந்த தாக்குதல்கள் கிறிஸ்தவ தேவாலயங்களில் மட்டுமல்லாது நட்சத்திர விடுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 06.05.2019

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். தோற்றப் பொலிவுக் கூடும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மனநிறைவு கிட்டும் நாள். ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் […]

பயங்கரவாதிகளின் தோற்றத்திற்கு பசில் ராஜபக்ஷவே முக்கிய காரணம்

அடிப்படைவாத அமைப்புக்களுக்கு ஆதரவாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோர் செயற்படுவதற்கான அதிகாரத்தை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவே வழங்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில் இருக்கும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பார்வையிட்டதைத் தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பயங்கரவாதத்தை அரசியல் […]

தாக்குதல் இடம் பெற்ற ஆலயத்தில் வட மாகாண ஆளுநர்

நீர்கொழும்பு, கட்டுவபிட்டிய புனித செபஸ்டியான் ஆலயத்திற்கு வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இன்று முற்பகல் விஜயம் மேற்கொண்டார். ஆலயத்திற்கு விஜயம் செய்த ஆளுநர் ஆலயத்தின் பங்குத்தந்தை வணக்கத்துக்குரிய ஸ்ரீலால் பொன்சேகாவை சந்தித்து அண்மையில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் மரணித்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது சார்பிலும் வடமாகாண மக்கள் சார்பிலும் அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டார். இதன்போது பயங்கரவாத தாக்குதலினால் சேதமடைந்து மீள் சீரமைக்கப்படுவரும் ஆலயத்தையும் […]

IS தீவிரவாதிகளின் முகாம்!! விசேடஅதிரடிப்படையினர் முற்றுகை

மட்டக்களப்பு தாழங்குடா ஒல்லிக்குளம் முஸ்லீம் கிராமத்தில் அமைந்திருந்த இஸ்லாமிய தீவிரவாதிகளின் பயிற்சி முகாம் ஒன்று இன்று கைப்பற்றப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தாழங்குடா ஒல்லிக்குளம் முஸ்லீம் பிரதேசத்தில் இன்று காலை விசேடஅதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலில் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பினரின் பயிற்சி முகாம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. ஐ. எஸ் அமைப்பின் தற்கொலைதாரியான ரில்வானின் தலைமையில் இயங்கியதாக கூறப்படும் குறித்த பயிற்சி முகாமில் வைத்தே தீவிரவாதிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறித்த பயிற்சி முகாமில் […]

ஜனாதிபதி

ஐ.எஸ். பயங்கரவாதம் ஒழித்துக்கட்டப்படும் ஜனாதிபதி அதிரடி!

இந்த வருட இறுதிக்குள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு ஜனாதிபதி தேர்தல் சிறப்பாக நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 42 வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 250 ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னணியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் உள்ளதை தாங்கள் நம்புவதாகவும் ஜனாதிபதி சர்வதேச ஊடகமான ரோய்ட்டர்ஸ் செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “தீவிரவாதிகளின் இந்த செயற்பாடுகளினால் தேர்தலை தள்ளிவைக்க முடியாது, எனவே தேர்தலுக்கு […]