Author: அருள்

மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறிது நேரம் காலிமுகத்திடல் மைதானத்தில் மரம் ஒன்றில் ஓய்வாக அமர்ந்து மக்களுடன் கலந்துரையாடியுள்ளார். இதன்காரணமாக மக்கள் மத்தியில் ஜனாதிபதி பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன், மக்களின் பாராட்டினையும் பெற்றுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த எளிமை போக்கு மக்களை வெகுவாக கவர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனிடையே கொழும்பு காலி முகத்திடலில் இன்றைய தினம் தேசிய நீரிழிவு தின நடைப் பயணம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன […]

மகிந்த

மகிந்தவை வியக்க வைத்த யாழ் இளைஞன்!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரின் செயற்பாடு கண்டு, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வியந்து போனதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. டீ.ஏ.ராஜபக்சவின் நினைவு தினம் கடந்த வாரம் தங்காலையில் இடம்பெற்றது. இதில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டனர். குறித்த நினைவு தின நிகழ்வில் மகிந்தவின் அரசியல் வேலைகளை முன்னெடுக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அந்த இளைஞன் […]

இன்றைய ராசிபலன் I 13.11.17

மேஷம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப் பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதுமை படைக்கும் நாள். Loading… ரிஷபம்: பிரியமானவர்களின் சந்திப்பு   நிகழும். தாய்வழி  உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். […]

கடவுச்சீட்டு, ஆள் அடையாள அட்டை பெறுவோருக்கு விசேட அறிவித்தல்!

2018ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட யோசனைக்கு அமைய அரசாங்க சேவைகளுக்காக அறிவிடப்படும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அரச சேவைக்கான கட்டணமாக நூற்றுக்கு 15 வீதம் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த கட்டணம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய கடவுச்சீட்டு, அடையாள அட்டை, தபால் கட்டணம், மிருகக்காட்சி சாலை கட்டணம், நீதிமன்ற சேவை கட்டணம் மற்றும் ஏனைய அனைத்து அரசாங்க சேவைகளின் கட்டணங்களும் நூற்றுக்கு 15 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. […]

மைத்திரி, மஹிந்த நேரடிப் பேச்சு! கொழும்பு அரசியலில் பரபரப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் அவசர சந்திப்பொன்று நடைபெற ஏற்பாடாகியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. முக்கியமான அரசியல் விடயங்கள் குறித்து மஹிந்தவும்,மைத்திரியும் நேரடியாகச் சந்தித்து பேசுவது நல்லது என்று பொது எதிரணியின் முக்கிய உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் பரஸ்பரம் தீர்மானம் ஒன்றை எடுத்ததை அடுத்தே இருவரும் நேரில் சந்தித்துப் பேசுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த விடயம் கொழும்பு […]

இலங்கையில் அதிரடி சுற்றிவளைப்பு! 4 மணிநேர நேரத்தில் 758 பேர் கைது

பொலிஸார் இணைந்து மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் 758 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் விசேட அறிக்கை ஒன்றின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 11 மணியில் இருந்து இன்று அதிகாலை 3 மணி வரை இந்த விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 758 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டின் சகல பொலிஸ் பிரிவுகளையும் இணைக்கும் வகையில் 16362 பொலிஸாரின் பங்களிப்புடன் இந்த விசேட சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது சந்தேகத்தின் […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் I 12.11.17

மேஷம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படு வார்கள். புண்ணிய ஸ்தலங் கள் சென்று வருவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். கனவு நனவாகும் நாள். Loading… ரிஷபம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். புது வேலை கிடைக்கும். தாயாருடன் வீண் விவாதம் வரக்கூடும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். நன்மை கிட்டும் […]

தினகரனின் பண்ணை வீட்டில் ரகசிய அறைகள்: தம்பி வீட்டிலிருந்து 7 கிலோ தங்கம்

சசிகலாவின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று புதுவையில் டிடிவி தினகரனுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் சோதனை மேற்கொண்ட போது அங்கு ரகசிய அறைகள் இருந்ததாம். அந்த அறைகளுக்கு மின்சாதன பூட்டு போடப்பட்டிருந்ததால், சிறிது நேர போராட்டத்திற்கு பிறகே அதிகாரிகள் அந்த அறைகளை திறந்ததாகவும், ஆவணங்கள் மற்றும் பொருட்களை கைப்பற்றிய பின்னர் […]

மகிழ்ச்சியில் சம்பந்தன், சுமந்திரன்…..!

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளிட்ட தமிழ் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் வரவு செலவுத்திட்டம் முன்மொழியப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இந்த வரவு செலவுத்திட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் அடங்கலாக சகலருக்கும் நன்மை தரும் யோசனைகள் அடங்கியுள்ளதாக இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். வரவு செலவுத்திட்ட முன்மொழிவில் சில முன்னேற்றகரமான செயற்பாடுகள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக போராளிகளுக்கு சில உதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும், பெண்களுக்கு சில […]

Maithripala Sirisena

விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் குறித்து மைத்திரி வெளியிட்ட தகவல்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் உலகம் முழுவதும் நிதி சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அத்துடன், சர்வதேச ரீதியில் ஒன்றிணைந்துள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் தனி தமிழீழம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கொழும்பு – நாராஹேனபிட்ட இராணுவ வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, “சமகாள அரசாங்கம் இராணுவத்தை […]