Author: அருள்

இன்றைய ராசிபலன் 05.02.2018

மேஷம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொட்டது துலங்கும் நாள். ரிஷபம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். புதுத்தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் […]

கச்சத்தீவை - சுப்பிரமணியன் சுவாமி

பணம் வாங்காமல் தேர்தல் நடத்தினால் தமிழ்நாட்டில் பாஜக ஜெயிக்கும்

கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் கண்டிப்பாக கிடைக்காது என பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்ய மாற்று வழிகள் இருப்பதாகக் கூறினார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணைமுதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வமும் கேட்டுக்கொண்டால் மாற்று வழி குறித்து தான் தெரிவிப்பேன் என்றும் சுப்ரமணியன் சுவாமி குறிப்பிட்டார். 2ஜி வழக்கில் […]

அதிமுகவிலிருந்து 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நீக்கம்!

கட்சியின் கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாக கூறி, முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் குறிக்கோள் மற்றும் கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதால், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ், அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மதுரை மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் வினோத் குமார், மாவட்ட […]

ரஜினி, கமலை அடுத்து விஜய்யின் அதிகாரபூர்வ அறிவிப்பு

கடந்த டிசம்பர் 31ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்துவிட்டு பின்னர் ரஜினி மக்கள் மன்றம் என்ற செயலியையும் தொடங்கி விறுவிறுப்பான ஆரம்பகட்ட அரசியல் பணியை செய்து வருகிறார் அதேபோல் உலகநாயகன் கமல்ஹாசனும் வரும் 21ஆம் தேதி ‘நாளை நமதே’ என்ற கோஷத்துடன் புதிய கட்சியை ராமநாதபுரத்தில் அறிவிக்கவுள்ளார் இந்த நிலையில் இளையதளபதி விஜய்யும் தனது ரசிகர்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சியாக புதிய அதிகாரபூர்வ […]

ஓவியா இப்படி ஒரு ட்வீட் செய்திருக்கிறாரா? என்ன காரணமாக இருக்கும்?

தனியார் தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ் என்ற பிரபல நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் மிகுந்த இடத்தை பிடித்தவர் நடிகை ஓவியா. இவருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இவர் என்ன செய்தாலும் இவரை புகழ்ந்து பேச பல பேர் இருக்கிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் நிறைய விளம்பரங்கள், படங்கள் என கமிட்டானார். சமீபத்தில் கூட காஞ்சனா 3 படத்தில் ஓவியா நாயகியாக நடிக்க […]

இன்றைய ராசிபலன் 04.02.2018

மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். வெளிவட்டா ரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள். ரிஷபம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்து வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத் தில் […]

இன்றைய ராசிபலன் 03.02.2018

மேஷம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளை கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். நினைத்தது நிறைவேறும் நாள். ரிஷபம்: திட்டமிட்ட வேலை கள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலை அமையும். வெளி வட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப் பார்கள். […]

​பெற்ற தாயை துடிதுடிக்க அடித்துக் கொலை செய்த மகன்!

ராஜஸ்தான் மாநிலம் ஷாஜஹான்புர் காவல் நிலையத்துக்குட்பட்ட கிராமத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் கடந்த ஜனவரி 18ம் தேதி உயிரிழந்தார். இவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர் ஆவார். அப்போது அவரது மகன் அடித்து துன்புறுத்தியதால் மூதாட்டி இறந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், மூதாட்டியை அவரது மகன் அடித்து துன்புறுத்தும் காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இது தொடர்பாக ஜோகேந்திரா சவுத்ரி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். […]

எரிச்சலூட்டும் நபர் ஜூலி தான், விமல் பேட்டி; தரக்குறைவாக பேசிய ஜூலி

தனியார் தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களின் கடும் கோபத்திற்கு ஆளானவர் ஜூலி. இவர் இந்த நிகழ்ச்சி மூலம் மிகவும் துன்பத்திற்கு ஆளானார். ஆனால் இவர் அதை சிறிதும் பொருள்படுத்தாமல் இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி பல படங்களில் நடித்து வருகிறார். ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கொண்டும் இருக்கிறார். மேலும், சில படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது ஒரு படத்தில் […]

லிபியாவில் படகு கவிழ்ந்து 90 பேர் உயிரிழப்பு!!

லிபியா கடற்பகுதியில் இன்று காலை படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 90 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை லிபியா கடற்பகுதியில் 10 பேரின் உடல் கரை ஒதுங்கியுள்ளது. அதில் 8 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்றும், 2 பேர் லிபியாவைச் சேர்ந்தவர்கள் என என்றும் இடம்பெயர்வுக்கான பன்னாட்டு அமைப்பு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளனர். அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் கூறப்படுகிறது.