Author: அருள்

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 14.05.2018

மேஷம்: இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சிறிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த பணியை முதலில் முடிப்பது போன்ற குழப்பத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9 ரிஷபம்: இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பிரச்சனை குழப்பம் போன்றவை ஏற்பட்டு பின்னர் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை […]

குழந்தை கடத்தல் கொலைக்கு போலீஸ் தான் காரணம் – தமிழிசை

வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் பரவும் செய்திகளை நம்பி, அச்சத்துடன் இருக்கும் பொதுமக்கள், அப்பாவிகளை குழந்தை கடத்தல் கும்பல் எனக்கருதி பலரை அடித்துக்கொலை செய்யும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருவண்ணாமலையில் சாமி கும்பிட வந்த 5 முதியவர்களை பொதுமக்கள் கடுமையாக தாக்கியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். அதேபோல் திருவள்ளூரில் குழந்தை கடத்த வந்தவர் என கருதி மனநோயாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 13.05.2018

மேஷம்: இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களுடன் அனுசரித்து செல்வார்கள். விசேஷ நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள நேரிடும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளின் உடல்நிலையில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 ரிஷபம்: இன்று பெண்கள் திறமையாக செயல்பட்டு காரிய வெற்றிகாண்பீர்கள். மதிப்பும், மரியாதையும் கூடும். மாணவர்கள் கல்வியில் சிரமபட்டு முன்னேற்றம் காண வேண்டி இருக்கும். மனோதைரியம் கூடும். எதிர்ப்புகள் […]

இராணுவத்தை சி.வி.விக்னேஸ்வரன்

நினைவேந்தலின் போது முதன்மைச் சுடரை நான் ஏற்றவேமாட்டேன்!

வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் மே 18ஆம் திகதி நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் முதன்மை ஈகைச் சுடரை பாதிக்கப்பட்ட மக்களில் இருந்து யாராவது ஒருவர் ஏற்றட்டும். நான் ஏற்றவே மாட்டேன் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், “வடக்கு மாகாண சபை ஒருங்கிணைக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் முதன்மை ஈகைச் சுடரை போரால் பாதிக்கப்பட்ட அல்லது உறவுகளைப் பறிகொடுத்த தரப்புக்களில் […]

இன்டர்போல் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகளின் பெயர்கள் நீக்கம்

யாருடைய தேவைக்கு அமைய தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயர்கள் இன்டர்போல் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது என சிங்களப் பத்திரிகையொன்று கேள்வி எழுப்பியுள்ளது. கடுமையான குற்றச் செயல்களில் ஈடுபட்ட விடுதலைப் புலிகள் 154 பேரின் பெயர்கள் இவ்வாறு இன்டர்போல் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தாக சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், இந்தப் பெயர்கள் பின்னர் நீக்கப்பட்டுள்ளதாகவும் யாருடைய தேவைக்காக இந்தப் பெயர்கள் நீக்கப்பட்டது என குறித்த கேள்வி எழுப்பியுள்ளது. எமில்காந்தன் மற்றும் இன்னுமொரு புலி உறுப்பினரின் பெயர் மட்டுமே […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 12.05.2018

மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.   மேலும் ராசிபலனை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

வடக்கு மாணவர்களுக்கு யாழ் இராணுவ அதிகாரி விடுத்துள்ள கோரிக்கை

வடக்கு இளைஞர்களை இராணுவத்தில் இணைய முன்வருமாரு யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைதளபதி மேஜர் ஜெனரல் தர்சன கெட்டியாராட்சி அழைப்பு விடுத்தார். சிங்கள டிப்ளோமா கற்கைநெறியைப் பூர்த்தி செய்த 600 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில் இன்று நடைபெற்றது. அதில் அவர் மேலும் தெரிவித்ததாவது, வடக்கு மக்கள் மிகவும் புத்திசாலிகள் நல்லவர்கள் எனினும் கடந்த 30 வருடப் போர் வடக்கு மக்களையும் தெற்கு மக்களையும் சற்று […]

யாழில் இருந்து விடை பெறும் நீதிபதி இளஞ்செழியன்

யாழ். மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனிற்கு நீதிச்சேவைகள் ஆணைக்குழுவால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அவருடன் இணைந்து, மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன், அன்னலிங்கம் பிரேமசங்கமர் ஆகியோருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வருடாந்த இடமாற்றத்தின் கீழ் மூன்று ஆண்டுகள் ஒரே மாகாணத்தில் மேல் நீதிமன்ற அமர்வில் கடமையாற்றியதன் அடிப்படையில் நாடு முழுவதும் மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், […]

வடக்கு முதலமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்தும் யாழ் பல்கலைக்கழ மாணவர்கள் அதிரடி முடிவு

வடக்கு முதலமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு நாளை தனித்து அனுஸ்டிக்க முடிவு செய்துள்ளனர். யாழ். பல்கலைக்கழ மாணவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்துவது என்று நாம் திட்டமிட்டதன் பிரகாரம் மக்கள் கனவை நிறைவேற்றியே தீருவோம். இதற்கான கலந்துரையாடல் நாளை காலை 10.30 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெறும். இதில் யாழ்.பல்கலைக்கழக அனைத்துப்பீடங்களின் மாணவர் பிரதிநிதிகள், சிவில் சமூக […]

மே 18ஆம் திகதி தமிழின அழிப்பு தினமாக பிரகடனம்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நாளான மே 18ஆம் திகதி தமிழ் இன அழிப்பு தினமாக பிரகடனம் செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் 122ஆவது அமர்வு இன்று கைதடியில் உள்ள பேரவைச் செயலகத்தில் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமானது. இதன்போது, சிறுவர் மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் மே 18 ஆம் திகதியை இனஅழிப்பு நாளாக பிரகடனம் செய்யும்படி சபையில் முன்மொழிந்தார்.