நாடாளுமன்றம் நவம்பர் 7ம்திகதி மீண்டும் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாரர்ளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சபாநாயகர் கரு ஜயசூரிய சற்றுமுன்னர் தெரிவித்துள்ளதாக ஐதேக எம்.பி ஹர்ஸ டி சில்வா தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். நவம்பர் 7ம்திகதி நாடாளுமன்றம் கூடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிடம் கூறியதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்த கூற்றையே இவ்வாறு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்றோ நாளையோ […]
Author: அருள்
மஹிந்தவின் பதவியை பறிக்க சதித்திட்டம் தீட்டும் அமெரிக்கா!
இலங்கையின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவை அப்பதவியிலிருந்து அகற்றவதற்கு அமெரிக்க பல சதித்திட்டங்களை மேற்கொண்டு வருவதாக இலங்கையின் ரஷ்யாவிற்கான தூதுவர் தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. ரஷ்யா- மொஸ்கோவில் இருந்து மின்னஞ்சல் ஊடாக அவர் இதனை தெரிவித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார ஊடாக மஹிந்தவிடம் குறித்த மின்னஞ்சலை ஒப்படைக்கும் விதமாக அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மஹிந்தவை பதவியிலிருந்து அகற்றுவதற்கான சதித்திட்டத்தை அமெரிக்கா, கொழும்பிலுள்ள தனது தூதுவரத்தின் […]
ரணில் பிரபாகரனுக்கு சமன்: இப்படிக் கூறுகின்றது பொதுபலசேனா!
ரணில் விக்கிரமசிங்க விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைப் போன்றவர். அவர் பிரபாகரனுக்குச் சமமானவர். உள்நாட்டு தரப்புக்கள் மற்றும் ஊடகங்களை விடவும் பிரபாகர னுக்கு ஆதரவளித்தது போல் பன்னாட்டு சமூகம், பன்னாட்டு ஊடகங்கள் அவருக்கு ஆதரவு வெளியிடுகின்றன. இவ்வாறு கூறியுள்ளது பொதுபலசேனா அமைப்பு. கொழும்பில் பொதுபலசேனா நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலர் மாகல்கந்தே சுதந்த தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, […]
தமிழர்களை சிதறடிக்கவே ஒன்று சேர்ந்த இரு மாபெரும் தலைவர்கள்
வடக்கு – கிழக்கை இணைத்து, நாட்டை அரசமைப்பு ஊடாகப் பிளவு படுத்த எண்ணிய புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் நோக்கங்களை முறியடிக்கவே இரு அரசியல் தலைவர்களும் ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார் மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய. அவரது பணியகத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டு மக்களின் நெடுநாள் அரசியல் கனவை மைத்திரி நிறைவேற்றி வைத்துள்ளமையானது வரவேற்கத்தக்கது. கூட்டு அரசு […]
இலங்கை ரூபாவின் பெறுமதியில் என்றும் இல்லாத அளவில் கடும் வீழ்ச்சி
இலங்கை ரூபாயின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வௌியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்திற்கமைய, இலங்கை ரூபாயின் விற்பனை விலை 177.32 சதமாக இன்று பதிவாகியுள்ளது.
இன்றைய ராசிபலன் 02.11.2018
மேஷம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள். ரிஷபம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர் கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப்போகும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப் பால் உயரும் நாள். மிதுனம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் […]
மீண்டும் சர்ச்சை! விஜய்க்கு எதிராக கிளம்பிய பிரபல கட்சியின் கும்பல்
விஜய் படங்களுக்கு சர்ச்சைகள் வருவது சகஜம் தான் என்றாகிவிட்டது. பல படங்கள் என்னென்ன பிரச்சனைகளை சந்தித்தது என நாம் முன்பே லிஸ்ட் கொடுத்து ஒரு தனி பதிவே போட்டுவிட்டோம். கடந்த வருடம் மெர்சல் படத்தை வைத்து மத்தியில் ஆள்பவர்கள் முதல் மாநிலத்தில் இருப்பவர்கள் வரை எப்படி விமர்சித்தார்கள் என்பது உங்களுக்கு தெரியும். இனி வரும் சர்கார் படமும் சர்ச்சையாகி பின் சுமூக தீர்வானது. இந்நிலையில் மீண்டும் பா.ஜ.க வை சேர்ந்தவர்கள் […]
கிழிச்சது பொதுமக்கள்தான்: சீரிய தங்க தமிழ்செல்வன்!
தற்போது செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்செல்வன், எங்கலது அறைகளுக்கு சீல வைத்தது, காலி செய்ய சொலவது எல்லாம் பெரிய விஷயம் அல்ல. அதேபோல் ரூ.80,000 கட்ட வேண்டும் என்கிறார்கள் அதையும் கட்டி விடுகிறோம் என்னும் பிரச்சனை இல்லை. 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தால் அதன் விசாரணை எப்படி இருக்கும் என தெரியவில்லை. மேல்முறையீடு காலம் தாழ்த்தப்பட்டால் என்ன செய்வது அதனால்தான் இடைத்தேர்தலை சந்திக்கலாம் […]
முதல்வரை தாக்கிப் பேசிய டி.ராஜேந்தர் ?
ஆனால் என்ன காரணத்தினாலோ திடீரென்று அதற்கு எந்த எந்த முக்கியத்துவமும் தராமல் இருந்தார்.முன்னாள் முதல்வர் கருணாநிதி முதல்வராக இருந்த போது அவருடன் அரசியல் பிணக்கத்தை ஏற்படுத்திக்கொண்டவர், ஏனோ விஜயகாந்த் மற்றும் சரத்குமார் போல தன்னை தனித்து அடையாளப்படுத்திக்கொள்ள தவறிவிட்டார்.எதுகை மோனையாக தமிழ் மொழியில் சரளமாக பேசுவது கைவரப்பெற்றவருக்கு அரசியல் சற்று காலை வாரிவிட்டதெனலாம். இன்னிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்றைய தமிழ்நாட்டு அரசியல் சூழல் பற்றிய தன்னுடைய கருத்தை பகிர்ந்து கொண்டார். […]
பாராளுமன்றம் மீண்டும் கூடுகிறது! – மஹிந்தவா? ரணிலா பிரதமர்?
நாடாளுமன்றத்தை ஐந்தாம் திகதி மீண்டும் கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இதனை இன்று காலை அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து தெரிவித்துள்ளார். 16ம் திகதிவரையில் நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்தி ஜனாதிபதியால் வர்த்தமானி அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டிருந்த நிலையில் நாடாளுமன்றை முன்கூட்டியே கூட்ட வேண்டும் என நேற்றையதினம் ஜனாதிபதியை சந்தித்த போது சபாநாயகர் கோரிக்கை விடுத்திருந்தார். இதன்படி சபை அமர்வு எதிர்வரும் 5ஆம் திகதி கூட்டப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். […]





