Author: அருள்

மஹிந்தவின் பிரதமர் பதவிக்கு எதிராக மற்றுமொரு மனு

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தமை சட்டத்துக்கு எதிரானது என்று உத்தரவிடுமாறுக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மற்றுமொரு அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனுவினை தம்பர அமில தேரர் தாக்கல் செய்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமித்தமை 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிரானது என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதன் […]

மைத்திரியின் இந்த நிலைக்கு ரணில் செய்த காரியம் அம்பலமானது

கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதியை நாடொன்றுக்கு வழங்கமுடியாதென்ற ஜனாதிபதியின் தீர்மானத்தை ரணில் மறுதலித்திருந்ததாக அமைச்சரவைப் பேச்சாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இதுபோன்ற காரணங்களாலேயே ரணிலை விட்டு அவர் பிரிந்ததாக தயாசிறி ஜெயெசேகர சுட்டிக்காட்டியுள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மா நாட்டின்போதே அவர் மேற்படி கூறினார். ”19 ஆவது திருத்தத்தின்படி பிரதமரை நீக்கவும் அமைச்சரவையை நியமிக்கவும் ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு. கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதியை நாடொன்றுக்கு வழங்க முடியாதென […]

சபாநாயகரின் தந்திரம் அம்பலம்

சபாநாயகர் கருஜயசூரிய, ஹன்சாட் அறிக்கையொன்றை தந்திரமாக தயாரித்தமை தொடர்பில் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டினை பிவித்துரு ஹெல உருமய கொழும்பு மோசடி விசாரணை பணியகத்தில் மேற்கொண்டுள்ளது. கடந்த 14ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஹன்சாட் அறிக்கையை சபாநாயகர் தந்திரமாக தயாரித்துள்ளதாக நேற்று செவ்வாய்க்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிவித்துரு ஹெல உருமயவின் பிரதி தலைவர் மதுமாதவ அரவிந்த தெரிவித்துள்ளார். இதனுடன் கடந்த 14, 15, 16, 19, 21 மற்றும் 23 […]

கொழும்பில் பதற்றம்! விசேட அதிரடிப்படை குவிப்பு

கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலார் ஒருவர் மீது தாக்கத்தல் மேற்கொண்ட புலனாய்வு அதிகாரி பொலிஸாரால் அதிரடியாக கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவிந்திர விஜேகுணரத்ன கொழும்பு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று காலை முன்னிலையானார். காலை 9 மணியளவில் ஆரம்பமான விசாரணை மீண்டும் 2.15 வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நீதிமன்றத்தை விட்டு வெளியேறிய முப்படைகளின் பிரதானியை […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 28.11.2018

மேஷம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்துப் போகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. உழைப்பால் உயரும் நாள். ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்கள் அறிமுக மாவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. வியாபா ரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். […]

தலைவர் பிரபாகரன் வீட்டை சுற்றிவளைத்துள்ள இலங்கை பொலிஸார்

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் இல்லத்தின் முன்னால் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். தலைவர் பிரபாகரன் அவர்களது பிறந்ததினம் இன்று கொண்டாடப்படும் நிலையிலேயே பொலிஸார் இவ்வாறு குவிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை தலைவர் வாழ்ந்த வீட்டையும் வீட்டுச் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக்கும் பணியில் சில இளைஞர்கள் ஈடுபட்டிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆளும் தரப்பு இல்லாமல் கூடிய பாராளுமன்றம்

பாராளுமன்ற அமர்வு சற்று முன்னர் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஆளும் தரப்பினர் ஒருவரும் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இன்றைய அமர்வின் போதும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், செய்திகளை சேகரிப்பதற்காக ஊடகங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்றைய சபை அமர்வில் ஆளும் தரப்பினர் ஒருவரும் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.இன்று காலை இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், தாம் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்ற போவதில்லை என, […]

பொன்சேகா

மைத்திரி கொலை சதிக்கும் எனக்கு தொடர்புமில்லை!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொலை சதி முயற்சிகளுக்கும் தனக்கும் தொடர்புள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவதளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகா இன்று பாராளுமன்றத்தில் கடுமையாக நிராகரித்துள்ளார் சிறிசேனவை கொலை செய்வதற்கான சதி முயற்சிகள் இடம்பெறுகின்றன என்ற தகவலை வெளியிட்ட நாமல்குமார ஒரு புலனாய்வு உத்தியோகத்தர் என தெரிவித்துள்ள சரத்பொன்சேகா ஜனாதிபதி அவரிடமிருந்தே தகவல்களை பெறுகின்றார் எனவும் தெரிவித்துள்ளார் நாமல் குமார தற்போது பொதுஜனபெரமுனவில் இணைந்து தேர்தலில் போட்டியிட முயல்கின்றார் எனவும் […]

பரபரப்படையும் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம்!!

மாவீரர் நாளை ஒட்டி கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல சூழலில் பெருமளவு இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர், புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் தமிழீழ மாவீரர் நாள் வட கிழக்கு மாகாணங்களிலும், புலம்பெயர் நாடுகளிலும் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். இதன்போது அப்பகுதியில் பெருமளவு இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் , […]

Maithripala Sirisena

அனைத்து அமைச்சர்களுக்கும் மைத்திரி விடுத்துள்ள அதிரடி உத்தரவு

அரச நிறுவனங்கள் எதற்குமே இப்பொதைக்கு எந்தவொரு நியமனமும் மேற்கொள்ளவேண்டாம் என்று சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சகல அமைச்சர்களுக்கும் அவசர உத்தரவு பிறப்பித்துளார். இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே ஜனாதிபதி மேற்படி உத்தரவினை வழங்கியுள்ளார். குறித்த அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி, “அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் இதர நிறுவனங்களுக்கு தலைவர்கள் மற்றும் புதிய பணிப்பாளர் சபை நியமனங்கள் இப்போதைக்கு வேண்டாம். இது காபந்து அரசு என்பதை நினைவில் […]