ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில் தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அப்பதவிகளை வகிப்பதற்கு அதிகாரமில்லையென ஐக்கிய தேசிய கட்சியினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான வழக்கு தற்போது மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அதன் 122 உறுப்பினர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனுவே தற்போது விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தற்போதைய அமைச்சரவை ஆகியவற்றுக்கு பதவியில் இருப்பதற்கு சட்டரீதியாக […]
Author: அருள்
இன்றைய ராசிபலன் 30.11.2018
மேஷம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். புது தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். புதுமை படைக்கும் நாள். ரிஷபம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள். மிதுனம்: துணிச்சலாக […]
சோனியா காந்தி சென்னை வரும் தேதி அறிவிப்பு
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் சிலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைக்க ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் இந்த சிலை திறப்பு விழாவிற்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வருவார் என்று கூறப்பட்டது. இருப்பினும் சிலை திறப்பு தேதி முடிவு செய்யமால் இருந்தது. இந்த நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க சோனியா காந்தி சென்னை வரவுள்ளார் என்ற உறுதி செய்யப்பட்ட செய்தி சற்றுமுன் திமுக […]
2.0 எல்லாம் ஒரு படமா…? இப்படி செய்துவிட்டாரே ஷங்கர்!
நீண்ட கால இழுபறிக்கு பின்னர் ரஜினி நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 2.0 படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே வேர லெவலில் இருந்த நிலையில் அவை அனைத்தையும் படம் பூர்த்தி செய்துள்ளது என்றுதான் கூறவேண்டும். செல்போன்களுக்கு எதிராக அக்ஷயகுமார் தொடுக்கும் போரும், அந்த போரில் இருந்து மனிதர்களை காப்பற்ற சிட்டியை தட்டி எழுப்பும் ரஜினிக்கும் இடையே நடக்கும் டெக்னாலஜி போர்தான் இந்த […]
பதறுகிறார் விக்னேஸ்வரன்
தன்னுடைய உயிராபத்திற்கான காரணங்களை முன்வைத்து தனக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பை மீளவும் வழங்க வேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான நீதியரசர் விக்னேஸ்வரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். நேற்று ஜனாபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி அவரது கோரிக்கையை தெரிவித்துள்ளார். வடமாகாண முதலமைச்சராக என்னுடைய பதவிக்காலம் முடிந்ததன் பின்னர் என்னுடைய பிரத்தியேக பொலிஸ் பாதுகாப்பு அலுவலர்கள் தொடர்ந்து எனக்கு பாதுகாப்பு […]
ஜனாதிபதியுடன் எவ்வித முரண்பாடும் இல்லை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் தமக்கும் இடையில் எவ்வித முரண்பாடும் இல்லையென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். அத்தோடு, இருவருக்கு இடையிலும் பரஸ்பர புரிந்துணர்வு உண்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்று வரும் நாடாளுமன்ற அமர்வில், ஆளுந்தரப்பு சார்பில் கலந்துகொண்டிருந்த விஜேதாச ராஜபக்ஷ, ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைக்கு செல்லுமாறு கோரினார். அதற்கு பதிலளித்தபோதே சபாநாயகர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லையென குறிப்பிட்ட சபாநாயகர், […]
மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாரில்லை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாரில்லையென மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) இடம்பெறும் நாடாளுமன்ற அமர்வில் ஆளுந்தரப்பு சார்பாக கலந்துகொண்ட அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். எனினும், அதற்கு தயாரில்லையென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். ஏற்கனவே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் பயனற்று போனதாக குறிப்பிட்ட அநுரகுமார, இனியும் பேச்சுவார்த்தைக்கு தயாரில்லையென குறிப்பிட்டார். […]
கூட்டமைப்பின் இறுதி முடிவு!
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை நம்பிக்கையை பெறக்கூடிய ஒருவரை பிரதமராக நியமிப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அவசர கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் கூட்டமைப்பின் 14 உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர். அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தற்போது பிரதமராக நியமிக்கப்பட்டு இருப்பவர் நாடாளுமன்றத்தில் தமது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத ஒருவராக இருக்கின்றார். அத்துடன் இவருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதனால் இந்த நாட்டில் ஒரு பிரதமரோ, […]
இன்றைய ராசிபலன் 29.11.2018
மேஷம்: புதிய சிந்தனைகள் தோன்றும். பிள்ளைகளின் வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத்தொடங்குவீர்கள். நட்பு வழியில்நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். கனவு நனவாகும் நாள். ரிஷபம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். மகளுக்குநல்ல வரன் அமையும். புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் […]
அமைச்சர்கள் படையுடன் டெல்டாவில் களமிறங்கிய எடப்பாடியார்!!
அமைச்சர்கள் படையுடன் கஜா புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிடச் சென்ற முதலமைச்சர் முழு வீச்சில் பாதிப்புக்குள்ளான பகுதிகளை பார்வையிட்டு வருகிறார். கஜா புயலால் நாகை, திருவாரூர், தூத்துக்குடி, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருச்சி, வேதாரண்யம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் சீரழிந்து போயுள்ளன. லட்சக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. பல்வேறு இடங்களிலிருந்து மக்களுக்கு நிவாரண உதவிகள் அனுப்பப்பட்டு வருகிறது. மின் கம்பங்களை சீர் செய்ய மின் ஊழியர்கள் முழு வீச்சில் செயல்பட்டு […]





